முரண்பாடு

உடல் உழைப்பும் மூளை உழைப்பும்

ஒரு கிராமத்தில குப்புசாமியும் சோமுவும் இருந்தாங்க குப்பு ஒர் மூட்டை தூக்கி
சோமு ஒரு கணக்கன் .

குப்புசாமிக்கு எப்பவும் தான் மூட்டை தூக்கலன்னா சோமுவுக்கு வேலை இல்லைன்னு நினனப்பு

சோமுவுக்கு தான் இல்லை என்றால் குப்பு சாமிக்கு வேலையே இல்லைன்னு
நினைப்பு  ,இரண்டு பேருக்கும் ஒரு முதலாளி இருந்தார்.

அவர் சில நேரம் குப்புசாமிகிட்ட கெஞ்சி பேசுவார் பல நேரத்தில சோமுகிட்ட  ,

இரண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடுமாதிரியே பேசுவார் .

"ஏப்பா சோமு கேட்டா சொல்ல மாட்டியா அவன் கணக்கில கோட்டை விட்டா என்ன
செய்வ " 

" ஏப்பா குப்புவை அனுசரிச்சு போ அவன் மாதிரி ஒரு மூட்டைய தூக்க முடியுமா உன்னால "

இப்படி இரண்டு பேரையும் வேலை வாங்குவார்  ஒரு நாள் சோமு கணக்கில் தப்பு செய்துட்டான்னு
வேலையை விட்டு தூக்கிட்டார் .

என்னதான் சண்டை போட்டாலும்  குப்புவுக்கு சோமுவ தூக்கியது மனசு  ஆறல

குப்புவும் கொஞ்ச நாள்ல வேலைய விட்டு  நின்னுட்டான் .

சோமு கூட தண்ணி அடிக்கையில சொன்னான்  "இத்தனை நாள் உன்னை தப்பா புரிஞ்சுட்டேன் மன்னிச்சுடுன்னு "

இரண்டு பேரும் சேர்ந்து ஒரு மண்டி ஆரம்பிச்சாங்க  அதில கணக்காளனும் , மூட்டை தூக்கியும்
சண்டை போட்டுக்கிறாங்க   ஏன்னு தெரியலைங்க !.

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post