பயத்தின் அரசியலும் அறிவியலும்:


 

பயத்தை வைத்து நிர்மாணிக்கப்படும் எதுவுமே நிரந்தமில்லாதது அதன் அடிவயிற்றில் அறியாமையின் இருளும் இருக்கிறது .

 

அந்தளவில் கூடங்குளம் அணு உலை போராட்டம் என்பது

மக்களின் பயத்தின் அடிப்படையில் கட்டமைத்திருப்பதால்

இந்த போராட்டத்தின் மீது விமர்சனத்தை வைக்கிறேன்

 

மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்த அரசு தெளிவான முறையில் செய்யும் என்றோ மக்கள் அரசை நம்பலாம் என்றோ நான் சத்தியம் செய்யவில்லை

 

ஏனெனில் ஒரு முதலாளித்துவ நலம் பேணும் அரசு மகக்ள் பாதுகாப்பு விசயத்தில் அக்கரை கொள்ளாது அதே நேரத்தில் பாதுகாப்பில்லாமல் தனது மூலதனம் போய்விடவும் அது விடாது என்பதை ஊகிக்கலாம்

 

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பல்வேறு விதமாக சொல்லும் அணு உலை எதிர்ப்பாளர்கள்

 

நாட்டின் மின்சாரத்தேவை அதற்கான மாற்று எரிபொருள் ஆகியவற்றிற்கு சூரிய சக்தியை பரிந்துரைக்கிறார்கள் ஆனால் இந்த தொழில்நுட்பம் இன்னும் வளரும் பருவத்தில் இருப்பதும் அதிக செலவு பிடிப்பதுமாக இருப்பதும் பற்றி பேசினால் அவர்கள் மக்களின் பாதுகாப்பு காரணத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்கள்

 

சரி இன்று உலகில் எத்தனை அணு உலைகள் இருக்கின்றன  440 அதில் மூன்றில் ஒரு பகுதி அமெரிக்காவில் மட்டும் இருக்கிறது அணு உலை தோன்றிய காலம் முதல் இன்றுவரை முக்கிய மான மூன்றுய் விபத்துகளே நடந்துள்ளன

 

 

1.அமெரிக்காவின் பென்சில் வேனியாவுக்கு அருகில் இருக்கும் மூன்று மைல் தீவு 1979

 

2.ருஸ்யாவில் செர்னோபில் 1986

 

3.ஜப்பானில் உள்ள புகுசிமா 2011 மார்ச்

 

 

முதல் விபத்து ஆரம்ப காலகட்டத்தில் நடந்தது இரண்டாம் விபத்தில் இறந்தவர்கள் 57 பேர் மூன்றாம் விபத்தில் இறந்தவர்கள் 10 பேருக்கும் குறைவு

 

சரி நீர் மின்நிலைய விபத்தில்லாததா அனல் மின்சாரம் விபத்தில்லாததா என்றால் மிகப்பெரிய விபத்து நிர் மின்சாரம் எடுக்கும் போது ஏற்பட்டது அதுதான் சீனாவின் 1975 நடந்த விபத்து 1 முக்கால் லட்சம் பேர் இறந்துள்ளார்கள்

 

ஆனால் அணு உலைகளின் மூலம் ஏற்படும் விபத்துகள் மட்டும் ஊதி பெருக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது VVER எனப்படும் தொழில்நுட்ப அணு உலையான இது உலகில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் கொண்டது

 

1. இதில் குளிர்விப்பானாக தண்ணீரே இருக்கிறது கண நீர் இல்லை (H30)

2.எதிர்மறை வெற்றிட குணகம் எதிர்மறை ஆற்றல் குணகம் என்கிற இரு முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டுள்ளது http://en.wikipedia.org/wiki/Void_coefficient

 

 யுரேனியமானது கனத்த பேழைக்குள் வைக்கப்பட்டுளதை போல வைக்கப்பட்டுள்ளது சுற்றிலும் காங்கிரீட் சுவர்களானது இரு பது டன் எடை உள்ள ஒரு ஜெட் விமானம் மோதினாலும் உடையாத அளவு வலிமையுடன் கட்டப்பட்டுள்ளது .

