இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நட்புக்கு

நட்பு என்கிற பாதை அனைவருக்கும் திறந்துதான் இருக்கிறது சிலர் அதில் நடக்கிறார்கள் சிலர் தூரத்தில் இருந்து பார்க்கிறார்கள் என கருதுகிறேன் .

உலகத்தில் அனைத்து உறவுகளும் எதிர்ப்பார்ப்புகளின் பிணைசங்கிலியால் பிணைகப்பட்டுள்ளது ஆனால் நட்பு மட்டுமே ஒரு இரயில் தண்டவாளம் போல இணைகோடுகளாக நீள்கிறது .

உலகத்தில் காதலை கொண்டாடும் அளவுக்கு நட்பை கொண்டாடுவதில்லை என்கிற பெரிய குறை எனக்கு எப்போதுமே இருக்கிறது

நான் அறிந்தவகையில் மிக சிறந்த நண்பர்களாக கோப்பெருஞ்சோழனும் சீத்தலை சாத்தனாரும் போல மார்க்சும் எங்கெல்சும் போல அதீத அன்புமிக்க நட்பை நாம் வரலாற்றில் எங்கும் காணலாம் அந்த நட்பு என்பது நாளுக்கு நாள் அருகிவரும் ஒரு மன உணர்வாகிப்போனதில் எல்லா உணர்வுகளை

போலவே அதுவும் மழுங்கி போவதில் இந்நாளைய சமூக பொருளாதார சூழல் மிகமுக்கிய பங்குவகிக்கிறது நம்மில் பெரும்பாலானோர் நட்பை புரிந்து கொள்ளாமலே நட்பு செய்து நட்பை பிரிகிறோம் என கருதுகிறேன்

/குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.//

இதில் நட்பை போல சம்பாதிக்க தகுந்த பொருள் ஏதேனும் உண்டா என நட்பை பற்றி சிறப்பிக்கிறார் வள்ளுவர் அப்படி சம்பாதிச்சுட்டா நம்மை காக்கு அரண்களில் நட்பை விட பெரிய அரண் ஏதுமில்லை என்கிறார்

பகை முரண்பாட்டுக்கு அழுத்தம் தருவது மேலை மார்க்சியம் நட்பு முடண்பாட்டுக்கு அழுத்தம் தருவது கீழை மார்க்சியம் என கூட பிரிக்கிறார் நாகராசன் அதாவது எதெல்லாம் நட்பு முரண்பாடுன்னு அறிந்து கொண்டாலே எதிரியை வெல்லலாம் என்கிறது மார்க்சியம் .

நட்பு என்பது ஒரு உணர்வு என்பதை கடந்து அது ஒரு கருதுகோளாக அதை ஒரு தத்துவார்த்த குறீயீடாக பயன்படுத்தியவர்களை காணலாம்

நாம் நட்பை பற்றி பேசும் போது அது தனிபட்ட நபர்களின் நட்பை பிரதானமாக உரைக்க புகுந்துவிடுகிறோம் நான் அதற்கு மேலும் நட்பின் கைகள் விரிகிறது என்கிறேன்

ஒரு நாட்டின் உழைப்பாளர்களும் விவசாயிகளும் நட்புசக்திகள் என்றும் ஒரு நாட்டின் உழைக்கும் பெண்களும் மொத்த பெண்களும் கூட நட்பு சக்திகள் என்றும் ஒடுக்கபடும் அனைவரும் நட்பு சக்திகள் என்றும் அதே நேரத்தில் ஒரு நாட்டின் தேசிய முதலாளிகள் கூட நட்புசக்தியாக இருக்கலாம் என்று மாவோ கூறுவது கூட நட்பு சக்தியை நாம் புரிந்துகொள்ள உதவும் குறிகள் என கருதுகிறேன்

எதுவுமே பகையினால் வெல்ல முடியாது ஆனால் நட்பினால் அனுகி புரியவைக்கலாம் ஒரு பெரிய சண்டைக்கு பின் நீங்க நட்பு கரத்தை நீட்ட தயாராக இருக்க வேண்டும் அதற்கான மன அடித்தளம் உங்களிடம் இல்லையெனில் நீங்கள் செய்யும் எந்த பெரிய புரட்சிகர வேலையும் வீண் வேலையே எனலாம்

தமிழ் நாட்டின் இரு பெரிய எதிர்கட்சிகளின் தலைவர்களாக இருந்த பெரியாரும் ராஜாஜியும் அடுத்து கருணாநிதியும் எம்சியாரும் தனிபட்ட முறையில் நண்பர்களாக இருந்தமை ஒரு ஆச்சரியம்

அதைபோன்ற நட்புகளை தற்சமயங்களில் காணுதல் அரிதாகிவிடுகிறது .

நட்பு என்கிற அந்த மெல்லிய தென்ற்லை வீச நமது ஜன்னல்களை திறந்து வைப்போம்

நட்பு என்பது மதம் கடந்தது மொழி கடந்தது சாதிகடந்தது இன்னும் சொல்லப்போனால் வர்க்க வேறுபாடும் கடந்து சமூகத்தில் உண்மையான நட்பு நில சமூக பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்

நட்பு என்பது எதோ சமூகத்தின் வாழ்நிலையை சாராமல் தனியே விளங்குவதல்ல ? சமூகத்தின் சாராசமான விளை பொருளே நட்பு

பண்ட உற்பத்தி சமூகத்தில் நீங்கள் உண்மையான நட்பை தேடுவதும் . அதற்கு உதாரணங்களை காட்டுவதும் வீண்வேலை ஏனெனில் தனிபட்ட உதாரணங்கள் சமூகத்தை பிரதிபலிக்காது தனிநபர்களின் மாறுதல் ஒப்பீட்டளவில் பெரிய மாறுதல்களை சமூகத்தில் உருவாக்கவும் செய்யாது .

சமூகத்தின் பொருளாதார உற்பத்தில் மாறுதலே தலையாயது எனவே அதற்கான போராட்டத்தை தொடர்வோம் ஏனெனில் உயர்ந்த நட்பு நாம் அனைவரும் பெற்றாக வேண்டும்

வாழ்க நட்பு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post