நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்

நிர்வாகம்னா என்ன அது முதலாளிக்கு தானே தேவை நமக்கெதுக்குன்னு நினைச்சா
பெரிய தப்புங்க எல்லாருக்கும் நிர்வாகவியல் தேவை எப்படின்னு சொல்றேன்.

என்கிட்ட பணமிருக்கு நான் சம்பளம் தருகிறேன் வேலையை செய் என்றால்
பத்து வேலை நடக்கவேண்டிய இடத்தில் ஐந்து வேலைதான் நடக்கும்.

நிர்வாகம் என்பது பணம் இருந்துட்டா மட்டும் செய்துட முடியாது அதுக்கு
என்னவேண்டும்னா நிர்வாக செய்ய தெரியனும் நிர்வாகம் என்பது முதலாளி
மட்டுமல்ல செய்ய தெரிந்த எல்லாரும் செய்யலாம் அவ்ளோதான்.

உங்க வீட்டுக்கு நாலுபேரு வராங்க பெயிண்டு அடிக்க - அவங்க எவ்ளோ
பணம் கேட்கிறார்கள் - எப்படி வேலையை செய்ய போகிறார்கள்-எத்தனை நாளில்
முடிப்பார்கள்- இதே வேலையை செய்ய வெளியில் எவ்ளோ கூலி கேட்கிறார்கள்
இதெல்லாம் தெரியவில்லை என்றால் நீங்கள் அந்த வேலைக்கு வந்தவர்கள்
அல்லது காண்டிராக்டரால் ஏமாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் ஒரு பெயிண்டு அடிக்கும் தொழிலாளியாக இருந்தால் , மேற்கூரிய
விபரங்கள் தெரிந்தால் நீங்கள் நாலுபேரை வைத்து வேலை வாங்கலாம்
இல்லாட்டி வாழ்க்கை முழுக்க பெயிண்டுதான் அடிக்கனும்.
நிர்வாகம் செய்ய தெரியனும் அதான் விசயம்.

காசு இருக்குன்னு கம்பெனி ஆரம்பிச்ச எத்தனையோ பேரு இன்னைக்கு
கட்டிடத்தை வாடகைக்கு விட்டு விட்டு வாடகை வாங்கி தின்னுட்டு இருக்காங்க
நிர்வாக செய்ய தெரியவில்லை என்பதுதான் காரணம்.

முடிவெடுக்கும் திறன்:

வேலையை கொடுத்தமா செய்தாங்களா முடிஞ்சதான்னு சிரமமில்லா போனா
எல்லாரும் ராசாதான் ஆனா பாருங்க வேலையை செய்யும்போது பல்வேறு
கேள்விகள் வரும் உதாரணமா பனியன் எக்ஸ்போர்ட் கம்பெனிய எடுத்துக்கங்க

ஒரு ஆர்டரை பெறும்போது இருக்கும் நூல்விலை (ரா மெட்டீரியல் காஸ்ட்)
ஆர்டரை பெற்றபின் எகிறிவிட்டால் என்ன செய்வது - முடிவெடுக்கும் இடத்தில்
இருப்பது நீங்கதான் முக்கிய நிர்வாகி என்ன செய்வீங்க .

நூல் மில்களின் நிலவரம் தெரிந்து இருக்கனும் மார்கெட்ல என்ன நடக்குது
எப்போ நூல் விலை ஏறப்போகுது நிலவரம் தெரிய முயற்சிக்கனும்.
முன்கூட்டியே அதிகமா நூல் எடுத்து வைச்சுக்கலாம்
ஆடரை பொருத்து என்ன நூல் அதிகமா தேவைப்படும் என யோசிச்சு கணக்கு போட்டு
அதிகமா நூல் எடுத்து வைத்து கொள்வது ஒரு தீர்வு.

எப்பவுமே சேபர் சைடா விலை நிர்ணயிக்கனும் கூடினா எவ்ளோ கூடும் என
அனுமானிச்சு ஆடர் எடுக்கும்போதே ஏறபோகும் விலைக்கு பனியன் விலை
நிர்ணயிச்சுக்கனும் எப்படி தெரியும் ஏறபோகும் விலைன்னு கேட்டால் முதலில்
எல்லாம் விலை எவ்ளோ கூடியதுன்னு பார்த்து அந்த தகவலை வைச்சு
தீர்மானிக்கனும் இவை .

