எது இலக்கியம் -புதிய கலாசார கட்டுரைக்கு பதில்

வினவுல வந்த புக கட்டுரை http://www.vinavu.com/2010/08/05/literature-politics/
எது இலக்கியம் என்பதில்


நடப்பில் இருக்கும் உலகின் உணர்ச்சிகள் அற்பதனம் வாய்ந்தவை அதை அறுத்தெறிவதில் தோன்றும் புதிய உணர்ச்சிகளே உண்மையானதுன்னு சும்மா அற்புதமா கட்டுரை ஆரம்பிச்சு இருக்கார் இந்த முகம் தெரியாத தோழர் அவர் மீது நாம் இரக்கப்படலாம். அறிவு வேலை செய்யும் இடத்தில் உணர்ச்சிகள் மங்கி போய்விடுகின்றன என்கிறார் மதுரையை சேர்ந்த காரல்மார்க்ஸ் அதற்கு பதில் இடும் புதிய கலாசாரம் சொல்கிறது
//ஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் "ஈரத்தையும், உணர்வையும்' வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.//

பிரச்சனை பழைய அறிவா பழைய உணர்வா அறிவு என்பதையும் உணர்வு என்பதையும் இந்த தோழர் ஒரே பானைக்குள் விட்டு ஆட்டுகிறார்.
இந்த பழைய சமூகம் தவறான மதிப்பீடுகள் கொண்டதுதான் அதன் அறிவு
கண்டிசண்டுதான் (வரையறைக்கு உட்பட்டதுதான்) ஆனால் அதன் உணர்வு அப்படி வரையறைக்கு உட்பட்டதா அப்படி வரையறை உட்படாத உணர்வு எப்போது வரும் ?


இந்த சமூகத்தை புரிந்து கொண்டால் வேறு உணர்வு வந்துவிடுமாம் ........

ரைட்டு தெளிவா சொல்லபோனால் ,ஒரு தாய் தன் மகன் மேல் வைத்து இருக்கும் அன்பு "

ஒரு மகன் தன் பெற்றோர் மேல் வைத்து இருக்கும் அன்பு இந்த உணர்ச்சி அறிவின் மூலம் தெளிந்து பெற்றதா?

இந்த இயல்புணர்ச்சி புரட்சிகர கருத்து வந்தவுடன் மாறிவிடுகின்றதா இல்லையே ?

(நோட் திஸ் பாயிண்டு யுவர் ஆனர்)


அடுத்த பாயிண்டு என்ன பெரிய இலக்கியம் தஞ்சை விவசாயிக்கு தெரியும் எலிகறி சாப்பிடும்
வடநாட்டு விவசாயின் கவலை அந்த கொடூரம் இதற்கு பெரிசா இலக்கியம் தேவை இல்லைன்னு

இவர்களின் நோக்கம் சிறந்த இலக்கியம் படைக்கவேண்டும் என்பதிலிருந்து எப்பவோ
மாறிவிட்டது (எனது பழைய கட்டுரை படிக்கவும்)

இலக்கியத்தின் பல்வேறு வளர்சியை புறக்கணிக்கும் இவர்கள் சோசலிச எதார்த்த வாதம்
மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியம் என்கிறார்கள் அதிலேயே தங்கி முத்தெடுக்க
நினைக்கிறார்கள்

விவசாயி தற்கொலை காரணம் அரசின் நிலைபாரு

இதை படிப்பவனுக்கு ஒரு பெரிய தாக்கம் வரவே வராது

இதை ஒரு நாடகமாக ஒரு கதையாக நெஞ்சை தொடும் நிகழ்வுகளோடு
சொல்லும்போது .. ஒரு நல்ல இலக்கியமாக இதே விசயத்தை மலர செய்யும்போது

ஏன் தஞ்சை விவசாயிக்கு பிடிக்காமல் போகுமா? அப்படி சொல்லலாமா
அல்லது சொல்ல முடியவில்லை என்பதை சொல்ல தேவை இல்லை
என்கிறீர்களா?

