பெரும்பாலும் நான்
இந்த தொடர் எழுத்தில் தத்துவ போராட்டத்துக்குள் உங்களை அழைத்து செல்லவில்லை ஆகவே தத்துவ
போராட்டம் தேவை இல்லை என்ற கருத்தை சொல்ல வரவில்லை .
எங்கெங்கு காணினும்
சக்தியடாங்கிற மாதிரி எங்கு பார்த்தாலும் தத்துவ போராட்டம் நடைபெற்று கொண்டே வருகிறது
. இங்கு போராட்டம் மற்றும் போட்டி இன்றி எதுவுமில்லை .
உலகை குறித்து
பேசிய தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு விதமாக கற்பிதம் செய்தார்கள் விளக்கினார்கள் ஆனால்
விசயம் அதை மாற்றுவதை பற்றியதுன்னு சொல்லி முதலில் தத்துவத்திலிருந்து செயலுக்கு மனிதனை
கையை பிடித்து இழுத்து வந்தார் மார்க்ஸ்.
கருத்தியல் அப்படின்னு
சொல்றோமே அப்படி என்றால் என்ன வென ஆராய்வோம் . …. ஏனெனில் பொருள்முதல் வாதம் மற்றும்
பொருட்களுக்கிடையே முரண் ஆகியவற்றை பேசி அப்படியே முன்னேறி சென்றால் இங்கே கருத்துமுதல்
வாதிகள் என்பவர்கள் யார் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதே தெரியாமல் போகும்.
முக்கோணம் என்றால்
என்ன தெரியுமா? அதாவது நமக்கெல்லாம் மூன்று
பக்கங்களை கொண்டது அனைத்தும் முக்கோணம். ஆனால் முக்கோணம் எந்த பொருளால் ஆனது அதன் நிறமென்ன
, சுவை என்ன அதன் கணம் என்ன என்பதெல்லாம் கவனத்தில் நாம் கொள்கிறோமா? இல்லையே.
உலகில் எந்த பொருளால் ஆக்கப்பட்டாலும் ஒரு கருப்பு பலகையில் சாக்பீசால் வரையபெற்றாலும் மூன்று பக்கங்களை கொண்டது முக்கோணம் என்கிறோம் அதாவது முக்கோணம் என்பது கருத்துரு.
நாம் கண்ணால் காணும் உலகம் என்பது உண்மை இல்லை
நமது புலன்களால் முழு உலகத்தையும் அதன் சாராம்சத்தையும் புரிந்து கொள்ள இயலாது . கருத்துருவம்
தான் உலகம் . கருத்துருவத்தை வைத்து தான் நாம் உலகை அறிய முடியும் என்றார் ஹெகல் .
வட்டம் என்பது கருத்துரு , ரோடு , வீடு , மக்கள் எல்லாமே கருத்துருதானே
அதைத்தான் புடிச்சி கிட்டாரு. அதற்கு மேலே போய் கருத்துருக்கள் எல்லாமே மனிதன் தோன்றுவதற்கு
முன்பே இருந்தது இன்னமும் இருக்கும் அதை அழிக்க முடியாதுன்னு சொன்னார் .
அடுத்து இந்த கருத்துருவை எல்லாம் படைத்த பெரிய கருத்து அதாவது
முழு முதல் கருத்து ஆன்மா அல்லது கடவுள் அப்படின்னார் .
அடுத்து இந்த முழுமுதல் கருத்தே தன்னை அறிந்து கொள்ள இயக்கவியல்
ரீதியாக முயன்று படிப்படியாக தன்னை அறியும் என்றார்.
கொஞ்சம் பொறுங்க பாஸ் என்றார்கள் நம்ம பொருள் முதல் வாதிகள்
.
சில கருத்துருக்கள் எப்போது தோன்றியது எப்போது மறைந்தது என்று
நமக்கு தெரியும் புலோகிஸ்டான் என்பது ஒரு கருத்துரு அதாவது ஒரு பொருளில் நெருப்பை பற்றவைத்தால்
அது எரிவதற்கு காரணம் அதில் புலோகிஸ்டான் என்ற பொருள்தான்ன்னு நம்பிட்டு இருந்தாங்க
அதான் ஈதர் என்ற கருத்து நிலவுச்சே அது போல .
அப்படி எந்த பொருளும் இல்லை என விஞ்ஞானம் நிரூபிச்சவுடன் அந்த
கருத்துருவும் போய்விட்டது .
ஆக மனித இனம் தோன்றுவதற்கு முன்பே முக்கோணம் இருந்திருக்கலாம்
ஆனால் மனிதன் மூளை கருத்துருக்களை உருவாக்குவது சொற்ப காலத்துக்கு முன்பே அத்துடன்
இந்த கருத்துருக்கள் அனைத்து மனித சமூகத்தோடு மறைந்து போகும் .
ஆகவே நாம்முன் இருக்கிற உலகம் பொருளால் ஆனது என்பது உண்மை .
மேசை என்ற கருத்து மேசை என்கிற பொருள் இருப்பதால் உருவானது மேசை
இல்லை என்றால் மேசை என்ற கருத்துரு என்ன செய்யும்.
ஆகவே கருத்துமுதல் வாதிகள் இந்த இடத்தில் தோற்று போனார்கள் ஆனால்
ஹெகலிடம் இருந்து இயக்கவியல் என்கிற அற்புதமான படைப்பாற்றல் மிக்க தத்துவத்தை எடுத்து
பொருள்முதல் வாதத்தில் புகுத்தியதுதான் மார்க்ஸ் செய்த தத்துவ புரட்சி
//அகநிலைக்கும் புறநிலைக்கும், தோற்றத்திற்கும் சாரத்திற்கும், சார்புநிலைக்கும் முழுமைக்கும் ஒவ்வொன்றும் மற்றவற்றோடு கொண்டுள்ள உறவையும் ஈடுபாட்டையும் ஹெகலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்று லெனின் கூறுகின்றார்.//
பொருள் முதல்வாதம்
|
உலகம் பொருட்களால் ஆனது
|
|
கருத்து முதல் வாதம்
|
உலகம் கருத்தால் உருவானது , கருத்தால் நிர்வாகிக்கப்படுவது
கடவுள் ஆன்மா உண்டு
|
|
இயக்கவியல்
|
பொருட்கள் எல்லாமே இரண்டு முரண்பட்ட எதிர்மறை கூறுகளால் ஆனது
, இவற்றிற்கிடையே நடக்கும் முரண்பாடு , ஒற்றுமை மற்றும் போராட்டத்தை உண்டாக்குகிறது
|
இயக்கவியலை கருத்துமுதல் வாதியான ஹெகல் தனது தத்துவ விளக்கத்துக்கு
எடுத்து கொண்டார் , மார்க்ஸ் அதை பொருள் முதல்வாதத்துக்கு கையாண்டு – மூலதனம் அதன்
இயக்கம் அதன் வளர்ச்சி ஆகியவற்றை ஆராய்ந்து சொன்னார்
|
Tags
communism