கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த ஊழல் , லஞ்சம் தமிழின துரோகம் இவற்றை மூடி மறைக்க தற்போது கலைஞருக்கு கிடைத்த ஒரே தாரக மந்திரம் சமச்சீர் கல்வி .
இந்தியாவில் புதியஜனநாயக புரட்சி , பார்பனிய எதிர்ப்புமற்றும் தனியார் மயம் தாராளமய எதிர்ப்பு என்கிற ஒரே பார்முலா படி இயங்கும் மக இகவுக்கு கிடைத்த அரசியல்
காரணம் சமச்சீர் கல்வி அதற்கு மேல் சமச்சீர் கல்வியை பற்றியோ உண்மையில்
கல்வியில் நடைபெற வேண்டிய மாறுதல்கள் குறித்தோ எந்த அக்கரையும் இருக்கவில்லை இருக்க போவதுமில்லை கலைஞருக்கு சமச்சீர் கமிட்டி சொன்ன 109 பரிந்துரைகளை நிறைவேற்ற ஏன் மனமில்லை என்பதோ மக இகவுக்கு தேவையற்ற விசயங்கள் ஏனெனில்
தனியாரை எதிர்த்தாலே கல்வி சீராகிவிடும் என்கிற குறுக்கு ஐடியா எனவே அரசு பள்ளிகளின் கல்வி தரத்தின் மீதான அக்கரை இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை எப்படி தமிழ் இசையை வளர்க்கவும் அதற்கான முயற்சிக்கும் மேலாக கர்நாடக இசையை எதிர்க்கும்
அரசியல் மட்டுமே வேண்டுமோ அதை போலத்தான் இதுவும் இதற்கிடையில் ஒன்றை கவனிக்க வேண்டும் கருணாநிதிக்கு தனது சொந்த மக்களை காக்க துரும்பை கூட அசைக்காத கருணாநிதிக்கு ஜெயாவை வந்து சந்தித்து விட்டு சென்ற பிந்தான் அமெரிக்காவின் பொருளாதார தடை என்கிற ஒரு சின்ன விசயமாவது நடந்துள்ளது என்பதை
வசதியாக மறக்கவும்
அநீதியாக எழுதி வாங்கப்பட்ட பல நூறு வீடுகளின் மேலான வழக்குகளால் தங்களது கட்சிகாரர்கள் திக்கு முக்காடுவதை மூடி மறைக்கவும் ஒரு கருவியாக சமச்சீர் கல்வியை அமுல்படுத்து என்கிற கோரிக்கை இருக்கிறதே ஒழிய உண்மையான அக்கரை எல்லாம் மாணவர்கள் மீது அல்லது தமிழ் மக்களின் மீது இல்லை
இதே கருணாநிதிதான் ஈழத்தில் மக்கள் கொல்லப்படும் போது அதை தடுக்க நடந்த மாணவர் போராட்டங்களை ஒடுக்கியவர் என்பதும் இதே மக இகதான் இந்த கருணாநிதியை ஈழமக்களின்
நலனுக்கு எதிராக நின்று தங்களால் விமர்சிக்கப்பட்டவர் என்பதும் நன்றாக தெரியும் அந்த கருணாநிதியின் ஊழல்கள் பல வெளிவரும்போதும் அதை குறித்த கட்டுரைகளை வினவிலோ அல்லது புதியஜனநாயகத்திலோ எழுதாமல் தவிர்பதும் சமச்சீர் கல்வியின் உண்மை அரசியல் காரணங்களை மழுப்பி அதை ஒரு புரட்சிகர செயலாக்கம் மாதிரி சித்தரித்து போராடவும் முடிகிறது
மக்களின் வாழ்க்கைக்கு இயக்கவியல் ரீதியாக பயன்படக்கூடிய விசயங்களை செயல்படுத்தும் போராட்டங்களை வடிவமைக்காமல் வாழ்நிலைக்கும் அரசியலுக்கும் இடைவெளி ஏற்படுத்தும் போராட்டங்களை செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து மேலும் மேலும் அந்நியபட்டு போவதும் தனது சொந்த அரசியல் முரண்பாட்டில் சிக்கி கொள்வதும் தவிர்க்க முடியாத விசயங்களே இவ்வாறு தான் ஒரு புரட்சிகர கட்சி என சொல்லிகொண்டே அதற்கெதிரான வேலைகளை செய்கிறது மக இக
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================