கருத்தை கருத்தால் அடிக்கவும்



கருத்தை கருத்தால் அடிக்கலாம் கல்லால் அடிக்கலாமா என நண்பர்கள் கேட்கிறார்கள் கடவுள் இல்லை என்று சொன்னார் சும்மா இருந்தார்கள்
தாலி வேண்டாம் என்று சொல்கிறார் என்றவுடன் ஏன் கொந்தளிக்கிறார்கள்.
உடனே உள்மூளையும் வெளிமூளையும் சூடேறி நமது அம்மாவும் தாலி போட்டிருக்கிறாள் மனைவியும் தாலி போட்டிருக்கிறாளே அப்போ நாங்களெல்லாம் கேணையர்களா என்று கேள்வி கேட்டு சூடேறியது மூளை.
தாலி வேண்டாம் என்று சொல்லி உன் தாலியை அறுத்தால் நீ அவனை அடிக்கலாம் , அவனோ தான் பின் பற்றும் கொள்கைக்காக தனது தாலியை அவிழ்கிறான் உனக்கென்ன வந்தது.
கருத்தை கருத்தால் அடிக்க உன்னிடம் கருத்து இல்லை என்பது
பட்டவர்த்தனமாகிறது .


தாலி அடிமை சின்ன நான் கழற்றி எரிகிறேன் என்கிறான் .
நீயும் கோவிலுக்கு போய் மொட்டை போடுகிறாய் அதை எதிர்த்து கையில் கம்புடன் வந்தால் என்னாகும்.

மொட்டை போட சொன்னவன் முட்டாள் என சொல்லி அவன் படத்தின் மேல் மூத்திரம் பெய்தால் என்னாகும் .

கருத்து மக்களை பற்றி கொண்டால் அது அடங்கா சக்தி ஆகிறது என்றார் காரல் மார்க்ஸ் .

அந்த பயம்தானே உங்களுக்கு !  திக வை கண்டித்து ஒரு கருத்தரங்கம் , பட்டி மன்றம் ஒரு விழிப்புணர்ச்சி மாநாட்டை ஏன் இந்து முன்னனி நடத்த முடியவில்லை.
கருத்தை கருத்தால் அடிக்கும் வேலை இதுதானே
படத்தின் மீது மூத்திரம் பெய்தால் அந்த படத்துக்கு உரியவனை கேவல படுத்தலாம் ஆனால் அவன் கருத்து காற்றில் கலந்து இருக்கே என்ன செய்ய
ஒவ்வொரு நாளும் தாலியை நீ பார்க்கும் போது அந்த கருத்து கேள்வி கேட்டுமே இது அடிமை சின்னமா என்று ?
ஏன் பாரதி உனது துணைவியை அழைத்து வரவில்லை என கேட்டார் சகோதரி நிவேதிதா?
பெண்களை வெகுதூரத்துக்கு அல்லது மற்றவர்களை சந்திக்க அழைத்து வருவதில்லை என்றான் பாரதி .
தூ! உங்களுக்கு எதற்கு விடுதலை என்றாள் நிவேதிதை .

பெண்களை அடிமை கொள்ளும்மட்டும் உங்கள் நாட்டுக்கு ஏது விடுதலை என்றாள் துணிந்து.

திரும்பி வந்த பாரதி எழுதினான் கவிதை நிமிந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் வேண்டும் என்று.
உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நாம் பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறோமா?
அப்படி கொடுத்திருக்கிறோம் என்றால் அந்தகருத்தை நீங்கள் சமூகத்தில் சொல்லும் போது எடுபடும் என்றால் கருத்தை கல்லால் அடிக்க தேவை இல்லை . கருத்து மக்களை பற்றி கொள்ளும் அது பெரும் தீயாக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கும்.
தீர்க்கமான கருத்தை நீங்கள் நிலைநிறுத்தி விவாதிக்க திராணி இல்லை என்றால் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
புரட்சியாளர்கள் உங்கள் வீட்டில் இருந்து வருவார்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post