என்னடா முதல் போட்டு வேலை கொடுக்கும் முதலாளியை
இப்படி சொல்லறானேன்னு நினைக்காதீங்க உதைபட்டாத்தான்
தெரியும் கழுதையின் குணஅருமை உழைத்து பார்த்தால்தான் தெரியும்
முதலாளிகளின் குணப்பெருமை.
எல்லா பயலும் முதலாளி ஆக முடியாது அதுக்கு முதல் வேணும்
முதல்னா என்னான்னா ஐந்து ரூபாய் பத்துரூபாய் அல்ல கோடிகளில்
அல்லது லட்சங்களில் வேண்டும் முதலீடு எதுவும் இல்லை கைகளும்
மூளையும் மட்டுமே நமக்கெல்லாம் முதலீடு அதான் ஸ்டாப்பா இருக்கோம்
விசயத்துக்கு வருவோங்க காலையில இருந்து வேலை செய்வோம்
சாயங்காலம் முன்கூட்டியே என்னைக்காவது கிளம்பினோம்னு
வைச்சுக்கங்க போச்சு அவ்ளோதான்.
அடுத்த நாள் இன்னும் ரெண்டு வேலை அதிகமா எட்டி பார்க்கும்
நம்ம மேசையில , முதலாளியின் மனம் கோணாமல் நடப்பதற்கு
இங்கே தலைகீழ் பிரயத்தனம் தேவைப்படுகிறது.
காலையில் இருந்தே சிரிச்சு பேசிய முதலாளி பிற்பகல் மூஞ்சியை
தூக்கிவைத்து கொள்ளலாம் அது அவருடைய மனைவிக்கும் அவருக்கும்
வீட்டில் நடந்த சண்டையினால் இருக்கலாம் ஆனால் நாமதான்
எதோ தப்பு செய்திட்டமோன்னு அவரோட முகரகட்டைய பாத்துட்டே
திரியனும்.
அட நாம நம்ம வேலையை செய்யுறோம் அவர் சம்பளம் தருகிறானுட்டு
போகமுடியாது.
பலவிதமான நடிப்புகளுடன் வாழவேண்டி இருக்கிறது! கூட வேலை
பார்ப்பவர்களை நம்பவே முடியாது அவனுக அதுக்கும் மேல.
முதலாளியை கூட நம்பிடலாம் இவனுகளை நம்பவே முடியாது
(இவனுக கதையை இன்னொரு நாளு சொல்றேன்)
சோசியலா பழகினால் நாம சொல்ற வேலைய செய்ய மாட்டாங்க
அதிகாரம் செய்தோம்னா நம்மிடம் கோபிச்சுக்குவாங்க அப்புறம்
முதலாளிகிட்ட போட்டு கொடுப்பாங்க "என்ன சார் அவர பத்தி
உயர்வா பேசுறீங்க அன்னைக்கு 10 நிமிசம் லேட்டாத்தான் வந்தாரு
நீங்க ஊருல இல்ல அப்போன்னு" அள்ளி விடுவார்கள் நம்மைபத்தி.
சரி நாம மறுபடியும் முதலாளிகிட்ட வருவோம்.
என்னதான் கழுதைமாதிரி உழைச்சு, நாய்மாதிரி விசுவாசமாக இருந்தாலும்
எவனாவது ஒருத்தனை எந்த திறமையும் இல்லாதவனை வேலைக்கு
வைச்சுக்குவாங்க அவனுக்கு முன் அனுபவம் பின் அனுபவம் எல்லாம்
தேவையே இல்லை ஒரே தகுதி முதலாளியோட சொந்தகாரன் .
அந்த ஒன்னும் தெரியாதவனுக்கு நாம்வேலையும் சொல்லி தரனும்
அவன் செய்யுற தப்புக்கும் பொறுப்பேற்கனும் " ஏம்பா அவனுக்குத்தான்
ஒன்னும் தெரியாது நீயில்ல சரியா சொல்லிகொடுக்கனும்பான்" முதலாளி
இந்த சொந்தக்கார பயலுக வேலை தெரியாட்டாலும் செய்யுற மொட்ட
அதிகாரமிருக்கே அதை ஏன் கேக்கிறீங்க எதாவது பிரச்சனைன்னா
சொந்தகாரன் ,பந்தக்காரனுக்கு சப்போர்ட் செய்வானுக இந்த முதலாளிகள்
திறமை நேர்மை இவற்றிற்கு முதலிடமா அல்லது சொந்த உறவாக
இருப்பதற்கு முதலிடமா என புரியவே இல்லை ரொம்ப நாளா?
