கம்யூனிசம் என்றால் என்ன ?-21

இந்த உலகத்தை நாமெல்லாரும் எப்படி புரிந்து கொள்கிறோம் . ஒரு பணக்காரனுக்கு பணம் சம்பாதிக்கும் இடம் ஒரு லும்பனுக்கு தனது கேளிக்கை பொருள் ஒரு தொழிலாளிக்கு தொழில் கூடம் ஒரு கவிஞனுக்கு கற்பனைகளை விரித்து செல்லும் ஒரு வெளி .


ஆனால் உலகம் என்பது ரெடிமேட் சட்டை மாதிரி ரெடி மேட் உலகம் இல்லை . டிஸ்னி லாண்ட் மாதிரி கடவுள் இதை உருவாக்கி தரவில்லை என்பதே பொருள் முதல்வாதிகளின் கருத்து.



 ஹெகலின் இயக்கவியல் :
கடவுள் என்பதெ கற்பிதம் என்ற செவிட்டில் அறைந்து சொன்னார்கள் . நாம் முற்பகுதியில் பேசிகொண்டு இருந்ததை போல ஹெகல் தனது இயக்கவியலை தலைகீழாக நிறுத்தி இருந்தார் மார்க்ஸ் வந்து அதை தலையை மேலே கொண்டு வந்து நேராக நிற்க வைத்தார் லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்) நூலில் இருந்து

 //இங்குப் பொருள்முதல்வாதக் கருத்துநிலைக்குத் திரும்பி வருவதன் விளைவாக ஹெகலியத் தத்துவத்திலிருந்து பிரிந்து செல்ல நேர்கிறது. அதாவது, எதார்த்தமான உலகத்தைஇயற்கை, வரலாறு இரண்டையும்முன்னரே மனதில் உருவாக்கிக் கொண்ட கருத்துமுதல்வாத கட்டுக்கதைகள் எதுவுமில்லாமல் அணுகுகின்ற ஒவ்வொரு வருக்கும் அது எப்படிக் காட்சி தருகிறதோ, அப்படியே புரிந்து கொள்வதென இக்கருத்துப் பிரிவினர் முடிவெடுத்தனர் என்பது இதன் பொருளாகும்.
 கற்பனாவாத விளக்கங்கள் இல்லாமல், தாமாகவே உருவான மெய்விவரங்களோடு பொருத்திப் பார்க்க முடியாத கருத்துமுதல்வாதக் கட்டுக்கதை ஒவ்வொன்றையும் பலியிடுவதென்று ஈவிரக்கமின்றித் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொருள்முதல்வாதம் என்பதற்கு இதைக்காட்டிலும் கூடுதலான அர்த்தம் ஏதுமில்லை.

ஆனால், இங்கே பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டம் முதல்முறையாக உண்மையிலேயே அக்கறையோடு கவனிக்கப்பட்டது. தொடர்புடைய அறிவுத் துறைகள் அனைத்திலும்குறைந்தபட்சம் அதன் அடிப்படைக் கூறுகளிலாவதுமுரணின்றி எடுத்துச் சொல்லப்பட்டது.
ஹெகல் வெறுமனே ஒதுக்கி வைக்கப்படவில்லை. மாறாக, மேலே விளக்கப்பட்ட அவருடைய தத்துவத்தின் புரட்சிகரமான பகுதியே அதாவது இயக்கவியல் வழிமுறையே தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த வழிமுறை அதன் ஹெகலிய வடிவத்தில் பயன்படுத்த முடியாததாய் இருந்தது. ஹெகலின் கருத்துப்படி, இயக்கவியல் என்பது கருத்துருவின் சுயவளர்ச்சியே (self-development of the concept) ஆகும். [ஹெகலின் கருத்துப்படி] தனிமுதலான கருத்துரு (absolute concept) ஊழிக் காலந்தொட்டு நிலவி வருவது மட்டுமல்லஎங்கே இருக்கிறது என்று தெரியவில்லைஇன்று நிலவுகின்ற மொத்த உலகத்தின் மெய்யான உயிர்த்துடிப்புள்ள ஆன்மாவாகவும் இருக்கிறது. [ஹெகலின்] தர்க்கவியல் (Logic) நூலில் மிக விரிவாக விளக்கப்படுகின்ற தொடக்கநிலைக் கட்டங்கள் அனைத்தின் வழியாகவும் அது தன்னை நோக்கித் தனக்குள்ளேயே வளர்ச்சி அடைகிறது.

