இன்றைய வாழ்வின் சோம்பேறித்தனம்




இன்றைய வாழ்வின் சோம்பேறித்தனம்  
















 Image result for pics of grinderImage result for pics of grinder and mixer                                                          நமது வாழ்வில்  நவீன உபகரணங்களின் வளர்ச்சி  












நன்மையை செய்வதை விட தீமையே அதிகம் செய்துள்ளது 













தீமை என நான் குறிப்பிடுவது சோம்பேறிதனத்தையே . 













எங்கெல்லாம் சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம்











குணக்கேடுகள் அதிகமாக உருவாகின்றன .
















அந்த காலத்தில எங்கம்மா 8 படி திணை அரைக்கனும் 7












படி கம்பு அரைக்கனும் என்றார் ஒரு முதியவர் . இரண்டு விசயங்கள்












ஒன்று அன்றைய கால உணவு முறை மற்றும் உடல் உழைப்பு இரண்டும்











இந்த வாங்கியங்களில் தெரிகிறது .

















தொழிற்சாலைகளின் வளர்ச்சி வேலைவாய்ப்பு அதன் தொடர்ச்சியான்











நாட்டின் முன்னேற்றம் என்ற கோசம் எழுப்பபடுகிறது . பழைய சினிமா பாடல்











ஒன்று "நெல்லு குத்த மாவரைக்க மிசினு "  என்ற வார்த்தைகள் மூலம் நமக்கெல்லாம்











மேற்கண்ட வேலைகளுக்கு இயந்திரங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் 











என்ற சேதியை சொல்கிறது . ஆனால் நாம் இந்த நவீன யுகத்தில் இவற்றை பெற்றுள்ளோம்











இதன் மூலம் மனித உடல் உழைப்பை குறைத்துள்ளோம் அதன் பலனாக நாம் அடைந்தது











சோம்பேறித்தனம் தானே.



















நேரத்தை மிச்சப்படுத்த கண்டு பிடித்த உபகரணங்களில் இரண்டு 











ஆப்சன் வைக்க வேண்டும் ஒன்று மனித உழைப்பு வேண்டும் என நினைக்கும் போது 











அதே கிரைண்டர் கையால் ஆட்டபட முடிய வேண்டும் .இது முட்டாள் தனமாக











தெரியலாம் . ஆனால் யோசித்து பாருங்கள் இந்தியாவில் சுகர் பேசண்டுகள் அதிகம்











நமது உணவு முறையும் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதுமே காரணம் .











சைக்கிளிங் செய்வதற்கு ஜிம்முக்கு போகிறோம் ஆனால் ஏன் ஆபீசுக்கே 











சைக்கிளில் சென்றால் என்ன? 



















உடல் உழைப்பு குறைய குறைய மூளை உழைப்புக்கு அதிக 











மகத்துவம் தரப்படுகிறது . ஒரு விவசாய கூலி ரூபாய் 200 பெறுகிறான் என்றால்











ஒரு கணக்காளன் ரூபாய் 500 பெறுகிறான் . ஆனால் நவீன காலத்தில் உடல் உழைப்பு











எந்தளவுக்கு குறைத்து மதிப்பிட படுகிறதோ அதே அளவுக்கு அந்த வேலைகளை 











செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை . ஏனெனில் அனைவரும் உடல் உழைப்பில் இருந்து











விடுதலை அடைந்துவிட துடிக்கிறார்கள் .

















நமது அன்றாட வாழ்வில் நாம் எப்படி உடல் உழைப்பை 
அதிகரிக்கலாம் என சிந்தனை செய்யும் நேரம் இது . 
















மேற்கண்ட எனது கட்டுரை தீமை என குறிப்பிடுவது












நமது உடல் நல குறைபாடுகளையே மைய படுத்தியது ஏனெனில் .













1 நம்மால் ஒரு நாற்பது கிலோ மூட்டையை தூக்கி 














100 மீட்டர் நடக்க முடியுமா 
















2 100  மீட்டர் தூரம் மூச்சு வாங்காமல் நிற்காமல் ஓட 



முடிகிறதா சுமார் 40 வயதை தாண்டியவர்கள் 













இதெல்லாம் அளவு கோல்கள்



















நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் .


ஏனெனில் நான் மேற்கண்ட சோதனைகளை செய்து பார்த்து அன்றாட
வாழ்வில் உடல் உழைப்புக்கான முக்கியத்துவம் வேண்டும் என்ற 

முடிவுக்கு வந்துள்ளேன்.






1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post