வினவின் ஓட்டை பஞ்சாயத்தும் சாந்தி வைக்க சொல்லும் கேமிராவும்

வினவின் ஓட்டை பஞ்சாயத்தும் சாந்தி வைக்க சொல்லும் கேமிராவும்


வினவு அண்ணனிடம் கேட்க பல கேள்விகள் இருக்கு -ஆனால்
வினவு அண்ணன் பதில் சொல்வதில்லை

ஆமாங்க அழகிரி எதுக்காவது பதில் சொல்லி இருக்காரா ?
அவரு அஞ்சா நெஞ்சன் அதேமாதிரிதான் வினவும்
திருவிளையாடல் தருமி பாணியில கேள்வி மட்டும்தான் கேட்பார்

"பாருங்கள் சாந்திக்கு நடந்த அநீதி " என்றார்
ஓடினோம் வினவின் ஒளியில் தேடினோம் சாந்திக்கு
அநியாயம் நடந்தாதான்னு .

ஒரு பத்தியை எடுத்து போட்டிருந்தார் சாந்தி ஆனால் அதை எழுதியவர்கள் சொன்னார்கள் ஆமாம் புனைவு அதிலும் உங்களை அக்கா ஸ்தானத்தை விட்டு இறக்காத புனைவுன்ன்னு கேட்டாரா சாந்தி ?.

நீ என்னடா என்னை அக்கா என சொல்வது ,கொதித்து எழுந்தார் இன்னும் பிரபலமாகு இன்னும் பிரபலமாகுன்னு தீ அவருக்குள் கொழுந்து விட்டு எரிய எழுதினார் அதிர்ச்சியானோம்
"காமிரா வைக்காவா ? எனது குளியலறையில் எனது உடைமாட்டும் அறையில் "என்றார்
ஐயகோ புனைவு எழுதினவன் துண்டைகாணோம்னு ஓடிட்டான்
சாந்தி உங்களுக்கு தகுமான்னு கெஞ்சினோம் இதென்ன பதிலடின்னு கேட்டோம்

அப்பவும் அண்ணன் வினவு கம்முனுதான் இருந்தார் அவரு காரல்மார்க்ஸ் புத்தகத்தில் பயனுள்ள பக்கங்களில் சாந்திக்கு ஆதரவான பக்கம் இருக்கிறதான்னு தேடி கொண்டு இருக்கலாம் !.

இப்போ மட்டுமல்ல அபி அப்பாவின் பேரில் அவதூறு கிளப்பிய போதும்
அண்ணன் அமைதியாத்தான் இருந்தார்

அவருக்கென்ன ஏழை பங்காளன் மெதுவாத்தான் அபி அப்பாவின் பெயரை தூக்கினார்

"யோவ் அறிவு இருக்கா எந்த பஞ்சாயத்து தலைவராவது தப்பு செய்தா ஒத்துகுவானா?"
-அசரிரீ

இல்லையே நாங்க அவர்கள் மக்களின் பிரதிநிதிகள்னு சொல்லியில்ல வாதாடி வருகிறோம்
ஆனா இவர் அண்ணன் அழகிரியை விட பெரிய ஆளா இருக்காரே ?

அண்ணே வினவன்ணே உங்களுக்கு ஒரு பாட்டு போடவா


"அப்படி வர்றாரு வர்றாரு நம்ம
வினவு அண்ணன்

நாடே போற்றும் போராளி இவரு
இவர போல தலைவரு எவரு

வர்றாரு வர்றாரு நம்ம
வினவு அண்ணன்"

(வாஜ்பாயிக்கு மக இக சார்பில் எழுதபட்ட
பாட்டின் சாயலில் வாசிக்கவும்)

(முகிலன் மற்றும் அரவிந்துக்கு -வினவு சொன்னதும் உங்களின் மேல் சந்தேகப்பட்டோம்
சாந்தி வந்து தீர்த்து வச்சுடாங்க உங்களை எங்கள் பதிவுகளில் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பீர்களாக)


தவறை தட்டிகேட்பவன் மட்டுமல்ல
தவறினால் மன்னிப்பு கேட்பவனுந்தான் -தோழன்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

11 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post