மக இக அவதூறுக்கு பதில் - தமிழ் மணிக்கு

குறிப்பு: பச்ச கலரு புதிய ஜனநாயக கட்டுரை ; சிகப்பு கலரு அண்ணன் தமிழ் பெல்லோடது ; புளு கலரு நான் எழுதியது;




நண்பர்களே இந்த தமிழ் பெல் (அதாங்க தமிழ் மணியின்) தொந்தரவு தாங்க முடியலை என்னமோ பெரிசா ஒரு கட்டுரை
எழுதீக்கிறாரேன்னு பார்த்தா ரொம்ப குறைவான தனது மூளையை விரித்து போட்டு அடித்து ஆடி இருக்கார் .



///துப்பாக்கிகள் வெடிகுண்டுகளுடன் ஜூன் 25 ஆம் தேதியன்று கைதான "தோழர்கள்" பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்செல்வன் ஆகியோரும் பிறகு ஜூலை 8 ஆம் தேதியன்று கார்த்திக் ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதனை பற்றி புலம்பி புதிய ஜனநாயகம் பத்திரிக்கை ஆகஸ்டு 2007 ஆசிரியர் குழு எழுதிய தலையங்கம்:///


இவருக்கு எல்லாரும் புலம்புற மாதிரிதான் தெரியும் ஏன்னா இவரு ஒரு புலம்பல் கேசுன்னு இவர்கூட விவாதம் செய்த எனக்குத்தான் தெரியும் ஹி ஹி

//நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?//



//இந்த கட்டுரைக்கு என் பதில்///

சரி சொல்லுங்க


//நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?//
கடந்த ஜூன் 25ம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 பேரிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகிறது. மற்ற சிலர் தப்பிவிட்டதாகக் கூறி, சிலருடைய புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறது, போலீசு. ஜூலை 8ம் தேதியன்று இரவு சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் திருப்பூரில் கைது செய்யப்பட்டு, போலீசு விசாரணைக்குப்பின் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தப்பியவர்களைப் பிடிப்பதற்கு மதுரை மற்றும் பிற நகரங்களிலும் ""கியூ'' பிரிவு உளவுத்துறைப் போலீசு வீடுவீடாகச் சோதனை நடத்தியிருக்கிறது.

வீரப்பனின் பிணத்தைச் சுட்டுக் கைப்பற்றிய விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் எங்கும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

""தமிழகமெங்கும் 70 பேர் கொண்ட 70 ஆயுதக் குழுக்கள்!'', ""பெரியகுளத்தில் ஏ.கே47 துப்பாக்கிகள், ஆயுதப் புதையல்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள்'', ""ஆயுதப்படையில் சேருவதற்குத் தயாராக 600 மாணவர்கள்'' என்று விஜயகாந்த் சினிமாவை விஞ்சும் வகையில் திரைக்கதை எழுதுகின்றன, பத்திரிகைகள். "நக்சல் வேட்டை' என்று போலீசு அராஜகத்தைக் கொண்டாடுவது, விஜயகுமாரையும் உளவுத் துறை போலீசு அதிகாரிகளையும் ஏதோ உயிருக்குத் துணிந்த வீர சாகச நாயகர்களாகச் சித்தரிப்பது, கைது செய்யப்பட்ட தோழர்களை "அவன், இவன்' என்று ஏகவசனத்தில் எழுதுவது என நாலாந்தரமான போலீசு எடுபிடிகளாகவும் பரபரப்புக்காகப் பச்சைப் பொய்களைப் புனைந்து எழுதும் பேனாத்தரகர்களாகவுமே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
//



////அடேங்கப்பா, உங்கள் பத்திரிக்கையில் மற்ற எல்லோரையும் மிக மரியாதையுடன் விளித்துவிட்டீர்கள்! உங்களை மரியாதையுடன் அவர்கள் குறிப்பிடவில்லை என்பதுதான் ரொம்ப குறை!///



அதாவது பு.ஜவில் மரியாதை குறைவா யாரை திட்டுறாங்க ஓட்டு பொறுக்கிகளான சுயநல அரசியல் வாதிகளை மக்கள் விரோதிகளை அவனை திட்டுனா உனக்கு ஏய்யா கோபம் வருது இதான் கேள்வி நீ யாரு மக்கள் விரோதியா உன் சித்தாந்தம் என்ன என்று எங்காவது சொல்லி இருக்கியா பெரிசா பேச வந்துட்டாரு டவுசர் பாண்டி மாதிரி

//
மாவோயிஸ்டுகள் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயம் போல ஒரு சித்திரம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.
//


///இப்படியே மாவோயிஸ்டுகளை விட்டால், அது தமிழகத்தை சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயமாக ஆகிவிடுவார்கள் என்பது சரியான கூற்று. ஏமாந்த இளைஞர் உங்களுடைய 'கவர்ச்சிக் காட்சிகளை' நம்பி உங்கள் பின்னே போய் துப்பாக்கி ஏந்தி எவராவது ஒரு கிராம வாசியைச் சுட்டுத் தள்ளிக் கிரிமினலாக மாறிப் பின் போலிசால் சுடப்பட்டு இறக்க நேரிடும் அவலத்தைத் தவிர்க்கவும்தான் உங்களால் ஏற்படக் கூடிய அபாயம் எல்லாம் உருப்பெருக்கிக் காட்டப் படுகிறது என்று ஒருமுறையாவது தோன்றியதோ உங்களுக்கு? அதெப்படித் தோன்றும். பிரச்சினையாக இருந்துதானே பழக்கம் உங்களுக்கு. விடையாக இருந்தே பழக்கமில்லையே. இந்த முறை விடை உங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவதுதான் ஏனெனில் நீங்கள் மற்றவர்களை அதே வழியில்தான் அணுகுகிறீர்கள்.


