கம்யூனிசம் என்றால் என்ன ? அதை படிக்காத பாமரருக்கும் புரியும் படி எப்படி விளக்குவீர்கள்

மிக பழைய ஒரு நாளில் என்னிடம் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு  ஒரு பிரச்சனையை எடுத்து கொண்டு எப்படி  போராடுவது  என்பதை கொண்டு விளக்கினேன் (https://www.blogger.com/blogger.g?blogID=19063577#editor/target=post;postID=7036707047631764005;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=40;src=postname)

சமூகம் எப்போதுமே ஒரே மாதிரி இருந்து வந்ததில்லை அது பல்வேறு வரலாற்று கட்டங்களை கடந்து வந்துள்ளது.

ஆமாங்க உடனே வரலாறு புவியியல் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள் என  சொல்லலாம்  நீங்கள் இன்று என்ன வேலை பார்க்கிறீர்களோ அது நீங்கள் எடுத்து கொண்ட படிப்பு முயற்சி , பணம் , கல்வி ஆகிய வரலாற்று பின்னனியை கொண்டது இதை மறுக்க  முடியுமா ஆனால் சமூகம் மட்டும் உடனே எப்படி வானத்தில் இருந்து குதிக்குமா?


 ஆக இந்த சமூக அமைப்பை புரிந்து கொள்வதில் மார்க்சியம் எப்படி வெற்றி பெற்றது என்பதை கவனிக்க வேண்டும்.

முதலாளித்துவம் தோன்றி வளர்ந்து வந்த கால கட்டத்தில்தான் முதலாளிகளின் லாபம் உபரி மதிப்பில் இருந்து தோன்றியது என்பதை மார்க்ஸ் கண்டு பிடித்தார் இந்த உபரி மதிப்பு என்பது எல்லா காலகட்டத்திலும் இருந்தது  எப்படி ஐசக் நியூட்டன் வருவதற்கு முன்பும் உபரி மதிப்பு இருந்ததோ அவ்வாறு உபரியை கண்டு பிடித்து அதன் வர்க்க நிலமையை மார்க்ஸ் கணித்து இழப்பதற்கு ஏதுமற்ற ஒரு வர்க்கம் உருவாகி வருவதை கவனித்தார் அவர்களே பாட்டாளிகள் அவர்கள் கையில் ஒரு பொன்னுலகம் தோன்ற போவதை முன் அனுமானித்தார்.


 சரி மீண்டும் கம்யூனிசத்திற்கு வருவோம். கம்யூனிசம் என்றால் என்ன ?  எதையும் வரலாற்று ரீதியில் பார்க்கனும் என்பது கம்யூனிசம் என்று ஒரு பதிலை கொடுத்துள்ளேன் வரலாற்று பொருள் முதல் வாதம் என்கிற தத்துவ கோட்பாட்டின் படி வந்தது இந்த வரலாற்றை உற்று நோக்கும் போக்கு -தொடரும்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post