காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு உண்மையா?

நம்ம தோழர்கள் காந்தியயயும் காங்கிரசையும் துரோக கும்பல்னு சொல்லி ஊரு பூரா பேசிகிட்டு திரியுறாங்க அதை என்னவென பார்ப்போம் நாட்டுக்காக தனது வேலையை விட்டு நூல் நூற்றி அரை ஆடைத்தரித்து ஆசிரம் கட்டி வாழ்ந்து மறைந்த ஒரு தலைவரை துரோகின்னு சொல்லும் பாயிண்டுகள் ரொம்ப வீக்கா இருக்கும் இதன் மூலம் இவர்களின் நோக்கம் நமக்கு யோசிக்க வைக்கிறது
//காந்தியைக் கொன்றவன் ஒரு இந்துமதவெறியன்; ஆகவே, காந்தி ஒரு மதச்சார்பற்றவராக இந்துமதவெறி எதிர்ப்பாளராக இருந்திருக்க வேண்டும்" என்று போலி கம்யூனிஸ்டுகள் பரப்பும் கருத்தும் உண்மையல்ல. பாகிஸ்தான் உருவானதே மத அடிப்படையில் நாடு பிளவுண்டதற்கே காரணம் காந்திய காங்கிரசின் இந்துமதவாத அணுகுமுறைதான் காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. காந்தி அடிப்படையில் பார்ப்பன பனியா கும்பலின் பிரதிநிதியாகவே செயல்பட்டார் என்பதை அம்பேத்கர், பெரியார் போன்ற ச மூக சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினர். இந்துமதவாதி காந்தியின் நயவஞ்சக துரோகமயமான அணுகுமுறை, இராம இராஜ்ஜியத்தை தாமதமாகக் கொண்டு வரும் எனப் பொறுமையை இழந்ததாலேதான் கோட்சேக்கள் ஆத்திரமுற்றனர்.//

பல முரண்பாடுகள் நிறைந்தது இந்த கட்டுரை

அம்பேத்கர் காந்தியை எதிர்ததற்கும் இந்து மத வெறியன் காந்தியை கொன்றதற்கும்
ஒரே காரணம் இல்லை அப்போ வேறு காரணம் இருக்கிறது

இந்து மத அணுகுமுறைன்னு சொன்னால் என்ன அணுகுமுறைன்னு சொல்லனும்

காந்தி தன்னளவில் இந்து மதத்தை க்டைபிடித்தாலும் மத வேறு பாடு காட்டுவதை எதிர்த்தார் .

முழு அளவில் இந்த்துத்வாவை ஆதரிக்காததால் இந்து மதவெறியன் போட்டு தள்ளினான் பெரியார் முழுக்க முழுக்க இந்து மதத்தை தூக்கி எறிந்தார் ஏன் ஜாதி வேறுபாடுதான் காரணம் அப்படி ஒரு மதத்தை தூக்கி எறிய கூடாது அதன் பாதகமான அம்சங்களை மாற்றிவிடலாம் என சொன்னார் காந்தி.

இந்து மதத்தை அழித்துவிட்டால் எல்லா பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்னு சொல்லிட்டு திரியிற இவங்களுக்கு
மதம் என்பது ஒரு கான்செப்டுதான் அதில் குறைகள் இருந்தால் மாற்றலாம் என்பது கூட பகல் கனவாக தோன்றுகிறது


இதனாலேயே மக இகவிக்கு காந்தி இந்துமத வெறியராக தெரிகிறார்

காந்தியை பற்றி ஒரு மூன்று குற்றச்சாட்டுக்கு ஜெயமோகனின் பதில் இணைக்கப்பட்டுள்ளது

ஜெ மோகனின் பதிலில் எனக்கு உடன் பாடில்லா விட்டாலும் வாசிக்க தருகிறேன்

சுட்டி :
http://www.jeyamohan.in/?p=2773


/இந்து மதத்தின் ஒரு பிரிவெனக் கூறப்படும் வைணவத்தின் மூ லமாகவே உலகைக் கண்டவர். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்களோ, எல்லா இந்துமதப் பிரிவுகளையும் ஏற்பவர்கள். காந்தி காங்கிரசு கும்பலுக்கும், ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலுக்கும் இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதில், அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு உள்ளது. சாரம் ஒன்றுதான்.//

காந்தி வைணவம் , மற்றவர்கள் சைவம் என சொல்லி அதனால் இவரை
போட்டு தள்ளிட்டாங்கன்னு சொல்லமுடியாம் இப்படி சொல்றாங்க அவ்ளோதான்

