கோவை சந்திப்பு (Minutes of the Meeting)

கோவை சந்திப்பு நடக்க தொடங்கியது சுமார் 10.30 மணி இருக்கலாம் .

நான் மாடிப்படி ஏறி சென்றபோது அய்யா ஞானவெட்டியான் பேசிக்கொண்டு
இருந்தார். எத்தனையோ பாடல்களுக்கு விளக்கம் அளித்துவிட்டதாகவும்
இன்னும் எத்தனையோ பாடல்கள் மிச்சமிருப்பதாகவும்  (அவர் சொன்ன
எண்களை மறந்து விட்டேன்) .

 நான் உள்ளே நுழைந்ததும் இவர்தான் செம்மலர்- தியாகு என்று அறிமுகப்படுத்தினார்
தமிழ்பயனி சிவா கூட்டத்திற்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு அமர்ந்தேன்.

ஒருபக்கம் நரைத்த இளைஞர்கூட்டம் (?) ஒரு பக்கம் நரைக்காத இளைஞர் கூட்டம்
என ஒரு 25 பேராவது இருப்பார்கள் என நினைத்தேன் . நான் வருவதற்கு முன்பு
அய்யா sVR சுப்பையா சிலருக்கு பொன்னாடை போர்த்தி ரணகளப்படுத்திட்டு
போயிருக்கிறார். (என்னது பொன்னாடையா ?)
 
அடுத்து பேசதொடங்கிய லதானந்த் தான் எந்தெந்த பத்திரிக்கைகளில் எழுதினார்
(அவரது பத்திரிக்கை நண்பர்கள் பற்றியும் )என்றும் அவரது தொடர்கள் எவையெவை
பாதியில் நிறுத்தப்பட்டன என்றும் தான் ஒரு பிரச்சனைக்குரிய நபராக இருப்பதே
தனக்கு பெருமை அளிக்கும் விசயமாக இருப்பதாகவும் தனக்கு எந்த ஒரு சமூகமாற்ற
லட்சியமும் இல்லை எனவும் தான் "எழுதுவதே: ஜாலிக்குத்தான் என்றும் ஜாலியாக
படிக்க ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என்றும் சொல்லி முடித்தார் .

பெரிய கைத்தட்டல் போட்டு அவரது உரையை வாழ்த்தினோம் ஏன்னா உள்ளதை
உள்ளபடி சொல்லும் ஆட்கள் குறைவு பாருங்க அதனாலதான். :)

அடுத்து நம்ம ஓசை செல்லா பேசினார் வழக்கம்போல 30 ஆயிரம் பேர் கொண்ட குழுமத்தை
நடத்தி வந்ததை சொல்லியும் (எங்கடா இதை சொல்லாமல் போகபோராப்பலன்னு நினைச்சேன்)
ஆதியில் கூக்ளி இல்லாத போதே தாங்கள் யாகூ குழுமங்கள் நடத்தி வந்த கதையும்
இப்பல்லாம் தமிழ் மணத்தில் எழுதுபவர்களில் விசயங்கள் குறைந்து விட்டதால் தாம்
எழுவதில்லை என்றும் சொல்லிகிட்டே போனார் .

இடையில் சஞ்சய் நீங்கதானே தமிழச்சின்னு ஒரு குண்டை போட்டார்  . வேகமாக மறுத்த செல்லா
சும்மா இருப்பான்னு அந்த தொப்பி போட்ட பையனை கண்டித்துவிட்டு தொடர்ந்தார்.

