நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-2

நிர்வாகின்னா என்னன்னு நினைக்கிறீங்க ஏசி அறையில் இருந்துகொண்டு
இருப்பவனை எல்லாம் அதைச்செய் இதைச்செய்யுன்னு சொல்கிறவனா

இல்லை நிர்வாகி பெரிய வேலைக்காரன் அவர் ஒருத்தர் இல்லாத இடத்தை
இட்டு நிரப்ப தெரிந்தவன் .

நிர்வாகம் என்பது எதோ முதலாளித்துவத்துக்கு மட்டும் தேவை என்பதில்லை

சோசலிசத்தை கட்டி அமைக்கவும் நிர்வாகத்திறமை வேணும் நிர்வாகம்னா
என்னவென தெரியனும் .

உதாரணமா சோசலிச நாட்டில் யாரையும் வேலையை பிடிங்கிடுவேண்டு
மிரட்டி வேலை வாங்க முடியுமா ? யாருக்கும் அதிகமா சம்பளம் கொடுத்து
வேலை வாங்க முடியுமா? இந்த இரண்டும் இப்போ முதலாளித்துவத்திலேயே
முடியாதுன்ற நிலை வந்துடுச்சு .

சோசலிசத்தில் இது ரெண்டும் இல்லைன்னுட்டு இராணுவத்தை வைச்சு
வேலை வாங்க முடியுமா அதுவும் முடியாது துப்பாக்கிக்கு ஓரளவுதான்
பயப்படுவாங்க பிறகு நிர்வாகவியல்தான் கைகொடுக்கும்

சரி அதை விடுங்க நடப்புக்கு வருவோம்

நான் சொல்ல வந்தது பன்முகத்திறமை ஒரு நிர்வாகின்னா நிர்வாகம்
செய்வது தினமும் ரிபோர்டு தயார் செய்து முதலாளிக்கு மெயில்
செய்வது இதையே செய்து கொண்டு இருந்தால் ஒரு நாள் அத்தனை
மெயிலையும் முதலாளி தூக்கி முகத்தில விட்டெரிவான் ஏன்னா

நாமதான் ரூமவிட்டு வெளிய வருவது இல்லையே இண்டர்காமில்
விபரம் கேட்டு மெயில் அனுப்புவதுடன் சரி.

ஒரு பிரிவு தலைவன் லீவு அன்றுதான் முக்கிய மான ஆர்டர் போகனும்
நிர்வாகி போய் அந்த பிரிவுல உக்கார்ந்து வேலை செய்தாக வேணும்
சும்மா எதுக்கெடுத்தாலும் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது.

அப்போ எல்லா வேலையும் தெரிந்து இருக்கனும் நிர்வாகிக்கு
அதுக்காக முழுவதுமல்ல அடிப்படை விசயங்களாவது தெரிந்து கொண்டு
இருக்கனும் இல்லையா.
அக்கவுண்டு டிபார்மெண்டில் தினசரி வேலைகள் என்ன நடக்கிறது என்பதாவது
தெரிந்து இருக்கனும் இல்லையா செக் பிளானிங்க் கொடுத்து விட்டு
அக்கவுண்டெண்டு 2 நாள் லீவு யாரோட செக் கிளியரிங்குக்கு வரும்னாவது
அப்டேட்டா இருக்கனும் .

ஒரு ஞாயிற்று கிழமை அலுவலகம் வறீங்க உங்க ரூமில கரண்டு இல்லை
என்ன செய்வீங்க உடனே எலக்டிரீசியன தேடுவீங்க அதான் தப்பு
போய் உங்க ரூமுக்கு வருகிற எம் சீ பி (MCB)ஆப்பாகி(OFF) இருக்கான்னு
பார்க்கனும் . கரண்டு எப்படி வருகிறது ஒரு மெரின் போர்டு பிறகு இன்னொரு
போர்டு அதில் தனிதனியாக பிரிந்து செலுத்தும் எம்சிபிக்கள் இருக்கும்
அதை எல்லாம் தெரிந்து இருக்கனும் . இரவில் திடிரென இந்த எம்சிபிக்கள்:
டிரிப்பாகி ஆப்பாகி இருக்கும் அது ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான் .
அது தெரியாமல் தொடர்ந்து எலக்டிரியனை அழைத்து அழைத்து
ஓய்ந்துதான் போகனும் நீங்கள்.