அக்கட்டங்கள் அனைத்தும் அதில் உள்ளடங்கியிருக்கின்றன. பிறகு அது இயற்கையாக மாறுவதன் மூலம் தன்னைஅந்நியமாக்கிக் கொள்கிறது” (alienates). அங்கே தன்னுடைய சுய உணர்வு இல்லாமலே, இயற்கையின் கட்டாயம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு, அது ஒரு புதிய வளர்ச்சிக்கு உள்ளாகிறது. இறுதியில் மறுபடியும் மனிதனுக்குள் சுய உணர்வாக வந்து சேர்கிறது.

 தனிமுதலான கருத்து, அதன் செழுமையற்ற வடிவத்திலிருந்து முடிவில் ஹெகலின் தத்துவத்தில் முழுமையாக அதன் மூல வடிவத்துக்கு மீண்டும் வந்து சேரும் வரையில், இந்த சுய உணர்வு, வரலாற்றில் மறுபடியும் தலை தூக்குகிறது. ஆகவே, ஹெகலின் கருத்துப்படி, இயற்கையிலும் வரலாற்றிலும் காணப்படுகின்ற இயக்கவியல் வளர்ச்சி, அதாவது, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு நடைபெறுகின்ற முற்போக்கு இயக்கத்தின் காரண வகைப்பட்ட இடைத்தொடர்பு, கோணல் மாணலான இயக்கங்கள் அனைத்திலும், தற்காலிகமான பின்னடைவுகளிலும், தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்கிறது. அது, ஊழிக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற கருத்துருவினுடைய சுய-இயக்கத்தின் ஒரு நகல் மட்டுமே. அது எங்கே போகிறதென்று யாரும் அறிந்ததில்லை.

ஆனால் எவ்வாறாயினும் சரி, எந்தவொரு சிந்திக்க வல்ல மனித மூளையையும் சாராமல் சுதந்திரமாக இயங்குகிறது. இந்தச் சித்தாந்த நெறிபிறழ்வை ஒழித்தாக வேண்டியிருந்தது. எதார்த்தமான பொருள்களைத் தனிமுதலான கருத்துருவின் (absolute concept) ஏதோவொரு கட்டத்தின் பிரதிபிம்பங்களாகக் கருதுவதற்குப் பதிலாக, எங்கள் மூளையில் இருந்த கருத்துருக்களை எதார்த்தமான பொருள்களின் பிரதிபிம்பங்களாக, மீண்டும் ஒருமுறை பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொண்டோம்.

இவ்வாறாக, இயக்கவியல் என்பது, வெளிப்புற உலகம், மனித சிந்தனை ஆகிய இரண்டின் இயக்கம் பற்றிய பொதுவான விதிகளின் விஞ்ஞானமாகத் தன்னை எளிதாக்கிக் கொண்டது. இயக்க விதிகளின் இந்த இரண்டு தொகுதிகளும் சாராம்சத்தில் ஒத்த தன்மை கொண்டவை. ஆனால், எந்த அளவுக்கு மனித மனம் அவற்றை உணர்வு பூர்வமாகச் செயல்படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தமது வெளிப்பாட்டில் வேறுபடுகின்றன.

இயற்கையிலும் இன்று வரையுள்ள மனித வரலாற்றின் மிகப் பெரும்பகுதியிலும், புறநிலைத் தேவை என்ற வடிவத்திலே, தற்செயலானதாகத் தோற்றமளிக்கும் முடிவில்லாத தொடர்வரிசையான நிகழ்வுகளின் நடுவே, இந்த விதிகள் உணர்வுகளைச் சாராமலேயே தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன.