கூலி விவசாயியாக சமூகத்தில் கொண்டிருக்கும் உற்பத்தி உறவே
அந்த உணர்ச்சியை கொண்டு வந்துவிடுமாம்

தமிழன் கொல்லப்பட்டானே அந்த உணர்ச்சியை எத்தனை துண்டு பிரசுரங்கள்
போட்டும் இங்குள்ள தமிழனுக்கு ஏன் கொண்டுவர முடியவில்லை
தோழரே

தமிழன் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு தன்னைபோல ஒரு தமிழன்
கொல்லப்படும்போது ஏன் வலிக்கவில்லை உணரவில்லை

அதை வெளிப்படுத்திய மக்கள் தொலைக்காட்சி கதையுடன் காட்சி படிமங்களாக
வெளியிட்டதை இலங்கை அரசு ஏன் தடை செய்ய வேண்டும்

இதை பார்த்து மற்ற தமிழன் கொந்தளிப்பான் என்றுதானே !

இந்த லோகத்தில் இலக்கியம் ஒரு பைசாவுக்கு லாயக்கு இல்லைன்னா
மார்க்சிம் கார்க்கி எழுதிய தாயை நாவலும் பைசாவுக்கு உதவாதுன்னு சொல்லலாமா?


//
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.//

அவரு உணர்வுன்னுதான் சொன்னாரு - நீங்க அதை சுயநலம் சார்ந்த உறவுன்னு வகைபடுத்துறீங்க

சரி , அதென்ன சுயநலம் சார்ந்த உணர்வு பரிவு என்பது பாசம் என்பது சுயநலம் சார்ந்ததா

அதே பரிவு பொதுவில் வேலை செய்யாதா? பரிவு நின்று " திஸ் அப்ளிகேசன் நாட் பவுண்டு" அப்படின்னு

ரோட்டில் அடிபட்டு கிடப்பவனை பார்த்ததும் பொது பரிவுன்னு ஒன்னு முளைக்குமா?

(நோட் திஸ் பாயிண்டு யுவர் ஆனர்)

//
வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது.
//

வெளிநாட்டுக்கு போக அனுமதிக்கும் தாய் பொய்யான பாசக்காரர் , புரட்சிகர இயக்கத்துக்கு அனுமதிக்கும் தாய் உண்மை பாசக்காரர் (நல்லா சொல்றீங்க)


இதில் போலி தாய் பாசம் இல்லை தோழர் - அந்த தாயை பொறுத்தவரை தன் மகனை இழக்க மறுக்கும் அன்பு போலி அல்ல

மகனுக்கு சமூகம் பெரிசென்றால் அவளுக்கு மகன் பெரிசல்லவா
இப்படி பாசத்தை வகை படுத்தினால் ----------------என்ன மிஞ்சும்

ஒன்றும் இல்லை

சமூக அக்கறை என்பது தாயின் பாசத்தை வென்று அவரை மறந்து கூட இயங்கும்
வெடிகுண்டை வெடிக்க செய்து இறந்த பல புலி தோழர்களும் தாய் பாசத்தினால்
சமூகத்திற்கு போராட வந்தார்கள் ..

தன் தாயை கொன்றவனை கொல்ல அதில் சமூகமும் அடங்கி கிடக்கிறது

தான் தன் குடும்பம் என சிந்திப்பவன் இல்லை இந்த சமூக முழுக்க மாற்றினால்தான் தானும் தன் குடும்பமும் நிம்மதியாக வாழ முடியும்னு நினைக்க துவங்கும் போது

தன் குடும்பத்தின் பாசத்தை கைகழுவி விடுவதில்லை மாறாக குடும்ப பாசம் ஆரம்ப புள்ளி


நிறைய பேசலாம் புதிய உணர்சிகளை பற்றி பேசுகிறீர்கள் உங்களின் புதிய உணர்ச்சிகள் என்னவென விவாதிக்கலாம்.............

இரவு வணக்கம்


//
ஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.

//

இலக்கியத்தில் இருந்து உணர்வு பிறக்காது மாறாக இலக்கியம் உணர்வை பிரதிபலிக்கும் கண்ணாடி

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post