இந்த நாட்டில் அரசும் அரசுசார்ப்பு ஊடகங்களும் மக்களை மயக்க திட்டமிட்டு சதி செய்கின்றன ஆண்களுக்கு டாஸ்மார்க் பெண்களுக்கு சீரியல் என்று ஒரே மயக்கமும் இன்னொரு பக்கம் கண்ணீரும்தான் .
குவாட்டர் அடித்து குப்புற படுத்துவிடும் மக்கள் தமது சோகங்களுக்கு காரணத்தை சிந்திப்பதில்லை அதை குவார்ட்டர் வடிவில் இருக்கும் அரசு சிந்திக்க விடுவதில்லை இதுதான் இன்றைக்கு பிரதான காரணம் .
ஒரு பக்கம் இவன் குவார்ட்டர் அடிக்க அடிக்க மறுபக்கம் இலவசங்கள் இவனை நோக்கி வருகிறது எனவே இலவசம் வேணடாம் என்று இவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவன் பெற்றே தீரவேண்டும் குடியை இவன் தனது குலதெய்வமாக்கி வைத்துள்ளான் .
அரசு தேர்ந்தெடுக்கும் கலக்டர்களுக்கும் நுண் அறிவு கொழுந்துகளுக்கும் என்னவேலை என்றால் எப்படி மக்களை மயக்குவது என்பதே அதுவே பிரதானமான விசயம்
இப்ப குவார்டரே அரசு வடிவத்தை எடுத்து கொண்டதும் நீங்கள் இனிமேல் குவார்டரை எதிர்த்தும் போராடவேண்டிய சூழலில் உள்ளீர்கள் .
இப்போது மட்டுமல்ல பல நூறு வருடங்களாக இயங்கிய அரசுகள் மது போதையை திட்டமிட்டு ஊட்டி மக்களின் வர்க்க உணர்வை சிதைத்து வந்துள்ளன
குவார்டரில் மூழ்கிய கணவன் , டிவியில் மூழ்கிய மணைவி விடியோ கேம்மில் மூழ்கிவிடும் குழந்தைகள் என சமூகம் தனது இருத்தலை விட்டு பறக்கிறது
எப்போதாவது வரும் தேர்தலும் இவன் கையில் ஒரு குவார்ட்டரையோ பிரியாணி பொட்டலத்தையோ கொடுக்க தவறுவதில்லை
இந்த விசயத்தின் ஒரு வட்டம் இருக்கிறது அந்த வட்டத்தை காண தவறி விட்டீர்கள் என்றால் நீங்கள் எதையுமே காணமுடியாது
அதுதான் போதை வட்டம் பால் விலை உயர்வு , பஸ்கட்டண உயர்வுக்கு போராட வராமல் இருப்பது அடித்தள மக்கள் இந்த இரு போதையால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் மேலும் மேலும் தவறே செய்கிறார்கள்
இதிலிருந்து விடுபட நினைக்கிறார்கள் ஆனால் அந்தோ பரிதாபம் மீண்டும் புதை குழிக்குள் விழுகிறார்கள் எப்படி
ஒருத்தன் டிவி கொடுக்கிறான் என்றால் அடுத்தவன் என்ன கொடுக்கிறான் என்று பார்த்தால் அவன் பெரிய ஆணையை கொடுக்கிறான் அவனுக்கு ஓட்டு போடுகிறார்கள் (ஓட்டு க்கு வாங்கும் காசு உடனடி நிவாரணம் )
ஆணையை கொடுப்பவன் இவங்க அடிமடியில் கைவைக்கிறான் அது மட்டுமில்லை இவர்களை போதையில் வைச்சு உருவுகிறான்
ஆகா இவர்கள் தெளிய விட்டு தெளிய விட்டு அடிக்கப்படுகிறார்கள்
மூன்று விசயம் வரிசை கட்டி நிற்கிறது "போதை , பொழுதுபோக்கு (சீரியல்) ,தேர்தல் "
மூன்றுமே உண்மையை காணவொட்டாமல் இவனை அடிக்கிறது
இந்த உண்மையை தேடித்தேடி அழுக்கும் இடமும் அதே டாஸ்மார்க்குதான்
குவார்ட்டர் என்பதும் பொழுதுபோக்கு என்பதும் தேர்தலின் பின்னே ஒழிந்து கொண்டு அதன் கால்களாக இருக்கிறது
நன்றி வணக்கம்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================