சாப்பாடு முடிந்ததும் நரைத்த இளைஞர்கள் பக்கம் போய் உக்கார்ந்து மெல்ல அவுக வாயை கிண்டினேன். (அதாங்க குப்புசாமி அய்யா,ஞானவெட்டியான், ஒரு எகாசிஸ்டு )
"அய்யா ஆன்மீகம் என்பது பேச்சு முடிந்ததும் துங்குதுன்னு
பெரியவுக சொல்லுவாக ஆனா நீங்க என்னடான்னா ஒரு நாளைக்கு பதினைந்து பதிவு போடுகிறேன் என சொல்றீங்களேன்னேன்.
"ஆன்மீகம் என்ற வார்த்தை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் வழக்கத்திற்கு வந்தது அதற்கு முன்பு இதை இறைநிலை என்பார்கள் " என்றார் .
நான் விடாம அதுசரிங்க "அந்த வார்த்தை மூலம் நீங்கள் புரிந்து கொள்ளும்
விசயத்தை பற்றி கேட்கிறேன்" என்றேன்
"எனது எழுத்துக்களில் ஆன்மீகம் இருக்கா இல்லையான்னு அதை படிப்பவர்கள் சொல்வார்கள் தியாகுன்னார்"
இதானோ கழுவுற மீன்ல நழுவுல மீனுங்கறது :)
அடுத்த கேள்விய போட்டேன் அய்யா ஆன்மீகம் மனுசனுக்கு என்னத்தை தருகிறது "மனநிம்மதியை" ன்னு கோரஸா பதில் வந்தது இந்த இடத்தில் ஆன்மீகத்தின் பக்கம் ஞானவெட்டியான் மற்றும் தொட்டராய சுவாமி மற்றும் ஏற்கனவே சொன்ன தலைகள் சேர்ந்துகிச்சு .
எதிரியா பார்க்கவைச்சு பகைமையை வளர்க்கும் நபர்களை உங்களை மாதிரி ஆன்மீக வாதிகள் எதிர்பதில்லை.
அட என்னடா இதுனுட்டு
மதம் எப்படி தோன்றியதுன்னு ஒரு விளக்கம் கொடுப்போம்னு
கொடுத்தேன் அதாவது ஆதிகாலத்தில் மனிதன் இயற்கை சீற்றம்
அவனை விச பலசாளி மிருகங்கள் மற்றும் இடி மின்னல் மழை
இவற்றை கண்டு பயந்தான் எனவே அவற்றை வணங்க ஆரம்பித்தான்
இடையில் புகுந்த நண்பர் நம்பிக்கை பாண்டியன்
அதுவும் ஒரு காரணம் ஆனால் அதுமட்டுமே காரணம் அல்லன்னு ஒரு போடு போட்டார் சரி வேறு என்னென்ன காரணம் என்றதும்
எகாலசிஸ்டு இடையில புகுந்து இவ்ளோ பேசுறீங்களே அறிவியல் பாதைன்னுட்டு சுனாமியை தடுக்க முடிஞ்சதாய்யான்னாரு பாருங்க
நாங்கேட்டேன் சரி கடவுளால் அல்லது அவரை நம்பும் உங்களை மாதிரி
ஆட்களால் சுனாமியை நிறுத்த முடிந்ததான்னேன்
பதில் இல்லைங்க
இந்த இடத்தில் புகுந்த சஞ்சய் அறிவியல் பாதை பற்றி விளக்கம் கொடுத்தார்
ஒர் ஆய்வகத்தில் உருவாகும் ஆக்சிசன் ஆய்வுமுறைக்கு உட்பட்டது
அதை யார்வேண்டுமானாலும் பரீசித்து பார்க்கலாம் என்றதும்
அதே போலதான் நாங்கள் சொல்லும் கடவுளும் நாங்க சொல்வது மாதிரி
செய்தால் தெரிவார் என்றார்கள்
நீங்க பாத்து இருக்கீங்களான்னா இல்லை நம்பிக்கைதான்னு சொல்வார்
நம்பிக்கை பாண்டியன் அதான் பேரே நம்பிக்கை பாண்டியனாச்சே.
ஆக்சிசன் வரும்னு சொல்றான் அதை நம்புறீங்கல்ல என்றார்
அதேபோலதான் கடவுள் நம்பிக்கையும்னாங்க
அய்யா ஆய்வு முறைகளை நம்பவேண்டாம் என மீண்டும் மீண்டும்
நானும் சஞ்சய்யும் கூவிகிட்டே இருந்தோம் அவை யார்வேண்டுமானாலும்
ஆய்வுக்கு உட்படுத்தகூடியது அது வெறும் நம்பிக்கையில் வாழ்வதில்லை
உங்கள் கடவுளை போலன்னேன்.
அறிவியலும் நம்பிக்கைதான்னு நிரூபிக்க ரொம்ப கஸ்டப்பட்டாங்கன்னா பார்த்துக்கங்க.
எத்தனையோ விசயங்களுக்கு அறிவியலால் இன்னும் விளக்கமளிக்க முடியாமலும்
இன்னும் எத்தனையோ விசயங்கள் அறிவியலால் கண்டறியபடாமல்
இருக்கலாம் ஆனால் அறிவியல் பாதையில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கிடைக்கும் எப்படி வானத்தில் பாட்டி உக்கார்ந்து வடை சுட்டுகொண்டு இருக்கிறாள் எனும் நம்பிக்கை சந்திரனில் ஆம்ஸ்டாங்க் இறங்கிபின் முடிவுக்கு வந்ததோ அதை போல ( இதைக்கூட காஞ்சி சங்கராச்சாரி கேள்வி கேட்டு இருந்தாருங்க எந்த சந்திரனில் இறங்கினார் சிவன் தலையில் இருக்கும் சந்திரனிலா நாம் பார்க்கும் சந்திரனிலான்னு -அதான் இவரை உள்ள உக்கார வைச்சாங்களோ)
இதுக்கு இடையில் ஞானவெட்டியான் அய்யா ஒரு வார்த்தைய விட்டாரு
"கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை"
இதெல்லாம் பேசும்போது செல்லா ஆட்டையில இல்லை ஏன்னா அவரு தலைசுத்தல்வந்து உள்ளபோய் படுத்துட்டாரு "பதிவர் சந்திப்பில் தூங்கியல் செல்லா" ன்னு பதிவு போட அதையும் போட்டா புடிச்சார் நம்ம சஞ்சய் :)
கடவுளை பத்தி பேசினா பொழுது போய்விடும் என சொல்லு
டாபிக்க மாத்தினோம் மத்தபடி என்ன பேசினோம்கிறத நாளைக்கு சொல்கிறேன்
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================