தாலி மீதான போர்

தரித்திரம் மீதான போர் துவக்க சொன்னோம் ஆனால் நண்பர்கள் தாலி மீதான போரை துவக்கி இருக்கிறார்கள் . எல்லாமே பேசன் ஆன காலத்திலேயே தாலி இல்லாமல் செல்வது மங்கையரிடம் பேசன் ஆகிப்போனது என்பதை அவர்கள் அறியவில்லை பாவம். எதுக்குடா நாங்க தாலி கட்டனும் என பெண் கேட்பாளே ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க நாம் புகும் போது , ஒருத்தன் புனிதம் என்கிறான் , இன்னொருத்தன்
அடிமைத்தனம் என்கிறான்.
புதிரா புனிதமா என்ற கேள்வியை போல நாம் ஒழிக்க நினைப்பது புனிதத்தையா அல்லது அடிமைத்தனத்தையா என்ற கேள்வியை நாமே நமக்குள் கேட்டு பார்த்தால் –புனிதமே அடிமைத்தனத்தை தன்னுள் கொண்டுள்ளது என சொல்கிறார்கள் .
நான் கேட்கிறேன் தனது மனைவியின் தாலியை அறுத்து அடிமை தனத்தை ஒழிக்கும் ஒரு நண்பன் தனது தொழிலாளியை தன்னுடன் சக பார்ட்னராக்கி கொள்வானா ?
தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளிக்கு இன்றைய நிலவரப்படி கூலி கொடுக்க முன்வருவானா?
எது முற்போக்கு , தாலியை ஒழிப்பதா கூலி அடிமைத்தனத்தை ஒழிப்பதா
சாதி, சமய மாற்றமா அல்லது சமூக மாற்றமா?
சமூக மாற்றத்தை நிகழ்த்தி பார் சாதி சமய மாற்றங்கள் தானே வரும் .
திராவிடம் பேசி , இந்தியை ஒழித்து , தன்மானம் பேசிய இவர்களே இன்று தங்கள் குழந்தைகள் இந்தி படிக்கவும் மஞ்சள் துண்டை போட்டுக்கொண்டு நாட்டை சுரண்டவும் அணிவகுத்து நின்றார்கள் .’

இவர்கள் போலிகள் இவர்கள் எடுத்துள்ள கடைசி ஆயுதம்தான் தாலி - அதுவும் போலிதான்

தாலி அறுப்பு சிலை உடைப்பு மதத்தின் மீது காறித்துப்புதல்
மதத்தை வளர செய்யுமா மழுங்க செய்யுமா?

மதம் இவர்களுக்கு வேண்டும் ஏனெனில் இவர்கள் சண்டை போட ஆள் இல்லாவிடில் இவர்கள் இல்லை

இவர்கள் இருத்தலுக்கான அடிப்படை இல்லை

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post