நாம் பொதுவாக கட்டண உயர்வு என எடுத்து கொள்ளலாம் பால் , பஸ், மின்சாரம் என முன்னே போட்டு கொள்ளலாம்
அம்மாவின் அறிக்கை சொல்கிறது கடந்த பத்தாண்டுகளில் கட்டணம் உயரவில்லை எனவே ஒரு பொதுதுறை நிறுவனம் நட்டத்தில் இயங்கி மூடும் அபாயத்துக்கு வந்துவிட்டது என்கிறார் இது சரியா
இதே ஜெயலலிதா கடந்த வருடம் சொன்னது
"அறிவிக்கப்படாத ஒரு பஸ்கட்டண உயர்வை இந்த கருணாநிதி அரசு கொண்டுவந்துள்ளது அதாவது பாயிண்டு டு பாயிண்டு என்றும் தாழ்தள பேருந்து என்றும் சொல்லி
மக்களிடம் கொள்ளை அடிக்கிறது"
இதன் மூலம் பஸ்கட்டணம் உயரவில்லை என்பது பொய்
இன்னும் என்னென்ன பொய்கள் இருக்கிறது என்பதை பார்போம்.
2001 இல் 19 ரூபாய் டீசல் விலை இன்று 54.95 காசு எனவே கட்டணத்தை ஏற்றாமல் ஒரு கவுருமெண்டு எப்படி நடத்த முடியும் என தினமலர் தினமணியும் கேள்வி கேட்டு மக்களை குழப்புகிறது
இதே காலகட்டத்தில் தனியார் பஸ்கம்பெனிகள் மிக மிக லாபத்தில் இயங்கியது எப்படி அவன் ஒரு பஸ்ஸை வைத்து பத்து பஸ் வாங்கியது எப்படி ?
(இதன் மூலம் தனியாருக்கு கொடுத்துவிட சொல்லவில்லை)
உடனே இந்த கேள்வியை கேட்பார்கள் தனியார் நிறுவனத்தில் கூலி குறைவு ஆனால் பொதுதுறை நிறுவனத்தில் கூலி அதிகம் என்பார்கள் ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கூலி உயர்வு கொடுத்திருந்தால் பேசலாம் இதை ஆனால் அப்படி ஏதும் இல்லையே
அடுத்து ஒரு பஸ்கட்டண நிர்ணயம் என்பது பஸ் கடக்கும் தூரம் அதன் தேய்மான செலவு , எரிபொருள் செலவு, அத்துடன் கூலி ஆகியவற்றை கணக்கிட்டு தான் ஒரு டிக்கெட்டின் விலை என்பது கணக்கிடப்படுகிறது
ஆனால் ஒவ்வொரு பஸ்ஸிலும் 52 சீட்டுக்குமேலே மட்டுமே செல்வதை அனைத்து பேருந்திலும் காணலாம்
இதெல்லாம் அதிக வருமானமே .
