வாழ்த்துக்கள்

ஒரு கதையை அல்லது கவிதையை பத்திரிக்கைக்கு
அனுப்பி அது. பிரசுரமானதும் ஊரெல்லாம் காட்டி
சொந்த காரவங்களுக்கு அனுப்பி வாழ்வில் சந்தோசமான
தருணமாக நினைத்து நினைத்து மகிழ்கிறவர்கள் இருந்தார்கள்
வலைப்பதிவுகள் வருவதற்கு முன்புவரை .

சிலர் எழுதியும் பத்திரிக்கைக்கு அனுப்பாமல் தனக்குள்ளே
ஒரு கவிஞனை எழுத்தாளனை கொன்றவர்களாக ஆற்றலை
அழித்து சாதாரணம் மானுடனாக அன்றைக்கு இருந்த
ஜெயகாந்தனையும் பாலகுமாரனையும் மட்டுமே எழுத்தாளுமைகளாக
பார்த்து அவர்கள் சொன்னதை நம்பி பாதி நம்பாமல்
மாற்றுபார்வை அறியாமல் நிறைய விசயங்களுக்கு
உடன்பட்டு பிறகு குறைந்த விசயகளையும் அவர்களுக்கே
உடன்பட்டு ஒரு வாசககூட்டம் இருந்தது .


தேர்ந்தெடுக்க சில மணாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.
சரி இத்தனை நாள் படிச்சாச்சு நாமும் ஒரு கவிதை
எழுதலாம் என்றால் யார் படிப்பார்கள் என்ன சொல்வார்கள்
திட்டி விடுவார்களோ ஏசி விடுவார்களோ என பயந்து
இருக்கின்ற பலவேலைக்கிடையே எப்போதாவது வருகிற
கதையை மனைவிக்கு மட்டும் படித்து காண்பித்து,நண்பனுக்கு
தேநீருக்கிடையே பேசி அவ்வப்போது வரும் மின்னல்
வெட்டுகளாக தங்கள் இலக்கிய தாகத்தை கொன்றவர்கள்
வலைப்பதிவு ஒரு கடவுளின் வரம்போல தேவதையின்
பரிசு போல வந்தது.

தனது ஆளுமையை எழுத்தில் சொன்னவர்கள் அதன்மூலம்
தனது ஆளுமையை வளர்த்து வாசகனின் ஆளுமையையும்
வளர்த்து. எழுதுபவர்களின் பின்னால் தெரியும் ஒளிவட்டத்தை
பிடிங்கி எறிந்து இதோ பார் இப்படியும் எழுதாலாம் எழுத்து
உங்கப்பன் வீட்டு சொத்தில்லை என உரக்க சொன்னது
இந்த வலைபதிவுகளில் மூலமே என்றால் மிகையாகாது .

சொற்பிழை பொருட்பிழை எழுத்துபிழை ஆயிரம் இருந்தும்
தொடர்ச்சியாக எழுதவன் மூலம் சமூகத்துக்கு தங்கள்
இருப்பை தெரிவித்து வந்தார்கள் இந்த அணில்கள் பத்திரிக்கை என்ற
இராமரின் கோடுகள் தேவைபடாமலே.

ஆனாலும் சிலருக்கு என்னவோ தூரத்து பச்சை கண்ணுக்கு
குளுமையாகவே தெரிகிறது தனது வலைபதிவு ஒருமுறை
பத்திரிக்கையில் வந்துவிடாதா தானும் பலரால் பேசபடமாட்டோமா
என ஏக்கப்படுகிறார்கள் .

காலம் மாறிவருவதை அறியாதவர்கள் இனிமேல் வலைபதிவில்
எழுதினால்தான் பத்திரிக்கையிலே எழுத முடியும் எனும் நிலை
வரப்போகிறது .வலைபதிவில் வந்த எழுத்துக்களை பார்த்து நண்பரை
ஆனந்தவிகடன் அழைத்தது போல .

நிலைத்து நிற்காமல் கால்பாவி பத்திரிக்கைக்கு போக
துடிப்பவர்களே எழுதுங்கள் இது உங்கள் கருவியாகவும்
பத்திரிக்கையாகவும் ஒரே நேரத்தில் இயங்குகிறது .

வாசமுள்ள மலரென்றால் வண்டுகள் நிச்சயம் வரும்
ஏன் வாசத்தை அதிகப்படுத்துங்கள் .

முள்ளில்லா ரோசாக்களை உற்பத்தி செய்யுங்கள் உங்கள்
பூக்களை வாசமேற்றுங்கள்

அதன் வாசத்தில் பூமி சுழன்று வரட்டும்

உங்கள் சகபயணியாக

வாழ்த்துகிறேன் .


வலைபதிவர் தின வாழ்த்துக்கள்















--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post