அதி பயங்கர காய்ச்சல்கள் திருப்பூரை உலுக்கி கொண்டு இருக்கிறது
தினமும் யாராவது டெங்குவுக்கு பழி என்கிற சேதி தினமும் வீடு வந்து சேர்கிறது , வழக்கம்
போல் அரசு இயந்திரம் மாநகராட்சி நிர்வாகம் ஊராட்சி அமைப்புகள் இதை பற்றி அக்கரை கொள்வதிலிருந்து
தப்பித்தி மெத்தன போக்கில் இருந்தது ,இந்த காய்ச்சல் எல்லாம் எங்கே நமக்கு வரப்போகிறது
என்று இருமாந்திருந்தபோதுதான் வந்தது டெங்கு எனது மகனுக்கு முதல் நாள் காய்ச்சல் தூக்கி
போட்டது அதனால் ஆஸ்பத்திரிக்கு வந்தோம் என்று எனது மனைவி போன் செய்த போது அவனுக்கு
மிக சாதாரண காய்ச்சல் என்று நினைத்தேன்.
இந்த டாக்டர் சில மருந்துகளை எழுதி நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறைதவறாமல்
கொடுக்கனும் என்று சொல்லி விட்டார் . நாங்களும் தவறாமல் கொடுத்து வந்தோம் 5 நாட்கள்
கழித்து அதே டாக்டரிடம் சென்றோம் மறுபடியும் மருந்துகள் எழுதி கொடுத்தார் – பாவம் அவருக்கு
அவரது மெடிக்கல் சாப்பில் இருக்கும் மருந்துகளை விற்று தீர்க்க வேண்டுமே என்ற கவலை.
கண்டிப்பாக இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்ற எங்களது வற்புறுத்தலின்
பேரில் பரிசோதனை செய்து பார்த்து டெங்கு என்று உறுதி படுத்தினார் ஆனால் மனுசன் நேரில்
வந்து சொல்லாமல் நர்சிடம் சொல்லி அனுப்பிட்டார் . உடனே அவரிடமே எந்த ஆஸ்பத்திரிக்கு
கூட்டி செல்லலாம் என கேட்ட போது கோவை கே எம் சி எச்க்கு அழைத்து செல்லுங்கள் அல்லது
அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றார் .திருப்பூரில் எந்த ஆஸ்பிடல் அழைத்து
செல்லலாம் என கேட்டதற்கு குமார் நகரில் இருக்கும் ஒரு ஆஸ்பத்திரியின் பெயரை சொல்லி
அழைத்து செல்ல சொன்னார் .
அப்போது
மகனுக்கு பிளேட் செல்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பதினேழு ஆயிரம்
அன்று
இரவு பெட்டில் சிகிச்சை பெற்றான் காலையில் இரத்த சிகிச்சை எடுத்து பார்த்தபோது
எண்ணிக்கை
வெறும் 60 ஆயிரமாக மாறிவிட்டது.
என் மனைவிக்கோ
கண்ணீர் நிற்கவே இல்லை . உடனே தம்பிக்கு போன் செய்து எங்கே அழைத்து போகலாம் என கேட்டதற்கு
கோவை கே எம் சிஎச்க்கு என்றான் அப்போது
நாங்கள் இருக்கும் ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ச் செய்ய லேட்டாகும்
என இழுக்கடித்தார்கள்
உடனே நமக்கு தெரிந்தவர்கள் ஒரு பத்து பேர் கிளம்பி வந்தார்கள்
ஒரு சின்ன வாக்குவாதத்துக்கு பிறகு சரி டிஸ்சார்ச் செய்கிறோம் என்றார்கள் ஆனால் அவர்களது
ஆம்புலன்சில்தான்
கொண்டு செல்லனும் என்றார்கள் . அதெல்லாம் முடியாது என்று
எனது பைக்கில்
வைத்து ஒரு ஸ்டாப் தாண்டியதும் நாங்களே வேறு ஒரு தனியார் ஆம்புலன்சை புடித்து கோவைக்கு
சுமார் 35 நிமிடத்தில் கொண்டு சென்றோம்.
அதற்குள்
எனது நண்பர் பாலன் உடனே பப்பாளி இலை சாரை கொடுங்கள் என சொன்னார்
இன்னொரு நண்பருக்கு போன் செய்யவும் ஒரு குவளையில் பப்பாளி சாரு
வந்து விட்டது ஆம்புலன்சும் வந்து விட்டது .
ஆம்புலன்சில்
சோர்ந்து படுத்து இருந்தவன் ஆஸ்பத்திரியில் இறங்கியவுடன் நன்றாக விளையாட ஆரம்பித்தான்.
(ஒரு வேளை பப்பாளி சாற்றின் மகிமையாய் இருக்கலாம்).
ஆஸ்பத்திரியில்
அனுமதி போட்டதும் இரவு முழுக்க முழித்து தண்ணீர் கொடுத்து மூத்திரம்
போகும்
அளவை எழுத சொன்னார்கள் இதை நானும் மனைவியும் மாற்றி மாற்றி கவனித்து
கொண்டோம்
. அடுத்த நாள் பிளட் செல் எண்ணிக்கை குறையவில்லை என்றார்கள் மறுநாள்
இன்னும்
கொஞ்சம் நிம்மதி வந்தது.
பொங்கலன்று
குழந்தை மிக நன்றாக தேறி விட்டான் என டாக்டர் சொன்னது டிஸ்சார்ச்
செய்தோம்
இதை படிப்பவர்கள்
டெங்கு குறித்த விழிப்புணர்வை பெறவும் சில கேடுகெட்ட தனியார் மருத்துவ மனைகளின் காசு
ஆசைக்கு பழியாகமல் இருக்கவும் இதை இங்கு எழுதுகிறேன்
http://www.emedicinehealth.com/dengue_fever/article_em.htm