கோவை பதிவர் சந்திப்பு (minutes of the meeting -3)

என்னதான் சாமினா போட்டு இருந்தாலும் மொட்டை மாடியில் வெயில்
கொழுத்த ஆரம்பித்தது கல்வியை தலைப்பாக பேச ஆரம்பிக்க காரணமும்
நம்ம ஞானவெட்டியானும் செல்லாவும்தான் .

அவரு என்னென்ன படிச்சிருக்காருங்கன்னு கேளுங்கன்னு
செல்லா சொல்ல bsc யிருந்து CA வரை அந்தகாலத்தில் இருந்த
அனைத்து பட்டப்படிப்புகளையும் 28 டிப்ளமோக்களையும் படித்து

இருக்கிறேன் என்றார் அய்யா.

"இந்த கல்வி அமைப்பின் பயன் என்ன ?" இது நான்
ஒரு மண்ணும் இல்லை- ஞானவெட்டியான்

"முதலாளித்துவ சமூகம் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்வதில்லை
அது பொருள்களை மறு உற்பத்தி செய்ய தேவையான மனிதர்களையும்
மறு உற்பத்தி செய்கிறது அவர்களின் வேலைத்திறன் அறிவு இவற்றுடன்
கூட கேள்விகேட்காமல் அடிபணிந்து போகவும் கற்று தறுகிறது அவ்வாறு
இல்லை என்றால் இந்த சமூகம் உடைந்துவிடும் என்பதுதான் காரணம்
(தங்களது சுரண்டலை தொடர்ந்து நடத்தமுடியாது) " என்ற அடிப்படையில்

"கல்வி எதிர்புணர்வற்ற அடிபணிந்து
போகும் மனிதர்களை உற்பத்தி செய்கிறது" என்றேன்

அப்படி இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தரப்பட்டது
குப்புசாமி அய்யா தான் எஸ் ஐயாக இருந்தபோது
வி.வி கிரியின் மகன் தனது காரை அதிகவேகத்தில் ஓட்டிவந்ததற்காக
சார்ஜ் செய்தது அதை தொடர்ந்து உப்புசப்பில்லாத காரணத்துக்காக
அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டது என்பதை சொன்னார்(கிரி மகன்
காரையே நிறுத்தினியா நீ என்ன பெரிய ஆளா என கமிசனர் சொன்னாராம்)
.

உடனே சஞ்சய்யும் சிவாவும் இவர் தனது கடமையை சரியாகத்தானே
செய்தார் ஆனால் மெமோ கொடுக்கப்பட்டார் ஏன் என்றார்கள்

தனது கடமையை செய்வது மட்டுமல்ல தேவைபடும்போது எதிர்க்கவும்
வேண்டும் என்பதை விளக்கினேன்.

அறிவியல்தான் இந்த சமூக சீர்கேடுகளுக்கு காரணம் என சொல்லிவந்த
எகாலசிஸ்டு .

தற்போதைய அவசர அவசிய தேவை சுற்று புற சூழல் மாற்றமே
மக்கள் பிளாஸ்டிக் உபயோகிக்க கூடாது மற்றும் இருக்கும் இடத்தில்
எல்லாம் வீட்டை கட்டாமல் மரங்களையும் நடவேண்டும் என்றார்
இதன் தொடர்ச்சியாக விவசாயிகளும் பயிர் செய்வதற்கு பதில்
மரங்களையே நடவேண்டும் என்றது கேலிக்கூத்தாகிப் போனது

சுரேஸ் கேட்டார்" இருக்கிற இடத்தில் எல்லாம் மரம் போட்டுவிட்டால்
எதை சாப்பிடுவது "

சமூகத்தில் நடக்கும் விசயங்களை பெட்ரோல் விலைஉயர்வு , விலைவாசி
உயர்வு சாதாரணமக்கள் வாழமுடியாத சூழல் ஏகாதிபத்திய அடிவருடித்தனமான

அரசு இதை எதிர்க்க வேண்டாமா ஏன் எதிர்ப்பதில்லை

என்றதற்கு கேள்விகளை எங்களை நோக்கி கேட்காதீங்க

உங்களுக்குள்ளேயே கேட்டுகொள்ளுங்கள் என்றார்கள் .

