நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள் -8

எந்த ஒரு கம்பெனியையும் சேவைதரும் பிரிவு உற்பத்தி பிரிவு என பிரிக்கலாம்.
வெறும் சேவை தரும் கம்பெனிகள் டெலிபோன் சேவை, பேங்கு சேவை,
இன்சூரன்ஸ் சேவை என்பவை சேவையை மட்டுமே அடிப்படையாக கொண்டவை.

சேவை அதிகமுக்கியத்துவம் உடையது ஒரு பொருளை தயாரிக்க மற்றும்
தரத்தை சோதிக்க போதிய அவகாசம் உள்ளது. ஆனால் சேவை அப்படியல்ல
அந்த இடத்திலேயே சேவை அளிக்கப்பட வேண்டிய தேவையாகிறது.

சேவை என்பது உங்கள் கம்பெனியின் வரவேற்பறையில் இருந்து ஆரம்பிக்கிறது
கம்பெனிக்கு வரும் போனை எடுத்து பேசும் டெலிபோன் ஆபரேட்டரை
அவரது பேசும் தன்மையை பொறுத்துதான் புதிய நபருக்கு உங்கள்
கம்பெனியை பற்றிய மதிப்பீடு உருவாகிறது .

"அலோ அது மன்னாரன் கம்பெனியா"

"சொல்லுங்க"

"ஓணர் இருக்காரா"

"நீங்க யாரு , என்ன விசயமா பேசனும்"

"நான் அவரோட நண்பர் , அவர்கிட்ட போன
குடுங்க பிரண்டுன்னு சொல்லுங்க அவினாசியில் இருந்துன்னு
சொல்லுங்க"

"சார் சார் ஒரு நிமிசம் இருங்க சார் லைன் தரேன்"

லைன் ஓணருக்கு போய்விடுகிறது அந்த நபர் நீண்ட நாள் பாக்கியை
வசூலிக்க முதலாளியை துரத்தி வருபவர் அவரது பொருள் சரியில்லை
எனவே அதற்கு டெபிட் போடபட்டு இருக்கும் அதை ஏற்காமல்
பணத்தை உடனே தாருங்கள் என அந்த நபர் வாக்குவாதம்
செய்து வருபவர் விசயம் இப்படி இருக்க காலதாமதபடுத்தியாவது
அவரை வழிக்கு கொண்டுவர நினைத்து இருக்கலாம் ஓணர் .

இந்நிலையில்அந்த நபர் நண்பர் என்றவுடன் போனை
கொடுத்துவிட்டார் டெலிபோன் ஆபரேட்டர் இது யாருடைய தப்பு .

சிலர் சொல்வது முழுக்க முழுக்க இது
ஆபரேட்டரின் தப்பு மட்டுமே என்று

அடுத்த நாள் அந்த ஆபரேட்டர் பெண் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்
தற்காலிகமாக வேறொரு பிரிவில் இருந்த பெண் அமர அடுத்தும்
அதே நபர் இன்றும் முதலாளிக்கு லைன் கொடுக்கப்பட்டு விட்டது.

ஆனால் இது முழுக்க முழுக்க நிர்வாக தவறு என்பதே எனது கருத்து

யார் என்னவென கேட்காமல் ! சூழ்நிலை தெரியாமல்
முதலாளியிடம் போனை கொடுப்பது பல நேரங்களில்
தவறாக போய்விடும் .

சமயோசிதமான சிந்தனை வேண்டும் மேலும் மேற்கண்ட உரையாடலில்
சம்பந்த பட்ட நபரின் பெயர் , கம்பெனி ஆகியவை டெலிபோன்
ஆபரேட்டரால் விசாரிக்கப்படவில்லை .

குரலில் கடுமை ஏத்தி பேசும் ஆபரேட்டர்களாலும் ,சரியான முறையில்
வாடிக்கையாளர்களை அனுக தெரியாத ஆபரேட்டர்களாலும்
பல லட்சம் கோடு நட்டம் ஆனதும் உண்டு.

பொதுவாக டெலிபோன் பேசும் பணிதானே என்ற குறைந்த பட்ச
மதிப்பீடே தரப்படுகிறது இங்கெல்லாம் .

அதன் முக்கியத்துவம் அதற்கு தரும் சம்பளம் ஆகியவை கணக்கில்
கொண்டு திறமையான நபர்கள் மட்டுமே பிரண்ட் ஆபிசில் உட்கார
வைக்கப்படவேண்டும் .

சரியான நபரை சரியான பணிக்கு அமர்த்துவதே நிர்வாகிக்கு
முக்கால்வாசி வேலையை குறைத்து விடும்.

சில நிருவனங்கள் பொருளை விற்றவுடன் அதன் கடமை முடிந்து
விட்டதாக கருதுவார்கள் ஆனால் விற்றவுடன் தான் வேலையே
ஆரம்பிக்கிறது .

ஆப்டர் சேல்ஸ் சர்வீஸ் மிக முக்கியமானது

ஒரு ஜெனரேட்டரை விற்க சர்வீஸ் வாரண்டி பற்றி எல்லாம் பேசுவார்கள்
விற்றவுடன் வாரண்டு வேறு சர்வீஸ் வேறு என சொல்லி
சர்வீசுக்கு பணம் கேட்பார்கள் இதெல்லாம் அவர்களை பற்றிய
மதிப்பீடுகளை குறைக்கும் செயல்தான்.
பொதுவா ஒரு ஜென ரேட்டரின் செயல்பாடுகளை அறிய
மாதம் ஒரு விசிட் செய்ய ஆளை அனுப்ப முடியாத அல்லது
விரும்பாத கம்பெனியின் ஒருவருட வாரண்டி பயனற்றது .

அதே போல பி எஸ் என் எல் பிராட்பேண்டு கனெக்சனும்
அப்படித்தான் கனெக்சன் வாங்கிய பிறகு சர்வீசுக்கு அழைத்தால்
ஆளே வரமாட்டார்கள்
இந்த ஒரு காரணத்தினாலேயே யாரும் பிஎஸ் என் எல் பக்கம்
போவதில்லை .

சேவை தரும் தொழிலாளியை பெரும்பாலும் முதலாளி அதிக முக்கியத்துவம்
தருவதில்லை உற்பத்திக்கும் ஆடர் கொண்டு வருபவனுக்கும்
அதிக முக்கியத்துவம் தருவார்கள் .

அது மிகப்பெரிய தவறு .வேலையை விட்டு நின்றவரின் பிஎப்
பணத்தை பெற்று தருவது நல்ல சேவை அது மற்ற தொழிலாளர்களுக்கு
கம்பெனியை பற்றிய நல்ல அபிப்பிராயம் தரும் .

அதை செய்யும் மனிதவளத்தின் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம்
தரமாட்டார்கள் இதெல்லாம் முதலாளிகள் அல்லது நிர்வாகிகள்
செய்யும் பெரும் தவறுகள் .

உற்பத்தியும் சேவையும் ஒரே எடைதட்டில் வைக்கப்பட்டு
இருக்க வேண்டும் .   

மீண்டும் பேசுவோம்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post