மிகச் சாதாரணமாகத் தோன்றியது
எனக்கு
கால்களை அவள்
அடுப்பினுள் வைத்து
எரித்து கொண்டிருந்தது !
மரங்களும் தோப்புகளும்
நிறைந்தது அவள் ஊர் .
குளங்களில் குருவிகள்
குமைந்திருக்கும்
காங்கிரீட் சாலைகள்
வழுக்கிச் செல்லும்
நகரம் வந்துதான்
விழுங்கியது அவளூரை !
சோறு வெந்ததும்
தலைக்கீழாய்
கவிழ்த்து
விட்டுச் சென்று விடுவாள்
இன்னும்
நிறைய வீடு போகணுமாம்.
Tags
கவிதை