மத்தியதர வர்க்கமும் அரசுடன் இருக்கும் முரண்பாடும் தற்காலிகமானதும்
அரசியல் அற்றதும் ஆகும் . மத்தியதரவர்க்கம் எப்போதுமே ஊசலாட்டத்துடன் இருக்கும் வர்க்கம்
என்ற போதிலும் அன்னா ஹசாரே சட்ட ரீதியான தீர்வுக்கு முன் நின்றபோது மத்தியதர வர்க்கத்தின் படிப்பாளிகளும் ஒன்றிணைந்தார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலும் மத்தியதரவர்க்கத்தை நோக்கத்தில் வைத்தே
காய் நகர்த்துகிறார் . ஆனால் அவர் ஒரு முடிவில்லா சிக்கலில் மாட்டி கொள்கிறார். மத்தியதர
வர்க்கம் அடிப்படையில் போர்குணம் உள்ள வர்க்கம் அல்ல . அதன் வரலாற்று பாத்திரம் அதை
ஒரு இடைநிலை கருவியாக வைத்திருக்கிறது.
இழப்பதற்கு ஏதுமில்லாத பாட்டாளி வர்க்கம் மீண்டும் மீண்டும்
அந்த நிலையில் தள்ளப்பட ஒரு கருவியாகவும் தானே ஒடுக்குபவனாகவும் மத்தியதரவர்க்கத்தினர்
இருக்கிறார்கள் .
அரசு என்பது எப்போதுமே ஒரு ஒடுக்கும் கருவி என்றும் அதன் சட்டம்
அதன் அதிகாரம் எல்லாமே ஆளும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துக்கு சேவை செய்யும்
என்றும் , ஆளும் வர்க்கத்தின் விரல் நுனிக்கு சின்ன காயம் என்றால் கூட இந்த சட்டம்
போலீசு இராணுவம் ஆகிய அனைத்து படைகளும் சேர்ந்து நம்மை நசுக்கிவிடுவார்கள் என்பதை நாம்
அறிவோம் ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் அறியவில்லை .
ஏனெனில் புரட்சிகர அரசியல் இல்லாத போது சீர்திருத்த அரசியல்
வருகிறது.சீர் திருத்த அரசியல் அதன் வர்க்கதன்மையுடந்தான் மிளிர்கிறது.
சட்டங்களை திருத்துவதன் மூலம் லஞ்ச லாவண்யத்தை ஒழித்துவிட முயல்கிறார்
அரவிந்த் கெஜ்ரிவால்.
அது நடக்காது முடியாது?
இன்று ஜெயாவை இதே சட்டம் தான் பாதுகாத்து இருக்கிறது.
ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் நோக்கம் தூய்மையானது அவரர் செய்திருக்ககிற
வேலையை இன்று இடதுசாரிகள் செய்திருக்க வேண்டும் .
அதை செய்யாமல் தவற விட்டு விட்டு கெஜ்ரிவாலை குறை சொல்லி பிரயோசனமில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நபர்களை மத்தியதரவர்க்கத்தின் அரசியல்வாதின்னு
தனிமை படுத்தி விமர்சிப்பதன் மூலம் நாம் நேரே காங்கிரசின் விமர்சனத்தை வைக்கிறோம்.
ஊழலற்ற அரசு வேண்டும் என்று எந்த வழிமுறையில் கேட்டாலும் நோக்கம்
ஒன்றுதான் அதுதானே இடதுசாரிகளின் நோக்கமும் ஆகும்.
கெஜ்ரிவாலுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு அவரது அரசியலையும்
இடது சாரி வர்க்க போராட்டத்தையும் ஒன்றிணைக்க முடியுமா என்று இடதுசாரி தலைவர்கள் யோசிக்க
வேண்டும்.
வர்க்க அரசியல் தெரியாமல் போராடினாலும் பிரயோசனமில்லை
வர்க்க அரசியல் தெரிந்து போராடா விட்டாலும் பிரயோசனமில்லை
உண்மையில் அரசு என்பது பரிசுத்தமானது
என்றும் அரசியல் வாதிகள் தலையீடு இல்லை என்றால் அதன் நீதி நிர்வாகம் சூப்பராக
இருக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பலாம் ஆனால் அரசு என்பது ஒடுக்குமுறை
கருவி அது அந்த கால நிலவுடமை அரசு என்றாலும், இன்று இருக்கும் போலி ஜனநாயகம்
என்றாலும் அரசு அரசு எந்திரம் , அரசியல் எல்லாமே ஒரே பல்சக்கரத்தில் இயங்குவதே.
ஒரு சட்டத்தை போராடி இயற்றி விட்டால்
அனைவரையும் திருத்திவிடலாம் என மனபால் குடிப்பது எவ்வளவு பேதமை . எனக்கு மற்ற
தோழர்கள் சொன்னது போல இவரும் ஒரு என் ஜி ஓ தானோ என்கிற சந்தேகம் வருகிறது
இருக்கலாம்.
இன்று எல்லா என் ஜி ஓக்களும் போராட
துவங்கிட்டாங்க ஆனால் இதன் அர்த்தம் போராட்டம் நடத்துவதும் ஒரு ஆபிஸ் வேலை போன்றே
செய்வது நமக்கு ஆபத்தானது மக்களை குழப்புவது வர்க்க ஒற்றுமையை குலைப்பது ஆகும் .
ஊழலுக்கு எதிராக ஒட்டு மொத்த சமூகமும்
எழுந்து நின்று கை தட்டி விட்டால் ஊழல் ஒழியும் என்றால் அது காமெடியான விசயம் ஊழலின் அடி நாதம் முதலாளித்துவம்
முதலை வளர்க்க ஊழல் செய்யும் முதலாளி
, முதலாளித்துவ கண்ணோட்டம் வளர்ந்ததால் எதையும் சாதிக்க பணம் கொடுக்கும் பாட்டாளி
முதல் மத்தியதர வர்க்கம் வரை ஊழல் இங்கு பரவி உள்ளது.
மற்றொரு புறம் ,மத வாத சக்திகள்
தங்களது காலை விரித்து அகண்ட பாரதம் என்ற கூச்சல் போட்டாலும் முதலாளிகளுடன்
அவர்களது நலனுக்கு தீங்கு இல்லாமல் கூட்டணி வைக்கும் போது அரவிந்து கெஜ்ரிவாலின் முன்னனி
படையில் இருக்கும் மத்தியதரவர்க்கம் சிதறி ஓடி விடுகிறது அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையானவர்
எனில் அவர் ஆதரிக்க வேண்டியது உழைக்கும் மக்களை மட்டுமே.