கவிதைகள்

உணர்வுகளை மொழிகளாக்கி தையற்காரனின் சாமர்த்தியத்துடன் சட்டையாக்கி அணிந்த பின்னும் இன்னும் சிறிது மாற்றி இருக்கலாமோ தையற்காரன் சரியில்லையோ அல்லது துணி சரியில்லையோ ?அல்லது நாமதான் சரியில்லையோ என முற்றுபெறாத எண்ணங்களை தோன்றவைப்பது கவிதை
இதுதான் இதைத்தான் சொன்னேன் என சொல்வதற்கு கவிதை எனும் விசயத்தை தயவுசெய்து கைதொடாதீர்கள் அந்த கவிதை நீங்கள் வடிப்பதற்குமுன்பே இருக்கிறது அதன் பிரதியை அழித்துவிட்டாலும் இன்னும் இருக்கும் .

சட்டியில் வேகும் சோற்றை அவசரசமாக வேகாமல் இறக்கி பரிமாறுவதுபோல சிலர் கவிதை படைக்கிறார்கள் அவசர அவசரமாக நூல்போட்டு விற்கிறார்கள் ஏனென தெரிவதில்லை கவிதை ஒருத்தனுக்கு எழுதவருவதில்லை அது சிறுகதை போன்றதல்ல அது நிகழ்கிறது ;ஒரு ஆவேசம் போன்ற எண்ணங்கள் என சொன்னாலும் கவிதையை கட்டுபடுத்தும் அந்த பழங்கால மனிதனாகிவிடுவேன்.

கவிதை என்றால் என்னவென கேட்பதே தப்பு , இந்த வடிவத்தில் அது இருக்கனும் என சொல்வது அதைவிட தப்பு அதற்கு விளக்கம் கேட்பது அதைவிட கொடுமை ஒரு கவிதை புரியாமல் இருப்பது கவிஞனின் குற்றமல்ல நமக்கு கவிதை விளக்கும் பிஞக்கை பழக்கமில்லை என அர்த்தம் அல்லது அந்த உணர்வில்லை என அர்த்தம் .

இருபதாம் நூற்றாண்டில் கவிதை தனக்கென ஒரு இடத்தை பெற்றுவிட்டது அதற்கு யாரும் முட்டுகொடுக்கவேண்டியதில்லை . அரசியல் ஆயுதமாக கவிதை பயன்படுத்துகிறேன் என அதன் ஆன்மாவை கொல்கிறார்கள் . பச்சபிள்ளையின் கையில் பதாகையை கொடுத்தது போல் பாலகன் வேத விசாரம் செய்வதுபோல கவிதையை அதன் மொழியை கெடுக்கிறார்கள் .

ஒரு பழமொழியை சொல்ல ஒருத்தனுக்கு அறிவுரை சொல்ல அல்லது இசைக்கேற்ப ஆடவைக்க பயன்படுத்தலாம் கவிதையை அதற்கு மட்டுமே என்பவர்கள் சன்னலுக்கு அழகியை எட்டிபார்பவர்கள் அவளை பக்கத்தில் பார்க்க திறமில்லாதவர்கள் அவர்கள் என்றுமே சன்னலை உடைத்து செல்வதில்லை .

அதென்ன கவிதைக்கு இத்தனை பெரிய கித்தாப்பு , அதை அணுக முடியாதா?,அதை மொழிகளில் சிறை பிடிக்க முடியாதா ?எங்கள் மொழிகளுக்கு வளமில்லையா? எங்கள் விமர்சனங்கள் அதை தொடாதா? என கேட்காதீர்கள் கவிஞர்கள் உங்கள் மொழிகளை அதன் எல்லைகளை உடைக்க ஆரம்பித்து வெகுநாட்கள் ஆகிறது .

மொழி அதன் முனை மழுங்கி போனதுதெரிந்துதான் கவிஞன் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டான் பொருட்களை வார்த்தைகளுக்குள் போடுவதற்கு பதிலாக வார்த்தைகளை பொருட்களுக்குள் போட ஆரம்பித்து விட்டான் .

ஒரு பெரிய விவாதம் நடத்துவதற்கு பதில் ஒரு இசையை கேட்பதற்கு பதில் ஒரு இலவச வார இதழை படிப்பதற்கு பதில் ஒரு கவிதை மேலோட்டமாக வாசிக்காதீர்கள் .

கவிதை படிக்கும்போது அது உங்களுக்குள் நிகழ வேண்டும் அதுதான் கவிதை
என்பது கூட ஒரு வரையறை ஆகிப்போகும் அதுதான் கவிதையின் தனி இயல்பு



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

20 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post