இம்மாதிரி ஒரு கேள்விக்கு ஒரு சிக்கலுக்கு பல்வேறு தீர்வுகள் இருக்கும்
அதுக்கு அடிப்படையே விசயாதாரங்கள்தான் விசயாதாரங்கள் இல்லையெனில்
முடிவெடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படும் அப்புறம் அடுத்தவங்ககிட்ட ஆலோசனை
கேட்பீங்க போட்டி கம்பெனியா இருந்தா அட நூல் விலையெல்லாம்
ஏறாதப்பா சும்மா அதிகமா வாங்கி வைக்காதேன்னு உங்களை கவித்து
உட்டுடுவாங்க. இதெல்லாம் ஒரு உதாரணம்தான் இதுக்கு இன்னும் பல
தீர்வுகள் இருக்கலாம் .

டெல்பி முறையில என்ன சொல்றாங்கன்னா(இதென்ன கேட்கிறீங்களா
நிர்வாகவியலில் ஒரு விசயத்துக்கு இந்த முறை அந்த முறைன்னு சொல்வாங்க)

ஒரு சிக்கல்களுக்கு கேள்வித்தாள் தயார் செய்து பணியில் இருப்பவர்களிடம்
கொடுத்து பதிலை பெறுவது இந்த முறை(நான் மேலே கூறிய நூல் விலை
மாதிரியான விசயத்துக்கெல்லாம் கேள்விதாள் தயார் செய்ய முடியாது சிக்கலை
பொருத்தது இந்தகேள்வி தாள் விசயம்இதற்கு ஒரு உதாரணம் சொல்லனும்
என்றால் தைக்கும்போது ஏற்படும் தையல் தாவி தைப்பதுன்னு சொல்லுவாங்க
அதாவது தையலில் ஒருசில இடங்களில் நூல் மட்டும் இருக்கும் துணியில் தைக்கப்பட்டு
இருக்காது சுமார் 1 இஞ்சு அளவுக்கோ மேலேயோ இருக்கும் இது போன்ற
பிரச்சனை நிறைய வரும் )

அதற்கான தீர்வுகளை 1,2,3 என வகைப்படுத்துவது இதை அடிப்படையா வைச்சு
இன்னொரு கேள்விதாள் தயார் செய்வது பதில்களை வரிசைபடுத்துவது.
அதிக பட்சமா என்ன தீர்வு வழங்கப்பட்டது என்பதை வைத்து முடிவெடுப்பது.
கடைசியில் முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு.

நிர்வாகவியல் என்பது பெரிய கம்பெனிகள் கார்பரேட் நிறுவனங்களில் மட்டுமல்ல
வீட்டிலும் நிர்வாக உத்திகள் தேவைப்படும் .

வீடுதானே மனைவி பார்த்துப்பாள் அதெல்லாம் நான் கேட்டுக்கவே
மாட்டேன்னா அல்லது கணவன் கடைக்கு போய் வாங்கி தந்துடுவாரு
நமெக்கென்ன என சொல்லும் பெண்மணிகளாக இருந்தால் நஸ்டம்
உங்களுக்குத்தான்.

வாரவாரம் சந்தையில் காய்கறி குறைந்த விலைக்கு கிடைக்கும்
ஒப்பீட்டளவில் பக்கத்து கடைக்காரனை விட குறைந்தவிலைக்கு
காய்கறி கிடைத்தால் அதை பார்த்து தெரிந்து கணிக்கிட்டு சந்தைக்கு
போய் காய்கறி வாங்கி விடலாம்.

இதுதான் நிர்வாகம் - ஒரு வாரத்துக்கு 100 ரூபாய் மிச்சமானால்
மாசம் நானூறு வருசம் ஐந்தாயிரம் என யோசிக்கனும்.

திட்டமிட்டு செயல்படுத்தனும் இதெல்லாம் நிர்வாகவியல் சம்பந்தப்பட்டதுதான்

சரி இன்னும் இதில் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு நாளை
எழுதுகிறேன்

தொடரும்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post