அன்பு அதிகாரம் சமூகம்

இப்போதெல்லாம் அன்பு என்பது எல்லாராலும் உச்சரிக்கப்படுகிறது
அன்பு என்ற உணர்வு எல்லா இடத்திலும் விசயங்களிலும் செல்லுபடியாகும்
என்ற கருத்து உருவாக்கப்படுகிற்து .

அன்போடு பேசு உண்மையாக நட  நல்லது நடக்கும்
என்ற அறிவுரைகள் பாதி உண்மையாகவும் சூழ்நிலையின்
வாழ்க்கை போக்கின் வேகத்தில் அடித்து செல்லப்படும்
வெறும் காகித கூற்றாகவும் உணர்வீர்கள் .

பிற உயிர்களையும் தன் உயிர்போல நேசி என்பது சமூக பொருளாதார
காரணங்களுக்கு உட்பட்டதுதான் என்பதை சொல்லாமல்
வெறும் அறிவுரைகள் மனிதனின் வாழ்க்கை போக்கை எக்காரணம்
கொண்டும் மாற்றாது அதிகாரத்தின் தன்மையை மாற்றாமல்
அன்பு செல்லுபடியாகாது அதிகாரம் எந்தளவுக்கு வலுவாக
வன்முறையாக உள்ளதோ அங்கே அன்புக்கு கொஞ்சமும் வேலை
இல்லாமல் போகிறது .

மனித இயல்பை மாற்றுவதில் சமூகம் பெரும்பங்கு இடத்தை வகிக்கும்
போது மனித இயல்பை மாற்றுவதில் மதம் அற நிறுவன்ங்கள் குறிப்பிட்ட
பங்காற்றுகின்றன.

மதம் என்பது ஒரு போதை என மதத்தை முற்றிலுமாக தூக்கி எறிந்தார்
மார்க்ஸ் .அது உண்மைதான் மதம் ஒரு போதைக்கு மனிதனை உட்படுத்துகிறது
ஆனால் மதம் போதித்த ஒழுக்க கோட்பாடுகள் மனித மனதின்
ஆழமாக பதிந்து கிடப்பதை மறுக்க முடியுமா?

அதே நேரம் மதத்தின் பாதிப்பான கூறுகளும் வழிவழியாக மனிதனை
பிற்போக்காளனாக்கி விடுகிறது.

மதங்கள் அன்பை போதிப்பதற்கு பதில் அதிகாரபீடங்களாக அமரும்போது
அரசியல் பிரச்சனையாகிறது .

விசயத்துக்கு வருவோம் அன்பு என்ற பதம் உங்களுக்கு என்ன விளக்குகிறது
என்பதை நாள்தோறும் தொலைக்காட்சிகளில் பேசும் நபர்கள் ,ஆன்மீக
உரையாளர்கள் அன்பை பல்வேறுவிதமாக விளக்கி விளக்கி அந்த வார்த்தை
அர்த்தமற்ற ஒரு வார்த்தையாக மொழியில் தேங்கி விட்ட்து.

அன்பு எந்த சார்பும் அற்றதென சொன்னால் அடிக்க வருவார்கள் போல
முதலாளி தொழிலாளியிடம் எப்படி அன்பு காட்டுவான் .
குறைந்த பச்சம் மனித நேயமாவது காட்ட சொல்லி அவனிடம்
கெஞ்சவேண்டியதாக இருக்கிறது .

அறமதிப்பீடுகள் அனைவருக்கும் பொதுவானதல்ல என்ற உண்மை
நீங்கள் வாழ்க்கை பாதையில் நச்சென்று தலையில் அடித்து
சொல்லப்படும் போது உணரலாம் .

வசதி குறைந்த சொந்த காரன் வசதியான சொந்த காரன் வீட்டுக்கு
போகும்போது செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்
நல்விருந்து வானதவர்க்கு என்ற குறள் பொய்யாவதை காணலாம்.

சமூக பொருளாதாரா அதிகார காரணங்களை தாண்டி இங்கு உணர்வுகள்
இயங்குவதாக கற்பனை செய்வது ஒரு அருமையான உரையாற்ற
போதுமானதாக இருக்கலாம் ஆனால் உண்மை அப்படி அல்ல

சரி எப்போது உண்மையான அன்பு பிறகும் எப்போது உண்மையான
அதிகாரம் புரிந்துகொள்ளப்பட்ட அதிகாரம் பிறக்கும் என்ற கேள்விக்கு
ச்சம்பந்தம் உடையது என நான் நினைக்கிறேன்.
அதிக்காரம் சமத்துவம் உடையதாக இருக்க சமூகம் நிலையின் பொருளாதார
நிலையில் நிலவும் பாரபச்சமான நிலை மாறனும் என நினைக்கிறேன்

மாறாக அன்பு மட்டும் பேசப்படும் பொருள் அல்ல அதிகாரத்தை தவிர்த்து

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post