 

3.ஹைட்ரஜனால் தீப்பற்றி விட கூடாது என்பதற்காக

ஹைடிரஜன் ரிகம்பைனர் அணு உலைக்குள் உள்ளது

(http://www.business-standard.com/india/news/hydrogen-recombiners-at-all-20-npc-plants-to-avoid-fukushima/431306/)

4.மேலும் அதிக வெப்பநிலை ஏற்படும் போது தானாகவே குளிர்விக்கும் தானியங்கி வெப்ப நீக்க ஒழுங்கு உள்ளது

(http://en.wikipedia.org/wiki/Passive_nuclear_safety)

 

 

இதை தவிர பாதுகாப்பு குறைபாடுகள் என்பவை எவை என இன்னும் போராடுபவர்களால் சுட்டி காட்டப்படவில்லை

 

செர்னோபில் அணு உலைதான் இதென வாதிடுபவர்கள்

 

செர்னோபில் RBMK என்கிற மாடல் கொண்டது என்பட்தும் கூடங்குளம் VVER  மாடல் என்பதையும் மக்களிடம் மறைக்கிறார்கள்

 

செர்னோபிலில் அணு உலையை சுற்றி காங்கீரீட் சுவர் ஏதுமில்லை

 

இன்னும் பல விசயங்களை முந்தைய பதிவில் சொல்லி விட்டேன்

 

மேலும்

போராட்டம் எல்லாம் சரியானவையா?

 

சிலர் கருதுவது போல எல்லா போராட்டங்களும் சரியானவையாக இருக்கும் எனவே ஒரு கம்யூனிஸ்டு அவற்றை ஆதரிக்கனும் என்கிறா நிலைபாடு தவறானதாகும் எதையும் ஆராயாமல் போராட்டத்தில் குதிப்பது குட்டி பூர்சுவாக்களே தவிர கம்யூனிஸ்டுகள் அல்ல

 

அரசுக்கு ஆதரவளிப்பது சரியா?

 

எக்காலத்தில் நாம் அரசுக்கு ஆதரவளிக்க முடியாது ஆனால் மக்களுக்கு தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்த முடியாது எதிர்மறையில் நமது கருத்துக்கள் அரசின் ஆதரவாக அமைந்து விட்டதை உணர்ந்தே இருக்கிறோம்

 

அரசின் தவறு என்ன?

 

மக்கள் 1.5 கிலோமீட்டருக்குள் இல்லை என சொல்வதும்

அப்துல்கலாம் போன்றாவர்கள் லாரி விபத்தோடு அணு உலை விபத்தை ஒப்பிடிவதும் மிகவும் தவறானது மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து தேவையான நடவடிக்கை எடுகக்வும் அவர்களுக்கு புரியவைக்கவும் வேண்டும்

 

எந்த அடிப்ப்டையில் அணு உலையை ஆதரிக்கலாம்

 

விஞ்ஞான அடிப்படையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவும் என்கிற அடிப்படையில் நாம் அணு உலைகளை ஆதரிக்கலாம் ஆனால் பாதுகாப்பில் சமரசமில்லை

 

முடிவாக விஞ்ஞான பாதையில் சருக்கல்களால் ஏற்பட்ட விபத்துகளை கணக்கிடுபவர்கள் விஞ்ஞான முன்னேற்றத்தின் ஒவ்வொரு கனியையும் சுவைத்து கொண்டே இதை செய்கிறார்கள்

 

நீங்கள் போராடுங்கள் ஆனால் விசயத்தை விளக்கி விட்டு தெளிவுடன் போராடுங்கள் சரியான ஒரு போராட்டத்துக்கு பரிசு எப்போதும் உண்டு



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

41 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post