இணைய உலகில் எழுத்து தவம் மேற்கொண்டுள்ள அல்லது ஜல்லி தவம் மேற்கொண்டுள்ள் அனைத்து
நண்பர்களும் வம்பர்களும் கோவையில் சந்திக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது .
சமூகத்தில் இணைய எழுத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அல்லது சமூகம் இணையத்தின் மேல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தோ அல்லது இவை எதுவும் இல்லாமல் வேறு ஏதாவதோ பேசலாம்.
நண்பரும் தோழருமானா பாமரனை அழைக்க இருக்கிறோம் அதன் பொறுப்பை செல்லாவிடம் விட்டு இருக்கிறோம் .
வரும் ஜூலை 13ம் தேதி கொங்குதலைநகரில் நடத்த முடிவு செய்து இருக்கிறோம்
இடம் பின்னர் அறிவிக்கப்படும் .
இணைய நண்பர்கள் சார்பில் செல்லா அவர்களும்
குழும நண்பர்கள் சார்பில் மஞ்சூர்ராசா அவர்களும்
தலைமை ஏற்று இந்த அழைப்பை வெளியிடசொன்னார்கள் .
வரப்போகும் நண்பர்கள் ஒரு பின்னூட்டம் இடுங்கள்
அல்லது seewtypie2000@gmail.com என்றா முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்
அன்புடன்
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================