ஈழப்போராட்டம் பற்றி

ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என அறிவித்து விட்டது புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள் இனி புலிப்பாணி போர் முறை

நினைத்து கூட பார்க்கமுடியாது வேறு எந்த போராட்டமும் சாத்தியமே இல்லை என சொல்லும் அளவுக்கு மக்களின் மேல்

அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது .


இந்நிலையில் ஈழ போராட்டம் அதன் வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள் இரண்டையும் ஆராய வேண்டும்

புலிகள்தாம் இந்த பின்னடைவுக்கு காரணம் என ஒரேயடியாக அவர்கள் மேல் பழிபோடவும் முடியாது

அதே நேரத்தில் எந்த ஒரு அரசியல் சித்தாந்தமும் அற்ற முறையில் ஆயுதத்தை மட்டும்

நம்பி அவர்கள் நடத்திய போராட்டம்தான் தோல்விக்கு காரண்ம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்

கடைசி வரையில் இந்திய அரசாங்கத்தில் இருந்து போர் நிறுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருந்தார்கள்

எனில் அது இந்திய மேலாதிக்கத்தை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள்

இந்தியாதான் இந்த போரை நடத்துகின்றது என்றால் அவர்கள் எப்படி போரை நிறுத்துவார்கள்

பிஜெபி வந்தாலுமே (மே 2000 ஆண்டு 40 ஆயிரம் சிங்கள சிப்பாய்களை மீட்க கிளம்பினார் வாஜ்பாய்)

1.இந்தியா அதன் தரகுமுதலாளிகள் இலங்கையில் செய்திருக்கும் முதலீட்டுக்கு

நட்டமடைய சம்மதிக்காது

2.இந்தியா ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை அனுமதிக்காது
(ஏனெனில் அது ஒரு பார்பன வல்லான்மை அரசு)

3.புவி அமைவின் அடிப்படையில் இலங்கை போர் முக்கியத்துவம் வாய்ந்த இடம்
எனவே இலங்கையுடன் முறைத்து கொள்ளாது

எனவே இந்திய் அதிகாரவர்க்கம் எந்த உதவியும் செய்யாது மாறாக தீமையே செய்யும்

(வங்க பிரிவினையை பேசுவோ அதுவும் இந்திய மேலான்மையை நிலைநாட்டவே முக்திவாகினியை

ரா தோற்றுவித்தது என்பதை அறிவார்களோ)

மேலும் புலிகள் தரப்பில்

1.அரசியல் புரிதல் அதாவது இன சுயநிர்ணய உரிமையை பற்றியும்

அதன் தேவை பற்றியும் தவறான கண்ணோட்டம் புலிகளிடம் இருக்கு

(இந்தியாவின் அச்சாக செயல்படுவோம் என பாலசிங்கம் அறிவித்தது

இந்திய அடக்குமுறைக்கு ஈழம் உதவி செய்யும் என்பதுதான்
அதாவது தமிழ்நாட்டில் நாளை ஆயுதாங்கிய போராட்டம் சுயநிர்ணய உரிமைக்கு வருகிறது எனில்

அதை ஒடுக்க நாங்கள் துணை நிற்போம் என்பது உட்பட பொருந்தும் என புரியலாம் )


2.ஒரு லட்சியத்துக்காகா கூட கூட்டை அங்கீகரிக்காமல் ஒற்றை தலைமையை நிருவி பேணுவது


+3.தனிநபர் துதி பிரபாகரன் மீட்பர் அவர் ஒரு கடவுள் ரேஞ்சுக்கு பேசுவது


3.எதிர் கருத்து கொண்டவர்களை கொல்லுதல் இப்படி ராணுவம் துப்பாக்கி இவற்றை மட்டும் நம்பி களமிறங்கியது புலிகள்

மிதவாதிகள் நடுநிலையாளர்கள் கம்யூனிஸ்டுகள் யார் விமர்சனம் வைத்தாலும்

துப்பாக்கியின் மூலம் பேசுயது.


ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் பெருவாரியான மக்களின் ஆதரவு பெற்றிருந்து அது

மக்களின் போராட்டமாக இருக்க வேண்டும் , அது இல்லாத போது மக்கள் ஒரு குழுவிடம் தங்கள் சுமையை இறக்கி

அவர்கள்விடுதலை பெற்று தருவார்கள் என பேசாமல் இருந்து விடுவார்கள் .


மக்கள் வேறும் சந்தா கட்டுபவர்களாக அரசியல் இல்லாத பாமர்களாக வைத்து இருப்பது

மிக கொடுமை .


நீங்கள் சோர்வடைந்தாலும் மக்கள் போராடவேண்டும் வியட்நாமை போல

சுருக்கமாக ஆயுதங்களுக்கு பதில் மக்களை நம்புங்கள்

வல்லரசுகளுக்கு பதில் ஆதரவு சக்திகளை நம்புங்கள்


இன்னும் புலித்தலமை இந்தியாவையும் அமெரிக்காவையும் நம்பிக்கொண்டு இருக்குமாயின் அது தவறானதே

தமிழ் நாட்டில் இருக்கும் ஓட்டுவாங்கி கட்சிகள் புலிகளுக்கு தவறான பாதையையே காட்டி இருக்கிறார்கள்

ஆட்சி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்னும் கட்டுகதை

(போருக்கு முக்கிய காரணம் ராஜிவ் கொலைக்கு வஞ்சம் தீர்ப்பது தான் என நம்பியது

எனவே ஆட்சி மாறும் வரை புலிகளை காத்திருக்க சொன்னது )


இருக்கும் நிலமையில் புலிகள் தனது ஆதரவு சக்திகளை பெருக்கிகொண்டு போராட்டம் நடத்த முடியும் மாறாக

இந்தியா போன்ற நாடுகளின் உதவி என்னிக்கும் கிடைக்காது .

இவை மட்டுமல்லாது ஈழத்தின் கள நிலமைகளை அவர்கள் மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும்

விமர்சனங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்

வர்க்கம் ,ஏகாதிபத்தியம் , தரகு முதலாளி எனும் வார்த்தையை கேட்டால் முன்பு கசக்கும்

ஆனால் அதுதான் உண்மை

எல்லா விசயங்களிலும் வர்க்க நலன் ஒழிந்துள்ளது .....



















--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post