கம்யூனிசம் என்றால் என்ன- 19



         
 

 எந்த ஒரு பொருளை எடுத்து கொண்டாலும் அது இரண்ட முரண்பட்ட எதிர்மறைகள் இணைந்தது.

ஒரு அணு என்பது எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் இணைப்பு ஆகும். அதை போன்றதே சமூகமும் இரண்டு வர்க்கங்களின் இணைப்பு மற்றும் அவற்றிற்கிடையே முரண்பாடு போராட்டம் இவற்றை கொண்டு வளர்ச்சி பெருகிறது .
வளர்ச்சி என்பது நேர்கோட்டு வளர்ச்சி இல்லை அது சுழன் ஏனியை போன்ற வளர்ச்சியாகும்

எதிர்மறைகள் என்பது எல்லா விதமான துறையிலும் அடிப்படையானது :
கணிதத்தில் பார்த்தால் + மற்றும் – மற்றும் வகையீட்டு கணிதம் vs ஒருங்கிணைந்த கணிதம்
இயந்திரவியல் : செயல் மற்றும் எதிர் செயல்
பெளதிகத்தில் : நேர் மின்சாரம் மற்றும் எதிர் மின்சாரம்
வேதியலில் : அணுக்கள் ஒன்று சேர்த்தல் மற்றும் அணுக்கள் பிரிதல்.
சமூக விஞ்ஞானத்தில்: வர்க்க போராட்டம்   (இயக்கவியல் பிரச்சனை பற்றி லெனின்)
அணுக்களை நாம் நேரடி கண்களால் காண இயலாது. ஒரு இரும்பு கட்டில் துரு பிடித்து போவதை நாம் நிறைய தடவைகள் பார்த்திருக்கிறோம்.
அது ஏன் நடக்கிறது என்பது அறிவியல் என கருதி அதை பெயிண்ட் அடிப்பதில் மும்பரமாகி விடுவோம் .
நாம் ஏன் பிறக்கிறோம் , வளர்கிறோம் , பின்பு மூப்பு எய்தி இறந்து போகிறோம். புத்தருக்கு இந்த கேள்வி பிறந்தது.
அவர் ஞானமடைந்து சொன்னார் . ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று ,
சரி ஏன் பிறக்கிறோம் , வளர்கிறோம் , முதிர்வடைகிறோம் பிறகு இறக்கிறோம்.
எல்லாம் விதிதான் என்று நம்மவர்கள் சொல்வார்கள் . ஆம் இயற்கை முழுக்க அமைந்திருக்கும் விதி அதுதான்.
எல்லா பொருட்களும் ஆழ்ந்த உள்முரண்பாடுகள் உள்ளது அதனாலேயே அது வளர்ச்சி அடைகிறது , பிறகு அழிகிறது அந்த அழிவில் இருந்து இன்னொரு
பொருள் உருவாகிறது.
இப்படி அகல்விளக்கில் தூண்டப்பட்டு எரியும் தீ தொடர்ந்து எரிவது போல
வாழ்வின் ஒவ்வொரு கணமும் பழையது கழிந்து புதியது பிறக்கிறது.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்க செல்லும்போது , தீ பற்றும் பொருட்களை அருகே கொண்டு செல்ல வேண்டாம் என்று எழுதி போட்டு இருப்பார்கள் கவனித்து இருப்பீர்கள்  பெட்ரோல் அதிக உள் முரண்பாடுகளை உடையது. வெளியே இருந்து கொண்டு செல்லப்படும் தீக்குச்சி வெளி முரண்பாடு ஆகும்.

சீனாவின் உள்நாட்டு பூசல் அந்த நாட்டின் உள் முரண்பாடு – வெளி நாடுகள் சீனாவை பிடிக்க நினைத்த போது அது வெளி முரண்பாடு .

இந்த நேரத்தில் உள்முரண்பாடுகளை கவனியாது வெளி முரண்பாட்டுக்கு அழுத்தம் கொடுத்தார் மாவோ.

ஆகவே நமது உடல் முதல் அகண்ட பூலோகம் வரை , கட்சிகள் இயங்கங்கள் அமைப்புகள் எல்லாவற்றிலும் முரண்பாடுகள் உள்ளது

ஒரு பொருள் அதன் இயக்கம் வளர்ச்சி குறித்த இரண்டு கருதுகோள்கள் இருப்பதாக மேற்கண்ட நூலில் லெனின் விவரிக்கிறார்.
முதல் கருதுகோள் ஒரு பொருளின் இயக்கம் மற்றும் வளர்ச்சி வெளியே இருக்கும் தூண்டுகோளை சார்ந்தது (கடவுள் கோட்பாடு) என்பது கருத்து முதல்வாத கோட்பாடு

ஒரு பொருளின் இயக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவை அதன் சுயசார்பானது என கொள்வது – இயக்கவியல் கோட்பாடு ஆகும்

முதலாளியும் தொழிலாளியும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்வதை கேட்கிறோம்.

எதிர் நிலமைகளின் ஒற்றுமை என்பது தற்காலிகமானது நிபந்தனைக்கு உட்பட்டது அந்த நிபந்தனை முடிவுறும் போது போராட்டம் பிறக்கிறது. வேலை நேரத்தை தன்னிஸ்டமாக முதலாளி அதிகரித்தாலோ – தொழிலாளி குறைத்தாலோ போராட்டம் அதிகரிக்கும் .

