ஏமாறாதே ஏமாற்றாதே

ஏமாறாதே ஏமாற்றாதே
 
 
என ஒரு பழைய எம் ஜி ஆர் பாடல் இருக்கிறது நாமும் ஏமாற கூடாது அடுத்தவனையும் ஏமாற்ற கூடாது என்பதை
 
அழகாய் சொல்லி செல்லும் வரிகள் சில வாழ்க்கை அனுபவத்தில் பொருத்தி பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமூட்டுவதாக
 
நம்மை நினைத்தே சில நேரம் சிரிப்பதாகவும்தான் இருக்கிறது
 
 
வேறொன்றும் இல்லை ஒரு வாரத்துக்கு முன்பு பழைய வண்டியை விட்டு ஒரு புதுவண்டி எடுக்கலாமேன்னு ஹீரோ ஹோண்டா
 
சோரூமுக்கு போனேன் திருப்பூரில் இருப்பதில் மிக பெரிய சோரூம் அது .
 
 
வண்டி லோனுக்கு எடுக்கிறேன் என்று சொன்னதும் என்னை லோன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பினார்கள்
 
அவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தினேன் எந்த பேங்கென்று கேட்கிறீர்களா?  HDFC பாங்கிதான்
 
வண்டி எடுத்தாச்சு ரெஜிஸ்ரேசன் செய்தாச்சு எல்லாம் ஓக்கே
 
லோன் வழங்கும் நபர் எத்தனை செக்குசார் கொடுக்க போகிறீர்கள் என கேட்டான்
 
எத்தனை வேணும் என சொன்னதற்கு 23 டியூ இருக்கு 23 கொடுத்தா ஓக்கே
 
இல்லை எனில் 4 செக் கொடுங்கள் நான்கள் ECS ல் போட்டு விடுகிறோம் அதற்கு
 
தனியே 250 என்னிடம் தந்துவிட வேண்டும் என்றான் நானும் சரி என சொல்லிவிட்டு வந்தேன்
 
எந்த பேங்கும் சார்ஜ்களை கேசாக வாங்காதே என சந்தேகம் எனக்கும் சுமார் ஒருவாரம்
 
தருகிறேன் என சொல்லி விட்டு விசாரித்து பார்த்ததில் அம்மாதிரி 250 ரூபாய் ECS க்கு
 
என்று பிடிப்பதில்லை அப்படி பிடித்தாலும் உங்கள் அக்கவுண்டில்தான் பிடிப்போம்
 
கேசாக வாங்க மாட்டோம் என்றார்கள்
 
               
ஹ ஹா அட தியாகு ஏமாற பாத்தியேடா என்று நினைத்து அந்த லோன் செக்சன்
காரரிடம் கேட்டதற்கு
 
சொன்னார் " அதாவதுங்க உங்க அக்கவுண்டு 0044 என்ற சீரியலில்ல் ஆரம்பித்தால்
 
சார்ஜஸ் கிடையாது 0073 என ஆரம்பித்தால் கொடுக்கனும் என்றானே பார்க்கலாம்
 
எனக்கு சிரிப்பு தாங்கலை
 
 
படித்த படிக்காத பாமர ஜனங்கள் எத்தனையோ பேர் புதுசா ஒரு வண்டி வாங்க
 
வரும் போது இதை யெல்லாம் பெரிசா எடுத்து கொள்வதில்லை அவன் கேட்பதை
 
கொடுத்து விடுகிறார்கள்
 
ஆனால் இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று
 
 
வங்கி நடைமுறை தெரியாத நபர்களை ஏமாற்றுவது , பணம் பறிப்பது என ஒரு பெரிய
 
கொள்ளையே நடந்து வருகிறது நாம் அன்றாட வாழ்வில் துளி எதிர்ப்பையும் தெரிவிக்காது
 
அடங்கி அல்லது கண்டுக்காமல் போகிறோம்
 
ஒரு ஏமாற்றை கண்டு பிடிக்க்க அல்லது தட்டிகேட்ட நமக்கு நேரம் செலவாகலாம்
 
ஆனால் ஏமாற்றை தடுத்தோம் எனும் உணர்வுக்கு முன்பு அது பெரிதல்ல
 
பிறகு ஆர் .டி ஓ ஆபிசில் ஏமாற்று வேலைஇ
 
வண்டி பதிய 240 ரூபாய் வாங்குகிறார்கள் இந்த ஏஜெண்டுகள்
 
நேரடியாக எந்த ஒரு வட்டார போக்கு வரத்து அலுவலரும் ஈடுபட்டு இந்த
 
பணத்தை வாங்கிவதில்லை
 
இந்த 240 எதுக்கு என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை
 
நாளை அதையும் கேட்க போகிறேன்
 
 
 
 
 
 
 
 
 
 

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post