இதன்மூலம், கருத்துருக்களின் இயக்கவியலுங்கூட, எதார்த்த உலகின் இயக்கவியல் வழிப்பட்ட இயக்கத்தின் வெறும் உணர்வுபூர்வமான பிரதிபலிப்பு ஆயிற்று. இவ்வாறாக, ஹெகலின் இயக்கவியல் புரட்டிப் போடப்பட்டது. அல்லது சரியாகச் சொல்வதெனில், தலையை ஊன்றி நின்று கொண்டிருந்ததைத் திருப்பிப் போட்டுக் காலால் நிற்கும்படி செய்யப்பட்டது. //

ஆக நிகழ்ச்சி போக்குகள் கருத்துக்களின் முரண் அதன் வளர்ச்சியை தருவது போல அனைத்து பொருட்களுக்குள்ளும் ஏற்பட்டுள்ள முரண் பட்ட கூறுகளே இயங்கி கொண்டு உள்ள அவையே தொடர் வளர்ச்சியை கொண்டு வருகிறது என்றார் மார்க்ஸ் இந்த இயக்கமானது பொருள்வகை உலகில் மட்டுமில்லாமல் தத்துவ உலகிலும் / சமூகத்திலும் / இலக்கியத்திலும் அனைத்து பகுதிகளிலும் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன .

 இதற்கு ஒரு எல்லையே இல்லை . ஹெகல் சொல்வது போல தன்னைநோக்கி தானே வளர்ந்து கொண்டிருப்பது தனிமுதல் கருத்து அல்ல அது மொத்த உலகின் மாற்றமும் ஒரு இயக்கவியல் பாதையில் இருக்கிறது என சொன்னார் மார்க்ஸ் . ஒரு தொடர்ந்து எரியும் தீ சுவாலை போல இந்த உலகம் அமைக்கப்பட்டுள்ளது என சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்ததெல்லாம் வெறும் வாய் சவடால் அல்ல விஞ்ஞான பாதை .

கருத்துருக்களே நமது புலணறிவினால் உருவாக்க முடியும் ஆகவே தானேயான கருத்துருன்னு எதும் இல்லை எப்படின்னா இந்த நூலில் மார்க்ஸ் தரும் விளக்கம் பாருங்கள்
//இத்தகையதானேயான பொருள்களாகவேஇருந்து வந்தன. அவ்வாறு நாமே உற்பத்தி செய்த பிறகு, “தானேயான பொருள்நமக்கான பொருளாய் ஆனது. எடுத்துக்காட்டாக, மாஞ்சிட்டிச் செடியிலிருந்து கிடைக்கும் சாயப் பொருள் அலிஸரின் (alizarin). இந்தச் சாயப் பொருளுக்காக இனிமேல் நாம் மாஞ்சிட்டிச் செடியை வயலில் பயிரிட்டுச் சிரமப்பட வேண்டியதில்லை.
அதைவிட மலிவாகவும் எளிதாகவும் நிலக்கரித் தாரிலிருந்து அலிஸரினைத் தயார் செய்து கொள்கிறோம். கோப்பர்நிக்கஸின் சூரிய மண்டல அமைப்புமுறை முன்னூறு ஆண்டுகளாக ஒரு கருதுகோளாகவே இருந்து வந்தது.
இந்தக் கருதுகோள் உண்மையாவதற்கு நூறு, ஆயிரம், பத்தாயிரத்தில் ஒரு வாய்ப்பு இருந்த போதிலும், அது இன்னும் கருதுகோளாகவே இருந்து வந்தது. ஆனால் லெவெரியே (Leverrier) அவர்கள் சூரிய மண்டல அமைப்பிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இதுவரை அறியாத கிரகம் ஒன்று இருப்பதன் அவசியத்தைத் தருவித்தது மட்டுமின்றி, வானத்தில் இந்தக் கிரகம் கட்டாயமாக இருக்க வேண்டிய இடத்தையும் கணக்கிட்டுக் கூறினார்.