இதனால் தனியார் கூலியை குறைத்து கொடுப்பதன் மூலம் லாபமடைவதாக பம்மாத்து பண்ன முடியாது மேலும் தனியார் இதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாரித்தே வந்துள்ளனர்
பொதுதுறை நிறுவனத்தின் ஓட்டை என்பது நிர்வாகத்தில் மலிந்திருக்கும் லஞ்ச லாவண்யத்தால் நடக்கிறது
1.உதிரிபாகங்கள் மாற்றுவதில் கமிசன் மற்று முறைகேடு
2.பாடி கட்டுவதற்கு வழங்கப்படும் கட்டணத்தில் முறைகேடு மற்றும் லஞசம் என
போக்கு வரத்து பொதுதுறை நிறுவனத்தில் எல்லா மட்டத்திலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது இதை நோண்டி பார்க்கவும் தவறுகளை கண்டுபிடிக்கவும் அரசு முயல்வதில்லை ஏனெனில் இந்த அரசின் மந்திரிகளும் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து செய்வதாகும் இது
ஜெயா அரசும் கருணாநிதி அரசும் வேறு வேறல்ல
கட்டண அதிகரிப்புக்கு முன்னாள் ஆட்சி செய்த கட்சியின் மேல் பலியை போடுவது ஒரு செயல்தந்திரமாக இரு கட்சிகளும் செய்துவருவதை மக்கள் கண்டுகொள்ள வேண்டும்
கட்டண உயர்வும் போக்குவரத்து தொழிலாளர்களும்:
இதை போக்குவரத்து தொழிலாளர்கள் வரவேற்கிறார்கள் ஏனெனில் அது அவர்கள் உருவாக்கியவர்களின் தவறாகும்
பொதுஜனத்தின் பணத்தை பிடிங்கினால்தான் தனக்கு கூலி கொடுக்க முடியும் என்கிற பார்வையை தொழிலாளர்களுக்கு கொடுத்ததில் தான் முடிந்தத இந்த சங்களின் கூலி உயர்வு போராட்ட அரைகூவல்கள்
தொழிலாளர்கள் வேறு பொதுமக்கள் வேறு என்கிற எதிரெதிர் நலன் என்பதை உருவாக்க சங்கங்களும்
அரசும் சேர்ந்தே முயற்சி செய்தது
தீபாவளி போனஸ் கோரிக்கையை மக்களின் நலனுக்கு எதிராக போனாலும் பரவாயில்லை என்கிற அடிப்ப்டையில் தீர்மானித்து சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின
அதையே சாக்காக வைத்து எஸ்மா சட்டம் கொண்டுவந்து மக்களுக்கு எதிரானவர்களாக்கி காட்டினார் தொழிலாளர்களை தந்திரமாக ஜெயலலிதா ?
முடிவில் அந்த தொழிலாளர்கள் போராட்டம் தோல்வியுற்றது .
இப்படி பொருளாதார கோரிக்கைகளை மட்டும் வைக்கும் கமிசன் ஏஜெண்டுகளாக செயல்படும்படி லெனின் எக்காலமும் சொல்லவில்லை
சங்கங்கள் என்பன கம்யூனிச பாடசாலைகளாக இருக்கவேண்டும் என்றார்
ஆனால் இவை கமிசன் ஏஜெண்டுகளாக செயல்பட்டமைதான் இப்படி அரசு தரும் புள்ளி விபரங்களை நம்பி இதன் மூலம் கூலி உயர்வு கிடைக்கும் என பஸ்கட்டண உயர்வை ஆதரித்து மகிழ்வதாகும் .
உண்மையில் தொழிலாளர்களும் பஸ்ஸில் பயணிக்கும் பாட்டாளிகளும் எதிரெதிரானவர்கள் அல்ல
எதிரிகள் பெருச்சாளி அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளுமே
ஆக ஊழல் நிறைந்த ஒரு நிர்வாகத்தை அதன் சீர்கேட்டை மூடி மறைத்து மக்களின் மேல் மீண்டும் மீண்டும்
சுமைகளை சுமத்துவதன் மூலம்
தான் ஒரு மக்கள் விரோதி என்பதை ஜெயலலிதா மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்
சங்குகளான போராட்டம்:
எப்போதுமே எல்லா விலையேற்றங்களுக்கு சங்குபூர்வமாக ஒரு போராட்டம் கைது விடுதலை என்பது ஆகிவிட்டது அதை விடுத்து நீண்ட பிரசாரத்தின் மூலம் மக்களுக்கு விளக்கி மக்களின் நம்பிககையை பெற்ற போராட்டங்களின் மூலமே கம்யூனிஸ்டுகள் எதையும் செய்ய முடியும்
தற்போதைய நிலை :
மக்கள் இப்போது யாரை நம்புவது என்கிறா திரிசங்கு நிலையில் இருக்கிறார்கள் அவர்களிடம் விசயங்களை கொண்டு செல்வதன் மூலம் போராட தூண்டுவதே முதலாய கடமை
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================