அடுத்து ஸ்ரீபேசினார் தன்னைபற்றி அறிமுகத்துக்கு பிறது முத்தமிழில் தான் எழுதியதை சொன்னதும்
மிக முக்கியமாக தமிழ் விக்கின்னு அவரே ஒன்று தொடங்கி அதை நடத்தி வருவதாகவும்
கதை கவிதை கட்டுரை நண்பர்கள் வழங்கி உதவனும்னு சொன்னவர் தமிழ் மேல் தனக்கு
தீராத காதல் இருப்பதாகவும் அது ஒரு இனிய மொழின்னும் தானும் எத்தனையோ மொழி
படித்தபின் சொல்வதாகவும் சொன்னார் (சுமார் ஒரு 40 படிச்சு இருப்பீங்களா ஸ்ரீ :)

விக்கின்னதும் நம்ம செல்லாவுக்கு விக்கிடுச்சு ஏங்க விக்கி ஆரம்பிச்சப்பள இருந்து நான் இருக்கேங்க
ஒரு தனித்துவமே இருக்காதுங்க நாம ஒரு கட்டுரை போட்டா எவனாவது அதை எடிட் பண்ணுவான்
தேவையான்னு கேட்க . அப்படி எடிட் செய்தா என்னன்னு கேட்க இங்கே ஒரு விவாதம் ஆரம்பமானது
அட அவர பேச விடுங்ல்கப்பான்னது சரிங்க எடிட் செய்யமுடியாத வாய்ப்புகளை உருவாக்கலாம்னு சொன்னார்

முக்கியமா இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி டாட்.டிகேன்னா என்னாங்க ஏகப்பட்ட ஆளுக டாட் டீகேக்கு
மாறிட்டாங்களேன்னதும்.ஸ்பாம் அல்லது  வைரஸ் வரதோதான சர்வர் அது என்றும்அது ஒரு சர்வர்தான்
ஒரு சின்ன நாட்டோடது அதில் இலவச டொமைன் தந்தாலும் யாரும் வாங்காதீங்கன்னு
சொல்லப்போக செல்லாவும் தமிழ்பயணி சிவாவும் புடுச்சுகிடாங்க இதை தொடர்ந்து மண்டைகாயவைக்கும்
டெக்னிகல் சமாசாரங்கள் அலசப்பட பேசாமல் அமைதியா திருப்பூரிலேயே இருந்து இருகலாம்னு ஆயிபோச்சுங்க,

இன்னொரு நண்பர் பேசினார் அவர் பேசியதன் சாராம்சத்தை கவனிக்காமல் வடையை கவனித்து கொண்டு இருந்ததால் அவர் பேசிய விசயங்கள் மண்டைக்குள் ஏறலை அந்த நண்பர் மன்னிப்பாராக.
வெயிலான் மற்றும் அவருடன் வந்த இன்னொரு நண்பர் தியாகு பிளாக்க திருப்பூரில் இருக்கரவங்க கண்டிப்பா படிக்கனுங்க என்று எனக்கு ஐஸ் வைத்தார் .  (பிறகு விசாரித்ததில் "சிங்கள மானேஜர்களை வெளியேற்றுங்கள்" எனும் எனது பதிவை தனது முதலாளியிடம் காட்டியதாகவும் அதன் விளைவாக சிங்கள மேனேஜர் ஒருவர் ஏற்கனவே அவர்களிடம் இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதையும் தெரிவித்தார் )

"தியாகு நீ எழுதுவதெல்லாம் குப்பைன்னு அனானியா வந்து திட்டும் பாலா இதை கவனிப்பாராக"

சரி இதெல்லாம் முடிந்ததும் முக்கியமான வேலை ஒன்னு நடந்தது அதாங்க சாப்பாடு

தக்காளி ,லெமன்,தயிர் என அசத்திவிட்டார் மஞ்சூர்ராசா  குறிப்பா இந்த ஊட்டி பக்கம் இருக்கும்
மக்கள் உபசரனை தன்மை அதிகம்னு கேள்விபட்டேன் அதை நேரில் பார்த்தேன் (இந்த ஐஸ்
அடுத்த மீட்டுக்கு உதவுமுள்ள :) )

மற்றவிசயங்களை நாளை அல்லது எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப எழுதுகிறேன் வரட்டா .....
   
 

 


 



--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post