அன்பிற்குரிய என்
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
என்னை உனக்கு தருவேனே
மண்ணை காக்க போராடும்
உன்னை மறுபடி மீட்போமே
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
கொல்லும் கொல்லும் மனிதரையே -நாம்
வெல்வோம் வெல்வோம் ஒருநாளே
கல்லும் கரையும் உன் கதையை
காட்டி காட்டி படையெடுப்போம்
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
சொல்ல சொல்ல குறையாத
சோகம் சொல்லி கிடப்போமா
மெல்ல மெல்ல கொதித்தெழுந்து
விண்ணை முட்ட நிற்போமா
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
எனது நாளின் முடிவினிலே
உனது நாளும் உதித்தெழலாம்
எனது கண்ணீர் வெப்பத்திலே
உனது கதையும் மாறிடாம்
துடைத்தேன் கண்ணீர் கைகளினால்
எடுத்தேன் தீர்வை இன்றைக்கே
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
சிவந்த மண்ணில் உதித்தெழுவாய்
மறந்த தமிழன் மலைத்திடுவான்
வசந்த நாளை கொண்டாட
வரிசை கட்டும் மலர்களெலாம்
பிறந்து வருவாய் நாளைக்கே
சிவந்த கண்களில் சிரிப்போடு
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================