காந்தியை சுட்டு கொன்றது கோட்பாட்டு ரீதியா அல்ல அவர் முஸ்லீம்களை
கொல்ல உடந்தையா இல்லை என்ற காரணத்தினால்தான்


//குஜராத்தில் இருந்து இசுலாமியர்களைப் பூண்டோடு ஒழிக்கும் கொலைவெறியாட்டம் நடத்தியபோது “காந்தி பிறந்த மண்ணில் இப்படி ஒரு கொடூரமா!” என்று பத்தாம் பசலிகள் பலர் அதிர்ச்சி காட்டினர். “காங்கிரசு இரவிலே செய்ததை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர் பகலிலேயே செய்கிறார்கள்” என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார். ஆம். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலின் அணுகுமுறை பகிரங்கமான பாசிச கொலைவெறி. காந்திய காங்கிரசின் அணுகுமுறையோ நயவஞ்சகம் துரோகம்.//

காங்கிரஸ் அதுவும் இப்போ இருக்கும் பெரிசாளி காங்கிரசும் அப்போ இருந்த
காங்கிரசும் ஒன்றுன்னு ஒரு திரி விடுறாங்க அப்போ இருந்தது துரோக காங்கிரஸ் என்றால் ஏன் மக்கள் கம்யூனிஸ்டுகள் பின்னால் வராம காங்கிரஸ் பின்னால
காந்தி பின்னால போனாங்க காந்தி எதாவது வசியம் வச்சுட்டாரா என்ன?


//“காந்தியைக் கொன்றவன் ஒரு இந்துமதவெறியன்; ஆகவே, காந்தி ஒரு மதச்சார்பற்றவராக இந்துமதவெறி எதிர்ப்பாளராக இருந்திருக்க வேண்டும்” என்று போலி கம்யூனிஸ்டுகள் பரப்பும் கருத்தும் உண்மையல்ல. பாகிஸ்தான் உருவானதே மத அடிப்படையில் நாடு பிளவுண்டதற்கே காரணம் காந்திய காங்கிரசின் இந்துமதவாத அணுகுமுறைதான் காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. காந்தி அடிப்படையில் பார்ப்பன பனியா கும்பலின் பிரதிநிதியாகவே செயல்பட்டார் என்பதை அம்பேத்கர், பெரியார் போன்ற ச மூக சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினர். இந்துமதவாதி காந்தியின் நயவஞ்சக துரோகமயமான அணுகுமுறை, இராம இராஜ்ஜியத்தை தாமதமாகக் கொண்டு வரும் எனப் பொறுமையை இழந்ததாலேதான் கோட்சேக்கள் ஆத்திரமுற்றனர்.//

பார்பன பனியா கும்பல் எல்லாம் அப்போது அரசாங்க ஆதரவா திரண்டு நின்றாங்க அதெப்படி காந்தி அவங்களுக்கு ஆதரவா அதுவும் இந்து சுயராஜ்ஜியம் வேண்டுமென்று போர்கொடு தூக்கி இருப்பார்



//காந்திய காங்கிரசும் சரி, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலும் சரி நாட்டுப்பற்று தேசபக்தியில் வெவ்வேறு அளவுகளில் இந்துமதவாத நஞ்சு கலந்தார்கள். அவர்கள் அன்றும் இன்றும் பேசியதெல்லாம் சுதேசி; செய்ததெல்லாம் விதேசி ஊழியம் அல்லது ஏகாதிபத்தியத் தொண்டு. ஒருபுறம் சுதேசி இயக்கம் என்கிற பெயரில் நாடகமாடிக் கொண்டே, மறுபுறம் தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை மூ லம் நாடு மறுகாலனியாக்கப்படுகிறது. காந்திய காங்கிரசால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மறுகாலனியாக்கம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலால் தீவிரமாக அமலாக்கப்படுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு ஊழியம் செய்யும் இவர்களது கொள்கையில் நாடே பஞ்சபூமியாகி கஞ்சித் தொட்டிகளும் பட்டினிச் சாவுகளும் நடப்பாகிவிட்டன.//

அதென்ன சுதேசி இயக்கம் என்ற நாடகம் சொந்த நாட்டுல உற்பத்தி செய்த கதரை
கட்டுங்கள் என சொன்னது துரோகமா?
அப்படின்னா நீங்க தனியார்மயம் தாராளமயம் உலக மயத்தை எதிர்க்கவில்லை
ஆதரிக்கிறீங்கன்னு அர்த்தம்!
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

20 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post