இன்று பெட்ரோல் கிடைக்கவில்லை நாளைக்கு
சோறே கிடைக்காதே என்றதும் எங்களுக்கும் மட்டுமா எல்லாருக்கும் தானே
போயிட்டு போகுது என்றார்கள் .

தான் எழுதிய கதை அல்லது கவிதையை அடுத்தவன் படிச்சு இருக்கானா என்ன
சொல்ல நினைக்கிறான் எனும் நினைப்போடு வந்தவர்கள் சமூக அக்கறைபற்றிய
கேள்விகளை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம் ஒருவிதமான எரிச்சலும்
தனது கூட்டுக்குள் ஒருவன் கைவைக்கிறானே என்ற கோபமும் இருக்கலாம் :)

நம்பிக்கை பாண்டியன் மட்டும் நேர்மையாக் ஒத்துக்கொண்டார் இழப்பதற்கு
தயாரில்லை யாரும் தன்னுடைய நலன்களை அதான் எதிர்புணர்வில்லை என
நேர்மையாக பேசினார் .

அறிவியல் பற்றி பேசிய செல்லா வருங்காலத்தில் உடம்புகளில் இருக்கும்
எழும்புகளைகூட நீக்கிவிட்டு பதிலாக துருப்பிடிக்காத உலோகத்தை
பூட்டிவிடுவார்கள் என்றும் அறிவியல் முன்னேற்றம் எங்கேயோ போகப்போகுதுன்னும்
அத்தகைய முன்னேற்றம் வந்தால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்றார் .

அறிவியல் என்பது யாருக்கு சேவை செய்கிறது என்னும் ஞானமில்லாமல்
செல்லா இருக்கவில்லை அது முதலாளித்துவத்தின் கையில் இருக்கிறது என்றார்
ஆனால் இதை என்னால் கூட்டத்தில் சொல்லமுடியாது என்கிறார் :)
பானி பூரி கடையில் நின்றபோது . (இது கூட்டம் முடிந்ததும் நடந்தது)

அனுகரு இணைப்பின் மூலம் கட்டற்ற சக்தி உற்பத்தியானால் எல்லாம் கிடைக்குமே
பிறகு தொழிலாளி முதலாளி பாகுபாடு இருக்காதே என்கிறார் செல்லா
வாழ்க அவரது கனவு.

மொத்தத்தில் சமூகத்தை அவரவர் பானியில் பார்க்கும் மக்கள் சமூகரீதியாக
சிந்திக்கவில்லை அதன் காரணமாக யானையை பார்க்கும் குருடனைபோல
ஆளாளுக்கு ஒரு தீர்வு வைத்துகொண்டு பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்

இங்கு வந்துள்ள இளைஞர்களை நான் நம்புகிறேன் எந்த விசயத்தையும்
கவனித்து வந்துள்ள இவர்கள் சமூக புரட்சிக்கு வித்திடுவார்கள்
யார் கண்டது சார் இப்பதான் இணையத்தில் பிளாக் ஆரம்பிச்சு இருக்கேன்
இதன் அரசியல் புரியவில்லை என்ன நடக்குதுன்னு தெரியல
கண்ண கட்டிவிட்ட மாதிரி இருக்குன்னு சொன்ன தோழர்கள்
இணையம் சமூகத்துக்கு வெளியில் இல்லை என்பதை இந்த கூட்டத்தின் மூலம்
உணர்ந்து இருப்பார்கள் .

இணையம் சமூகத்தில் ஒரு சிறு பகுதி அதற்கு வெளியே வாழ்க்கை நிறைய
இருக்கிறது என்பது உண்மைதான் ஆனால் அது இணையத்தில் வெளிப்படுகிறது
ஆகவே இணையத்தை நன்கு பயன்படுத்தி ஒரூ விழிப்புமிக்க இளைஞர் கூட்டத்தை
ஏற்படுத்த முடிந்தால் (?) அவர்கள் காட்டில் வைத்த நெருப்பு போல புறப்படுவார்கள்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .

எந்த ஒரு சமூக மாற்றமும் ஒரு நாளில் நடக்காது என்பது மட்டும் நிஜம்
இத்தகைய சந்திப்புக்களை நடத்தும் நண்பர்களை வாழ்த்துகிறேன்.


--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post