கால்லே (Galle) அவர்கள் உண்மையாகவே இந்த கிரகத்தைக் கண்டுபிடித்தபொழுது, கோப்பர்நிக்கஸின் அமைப்புமுறை நிரூபிக்கப்பட்டது. [பெர்லின் விண்ணாய்வுக் கூடத்தின் வானியல் அறிஞரான ஜோகன் கால்லே 1846-இல் கண்டுபிடித்த நெப்டியூன் கிரகம் இங்கு குறிப்பிடப்படுகிறது].

அப்படியிருந்தும், நவீன கான்ட்டியவாதிகள் ஜெர்மனியில் கான்ட்டியக் கருத்துருவுக்கும் (Kantian Concept), இங்கிலாந்தில் அறியொணாவாதிகள் (agnostics) ஹியூமின் கருத்துருவுக்கும் (அங்கே உண்மையில் அது ஒருபோதும் மறைந்துபோய்விடவில்லை) புத்துயிரூட்ட முயன்று வருகிறார்கள். கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் இத்தகைய கருத்துருக்கள் நீண்ட காலத்துக்கு முன்னரே மறுக்கப்பட்டு விட்டவை என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இவர்களின் [கான்ட்டியவாதிகள் மற்றும் அறியொணாமைவாதிகளின்] முயற்சி விஞ்ஞானரீதியில் ஒரு பின்னடைவாகும். மேலும், நடைமுறையில் பொருள்முதல் வாதத்தை உலகத்துக்கு முன்னால் மறுத்துவிட்டுத் திருட்டுத்தனமாக அதனை ஏற்பதற்குரிய வெட்கக்கேடான வழிமுறையே தவிர வேறில்லை.//


எதையும் அறிய முடியாது என்பதற்கும் எல்லாமே கருத்துருவம்தான் என்பதற்கும் விஞ்ஞான வளர்ச்சி பெரிய அடியை கொடுத்தது. புற உலகத்தை பற்றிய அறிவே அக உலகம் என்றும் அக உலகை கொண்டு ஆராய்ந்து அறிவதன் மூலம் புற உலகை மாற்றி காட்டுவதே புரட்சிகரமான சிந்தனை என்றும் சொல்லி வெறும் வரட்டு தத்துவத்துக்கு ஒரு ஆப்பு அடித்தார் மார்க்ஸ்
சாராம்சம்:
கருத்து முதல்வாதம்
அக உலகு நிரந்தரமானது அது அழிக்க முடியாதது . எல்லா இயக்கமும் வட்ட பாதையில் செல்வது ஆகவே இயக்கம் இல்லை என்றும்
சொல்கிறது ஆன்மா கடவுள் என்கிற உயர்ந்த லட்சியத்தை கொண்டது

பொருள் முதல்வாதம்
உலகம் என்பது பொருட்களின் தொடர் இயக்கம் , உலகம் தொடர் வளர்ச்சியை கொண்டுள்ளது அதற்கு காரணம் அதனுள் இருக்கும் உள்முரண்பாடு தனி முதலான கருத்து என்பது இருக்க இயலாது ஏனெனில் உண்மை என்பது தொடர் இயக்கத்தில் இருக்கும் உலகில் நிரந்தரமாக இருக்கும் பொருள் எதுவும் இல்லை

மார்க்சின் சாதனை
இயக்கத்தின் அடிப்படை முரண்பாடுகள் என்றும் ஹெகல் கையாண்ட தத்துவ முறையை பொருள்முதல் வாதத்துக்கு கொண்டு வந்ததும் ஆகும் இதன் மூலம் மனித சமூகம் தொடர்சியான மாறுதலுக்கு என்ன காரணம் என்ன முரண்பாடு என்பதை அறிய முடிந்தது , அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானிக்க இயன்றது





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post