முதலாளிகள் மனசுக்குள் "சொந்தக்காரன்" நம்மைவிட்டு எக்காலத்துக்கும்
போகமாட்டான் என்ன இருந்தாலும் மற்றவர்கள் அதிகமா சம்பளம்
கிடைச்சாபோறவர்கள் தானேன்னு நினைப்பு இருக்கும்.
இப்படி பலவருசமா இவங்ககிட்ட குப்பையை கொட்டினால் ஆகா
ரொம்பநாள் இருந்தவராச்சேன்னு மெச்சவா போறானுக அட
வேற போக்கிட இல்லாமத்தானே நம்மக்கிட்ட இருந்தான்னு சொல்லுவாய்ங்க.
ரொம்ப நாள் ஒருத்தனிடம் வேலை செய்வனைபோல முட்டாள் யாருமில்லைங்க
வேலை தெரிஞ்ச்சுட்டதுன்னா சின்னதா தனியா ஆரம்பிக்க பார்க்கனும்.
தனியா ஒரு தொழிலை ஆரம்பிக்க நமக்கு முதல் எதிரியே பயம்தாங்க
பயந்தா ரோட்டில் இறங்க நடக்க கூட முடியாது .என்னடா வேலை செய்றவங்கள
முதலாளி ஆக சொல்றானேன்னு பார்கிறீங்களா ?
மனுசன மனுசன் சமமா பாவிக்கும் சமூகத்திலா வாழ்கிறோம் . மனிதனை மனிதன்
சுரண்டி வாழும் சமூகத்தில் வாழுகிறோம்.
இந்த சுரண்டல் படிநிலையில் ரொம்ப பாதிக்காத பகுதியில் நிற்கவே ஒவ்வொருத்தனும்
விரும்புகிறான். அப்படி எல்லாரும் முதலாளி ஆக முடியாதேன்னு நீங்க கேட்கலாம்
எல்லார பத்தியும் சிந்திக்க ஆரம்பிச்சாச்ச அப்போ பாருங்க
இந்த சமூகம் நமக்கு ஒத்து வராது தீர்வுதான் என்னவென்றால் சமூக மாற்றம் மட்டுமே தீர்வு.
இந்த சமூக அமைப்பை பத்தி புரிஞ்சுக்காம காலையில 8.30 மணிக்கு போயி
இரவு 9.00 மணி வரை( என்ன பாக்கிறீங்க திருப்பூரில் வேலை நேரம் அதாங்க)
அரைச்ச மாவையே அரைச்சு அறுபது வருடம் முடிந்ததும் ஏன் வாழ்ந்தோம்
என சுயத்தை தேடி பஜனை மடங்களில் ஐக்கியமாகி .
அங்கே சுயத்தை தேடுபவர்களாக கண்மூடி உக்கார்ந்து இருக்கையில்
கண்ணுக்குள்ளும் இந்த கயவாளிபயளுக படம்தான் ஓடும்.
ஒரு வேலை என்பது ஒருவனை மட்டும் சார்ந்த விசயமல்ல ஒட்டுமொத்த
சமூகத்தையும் சார்ந்த விசயம் . சமூகம் முழுக்க சணல் திரிச்சா நீங்க மட்டும்
காலாட்டி சாப்பிட முடியாது அதாவது தொழிலாளியா இருந்தா .
மொத்த சமூகமும் மாறுனும்னா சமூக உற்பத்தி முறை மாறனும் உற்பத்தி உறவு மாறனும்
(என்னடா உற்பத்தி உறவுன்னு சொல்றானேன்னு பார்கிறீங்களா )
அதான் இம்புட்டு நேரம் பேசிய இந்த முதலாளி தொழிலாளி உறவு அதை
சொன்னேன்.
வேலையை பார்த்தோம 5 மணிக்கு வீட்டுக்கு போனோமா வேண்டிய சாமான்களை
வேலை பார்த்த கார்டை காண்பித்து வாங்கினோமா வீட்டு ஓணர் தொந்தரவு
இல்லாத அரசு கொடுத்த சமூகம் கொடுத்த வீட்டுல இருந்தோமா கவிதை
கதை ஓவியம் சிற்பம் வரைந்தோமா நம்மை தேடி விட்டு போன இடத்தில்
இருந்து தொடர நாம் கம்யூனிச சமூகத்துக்குதாங்க போகனும்.
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================