ஒரு கம்பெனியில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் அல்லது 12 மனி நேரத்திற்கு
இவ்வளவு சம்பளம் என்று இருந்தால் ஒரு நாள் காலை முதல் அறிவிப்பு வருகிறது இந்த நேரம் 16 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது என்று, என்ன செய்வார்கள் தொழிலாளர்கள் .மெளனமாக ஏற்று கொள்வார்களா?  அங்கே போராட்டம் நடக்க வேண்டும் அப்படி நடக்கவில்லை என்றால் வர்க்க உணர்வு இல்லை என்று அர்த்தம் .
மூலதனம் முதல் பகுதியின் முதல் அத்தியாயம் கீழே
//சரக்குகளின் பரிவர்த்தனையானது முரண்பாடான, ஒன்றையொன்று விலக்குகிற நிலைமைகளைச் சுட்டுவதாகும். சரக்குகள் சரக்குகளாகவும் பணமாகவும் பிரிவது இந்த முரண்பாடுகளை ஒழித்துவிடுவதில்லை. அவை ஒருங்கே சேர்ந்திருக்க முடிகிற ஒரு வழிமுறையை அது வளர்த்திடுகிறது. பொதுவாக , இதுவே மெய்யான முரண்பாடுகளை இணக்கப்படுத்தும் ஒரு வழி.

சரக்குகள் யாருக்கு அவை பயன்..மதிப்புகள் அல்லவோ அவர்களிடமிருந்து யாருக்குப் பயன்..மதிப்புகளாகின்றனவோ அவர்களுக்கு மாற்றப்படுகின்ற நிகழ்முறையே பரிவர்த்தனை என்பதால் அது ஒரு சமுதாயப் பொருள்வகைச் சுற்றோட்டம்.

சரக்கானது பயன்..மதிப்பாகப் பயன்படக் கூடிய ஓய்விடத்தைக் கண்டுகொண்டதுமே பரிவர்த்தனைத் துறையிலிருந்து நுகர்வுத் துறைக்குள் விழுகிறது.

சரக்குகள் சரக்குகளாகவே பரிவர்த்தனை நிகழ் முறையில் நுழைகின்றன. இந்நிகழ்முறை பிற்பாடு அவற்றைச் சரக்குகளாகவும், பணமாகவும் வேறுபடுத்துகிறது; இவ்வாறு, அவற்றில் உள்ளார்ந்துள்ள அக எதிர்நிலைக்கு .. ஒரே நேரத்தில் பயன்..மதிப்புகளாகவும், மதிப்புகளாகவும் இருத்தல் என்ற அக எதிர் நிலைக்கு ... இணையான புற எதிர் நிலையை அது தோற்றுவிக்கிறது.//

அதாவது இதில் புரிஞ்சி கொள்ள சிரம படவேண்டியதில்லை .
சரக்கு என்பதே இங்கு இரண்டு தோற்றம் எடுக்கிறது

உதாரணமா நீங்க வீட்டுக்கு ஒரு டிவி வாங்கினா அது பயன்மதிப்பு , விக்கிறதுக்கு பத்து டிவி வாங்கினால் அது சரக்காகிடும் .

(சரக்குன்னதும் டாஸ்மார்க் சரக்கை மட்டும் நினைவில் கொள்ள கூடாது)
ஆக ஒரு சரக்கு குள்ளயே இரண்டு மதிப்புகள் இருப்பது எதிர்மறைகளின் ஒற்றுமை மற்றும் போராட்டம் ஆகும்.

சாராம்சம்:
எல்லா பொருட்களும் அடிப்படையில் பொருள்முதல்வாத ரீதியாக அணுகப்படவேண்டியது அதே போல் பொருளாயத உலகின் , சமூக வாழ்க்கை என்பது பொருள்முதல்வாத ரீதியாக அணுகப்பட வேண்டியது.
பொருள்முதல் வாதம்
உலகம் பொருள்களால் ஆனது
மூளையின் கருத்தை சார்ந்து பொருள் இருப்பதில்லை
பொருள்
இரண்டு எதிர்மறை களை கொண்டது
இடையே ஒற்றுமையும் போராட்டமும் உள்ளது
வளர்ச்சி என்பது
எதிர் மறைகளின் போராட்டம் ஆகும்
முரண்பாடு என்பதே வளர்ச்சி ஆகாது

பொருள் என்பது இரண்டு முரண்களின் இணைப்பு மற்றும் அவற்றின் போராட்டமே அந்த பொருளின் வளர்ச்சியை தீர்மாணிக்கிறது. தனியொரு பொருள் நீண்ட காலம் மாறாமல் இந்த உலகில் இருப்பதில்லை.

சமூகமும் அதன் உள்முரண்பாடுகளால் இயங்கி வருகிறது .

மூலதனம் என்பது பண்ட உற்பத்தியில் இருக்கும் பயன்மதிப்பு . பரிவர்த்தனை மதிப்பு
என்கிற இரு முரண்பாடுகளை கொண்டது.


-தொடரும் 













1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post