இல்லைன்னா நீங்க ஞாயிற்று கிழமை வேலைக்கு வந்து பிறகு ரூமில்
கரண்டு வரவில்லை என திரும்பி போனதுதான் மிச்சமாக இருக்கும்

பன்முகத்திறமை பத்தி பேசிகிட்டே போகலாம் ஆனா முதலாளிகளுக்கு
இந்த பன்முகத்திறமையை பெரிசா பேச மாட்டாங்க "அட நீங்க ஏங்க
அதை போய் பார்கிறீங்க அவன பார்க்க சொன்னா பார்கிறான்னு"
சொல்வாங்க தவிர பெரிசா உங்க பன்முக தன்மையை பாராட்ட மாட்டாங்க
கூட வேலை பார்க்கிறவங்க பன்முக தன்மையை ஒரு குறை மாதிரி

நீங்க நினைக்கனும்னுகிறதுக்கான வேலையை செய்வாங்க
உங்க முகத்துக்கு தெரியாம கிண்டல் அடிப்பாங்க இல்லைன்னா
சார் எலக்டிரீசியன் வர நேரமாகும் வந்து கொஞ்சம் பாருங்களேன்னு
இன்சல்டு செய்வாங்க ஏன்ன நீங்க பெரியாளா இருப்பதில் அவர்களுக்கு
முரண்பாடு இருக்கும்

முதலாளிக்கும் உங்களுக்கும் இருக்கும் முரண்பாடு ஒரு வகை
சக தொழிலாளிக்கும் உங்களுக்கு இருக்கும் முரண்பாடு ஒரு வகை
இரண்டையும் ஒரே மாதிரியா கையாள முடியாது

சரி மீண்டும் விசயத்துக்கு வருவோம் , பன்முக திறன் இல்லாவிட்டால்
எலக்டிரீசியன் சொல்வது , பிளம்பர் சொல்வது, என எல்லார் சொல்வதும்
உங்களால் கேள்வியின்றி ஏற்று கொள்ளப்படும் என தெரியும்போது
சரியான நிர்வாகமில்லை என எல்லாருக்கும் தெரிந்துவிடும்.

பீசாகாத டியூப்க்கு ரிப்பேராகாத மெசினுக்கு என பில் போடப்பட்டு
நீங்களும் நிர்வாகமும் மொட்டை அடிக்கப்படுவீர்கள்.

இன்முகத்தோடு `கேள்வி கேட்டு சரிபார்த்து விசயங்களை நாளும்
தெரிந்து மண்டையில் ஏத்தி கொண்டே இருக்க வேண்டும்.


அடுத்து பேசி தீர்த்தல்

சில நிர்வாகிகள் பேசிபேசியே விசயத்தை சிக்கலாக்கிடுவாங்க

சரியாக பேசினால் எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு
உண்டு பெரும்பாலும் பேசி தீர்க்கும் வகையில்

நிர்வாகத்துக்கு உள்ளும் வெளியே இருக்கும் உப வேலைகள்
செய்பவர்கள் விசயத்திலும் நிறைய விசயங்கள் இருக்கும்

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார் பெறின்"

எண்ணிய கருத்தினை நிரல்பட இனிமையாக சொல்லும்
வல்லமை பெற்றவர் சொன்னால் இந்த உலகமே அவர்
சொல்வதை விரைந்து போய் கேட்குமாம்

நம்ம அய்யா திருவள்ளுவர் சொல்லி இருக்காருங்க

அடுத்து பேசி எப்படி தீர்ப்பதுன்னு பார்ப்போம் நாளை
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post