ஆபிஸ் ஒன்நோட்டை யார் எப்படி பயன்படுத்துகிறீகள் என
தெரியவில்லை ஆனால் எனக்கு அதன் பயன்பாடுகள் மிக
அதிகமாக உதவுகிறது
ஏற்கனவே இருக்கும் செயல்முறைகள் எல்லாம் எப்படி
செயல்படுகிறதோ அதை எல்லாம் உடைக்க வந்த ஒரு புரட்சி
என்றே ஒன் நோட்டை சொல்லலாம்
ஒரு விசயத்தை டைப்படிக்க அதை ஒரு இடத்தில் சேமிக்க
திரும்ப அதை பார்க்க தேவையான போது பிரிண்டு எடுக்க
ஒரு கணக்கை போட ஒரு கம்பெனியை நிர்வகிக்க என கணினியை
பயன்படுத்துபவர்கள் நிச்சயம் ஒன் நோட்டை பயன்படுத்தி
பார்த்தால் விட மாட்டார்கள் .
ஒரு நிர்வாகிக்கு பலவேலைகளுக்கு கணினி பயன்படும் என்றாலும்
எந்த நேரத்தில் எந்த பைல் தேவைப்படும் அல்லது எப்படி
ஒழுங்கைமைக்கப்பட்டு இருந்தால் ஒரு வேலையை எளிதாக
செய்யலாம் என்பதற்கு ஏற்கனவே கம்யூட்டரில் இருந்த முறை
முற்றிலும் எதிரியே ஏனெனில் பெட்டிக்குள் பெட்டி பெட்டிக்குள்
பெட்டி என அடிக்கி வைத்து சமையல் செய்வது போன்றது அது, அந்த
முறை பொருள் இருப்பதின் பாதுகாப்பை உறுதி படுத்தும் ஆனால்
இலகுவாக செய்ய முடியுமா என்றால் முடியாது .
இப்போ நமக்கு ஒரு அஞ்சரை பெட்டி வேண்டும் அதில் சீரகம்
முதல் அனைத்து பொருளும் வேண்டும் அதில் கரண்டிகள் வேண்டும்
இப்படி ஒரு செட்டப் இருந்தால் சமையல் செய்ய ஏதுவாகும் அதை
விடுத்து எல்லாமே தனி தனி டப்பாக்களில் இருந்தால் சமையலை
செய்வதை விட டப்பாக்களை எடுத்து திறப்பதில் பொழுது ஓடிவிடும்
அப்படித்தான் இருந்தது முதலில் கம்யூட்டர் பயன்பாடு எனக்கு .
ஒன்நோட் வந்ததும் அதை ஒரு அஞ்சரை பெட்டி மாதிரி வடிவமைத்தேன்
தேவையானதை எடுத்து இதில் வைத்து கொண்டேன் எல்லா வற்றிற்கும்
ஹைபர் லிங்கு கொடுத்தேன் (ஏற்கனவே இது இருந்தாலும் இப்போ
அதிகம் ஜைபர் லிங்கு பயன்படும்)
இப்போ ஜாலியா வேலை போகுது நீங்களும் செய்து பாருங்களேன்
நுணுக்கமாக இன்னும் பயன்படுத்தலாம்
சூரிய கண்ணன் ஒரு பதிவு எழுதி இருக்கார்
http://suryakannan.blogspot.com/2010/04/microsoft-onenote.html
இது மற்றுமன்றி பதிவுகள் எழுதுபவர்கள் சேமிப்பவர்கள்,
நீண்ட வாசிப்புக்கு குறிப்புகள் வைப்பவர்கள் என கற்பனை
அதிகம் தட்டி புது புது பயன்படு முறைகளை இதன் மூலம்
வகுக்கலாம்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================