ஆகா சொல்லிட்டாரய்யா சொல்லிட்டாரு

அதாவது மக்கள் ஆயுதம் தூக்கிடுவாங்களாம் எங்கள் பின்னே வந்து சரி ஏன் ஆயுதமோ அல்லது ஒரு எதிர்கருத்தோ உருவாகிறது அத பத்தி இந்த கட்டுரையில் எங்கயாவது அய்யா நீங்க அறிவுக்கண்ண தொரந்து பேசி இருக்கீங்களா?

// எனினும் இந்தத் "தேடுதல் வேட்டை'க்குத் தலைமை தாங்கும் விஜயகுமார், நாஞ்சில் குமரன் போன்ற போலீசு அதிகாரிகள் ""அச்சப்படும் அளவுக்கு தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் வளர்ந்துவிடவில்லை'' என்று கூறுகின்றனர். கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமார் ""தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 25 முதல் 35 வரை இருக்கலாம் என்பது எங்கள் கணக்கு'' என்று பேட்டி கொடுக்கிறார். ""கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மிகச் சாதாரணமானவை'' என்றும் போலீசே கூறுகிறது.
பிறகு ஏன் இந்த ஆரவாரம்? பெரியகுளத்தில் வேட்டை, குற்றாலத்தில் வேட்டை, கொடைக்கானலில் வேட்டை, தருமபுரியில் வேட்டை என்று விஜயகுமாரின் காட்டு சீன் ஸ்டில்கள், சினிமா ஸ்டில்களைப் போல அன்றாடம் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுவது ஏன்? பெரியகுளத்தில் நிரந்தரமான அதிரடிப்படை முகாம் எதற்கு?

//
ஏனெனில் ஆயுதம் தாங்க முற்பட்டுவிட்ட ஒரு குழு இன்றைக்கு ஒரே ஒரு கைத்துப்பாக்கிதான் வைத்திருக்கிறது என்று தூங்கவா முடியும்? இளையதாக முள்மரம் கொல்லவேண்டும் இல்லையா? மேலும் ஒரு இடத்தில் உள்ள கும்பல் கையில் ஆயுதம் பெரிதாக இல்லை என்பதால் இதர காடுகளில் அவர்களே போன்றவர் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது மேலும் கனரக ஆயுதங்களள எங்காவது ஒளித்து வைத்து இருப்பீர்கள் என்று அவர்கள் யோசிக்கக் கூடாதா? நீங்கள் போலிஸ் அதிகாரியாக இருந்தால் எதிராளி தன் அலுவலக வாயிலில் கன ரக பீரங்கி, டாங்கி மேலும் அணு ஆயுதத்துடன் வந்து நின்ற பிறகுதான் செயலில் இறங்கலாமா வேண்டாமா என்று யோசிப்பீர்களோ? அல்லது உங்கள் ஆட்சியில் எதிர்புரட்சியில் இறங்குகிறது ஒரு ஆயுதக்குழு என்றதும், நீங்களும், கையை கட்டிக்கொண்டு கனரக பீரங்கி டாங்கியுடன் வரும்வரை "தோழர்கள்" என்று மரியாதையுடன் அழைத்து, சும்மா ஐந்து பேர்கள் கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார்கள், இதற்கு போய் என்ன அலம்பல் என்று சும்மா இருப்பீர்களா?


ஏன் உருபெருக்கி காட்டுகிறார்கள் என கேட்டு அதற்கு விடையும் கொடுத்து இருக்கு ஆசிரியர் குழு இவரது காமாலை கண்ணுக்கு தெரியலை.

சித்தாந்தாத்துடன் ஆயுதம் தாங்க முற்பட்ட குழுவின் மேல் உங்க எரிச்சல் தற்செயலானது இல்லை தேவை ப்படும் போது ஆயுதம் தாங்க இந்து வெறி குழுவான உங்களுக்கு ஒரே ஒரு நக்சல் பாரி இருக்கான்னாலே பேதி ஆகிடுது அதுக்கு என்ன செய்வது. நாங்க எதிர் புரட்சியை
அடக்குவது பற்றி பேசுகிறீர்கள் பரவாயில்லை அப்போ உங்க வாயால இதை புரச்சிகர கும்பல் என ஒத்துகிட்டதுக்கு .( மக்களை திரட்டாமல் ஆயுதம் தூக்குவது உதவாது என்ற நிலைபாட்டை மக இக கொண்டி ருந்தாலும் . ஆயுதம் தாங்கும் குழுக்களின் மேல் அவுத்து விடப்படும் அதி பயங்கர அடக்குமுறையும் அச்சுருத்தலும் தனது ஓட்டை மொள்ளமாறித்தனத்தை மறைப்பதற்குத்தான் என சொல்லத்தான் இந்த கட்டுரையே எழுதப்பட்ட்டு உள்ளது.)

கவலை படாதீங்க கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை உங்களை மாதிரி ஆட்களாலலதிகமாக்கப்படும்


/ /
இது போலீசின் வழக்கமான விளம்பர மோகம் அல்ல; மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் அரச பயங்கரவாதம். "நக்சல்பாரி' என்ற சொல்லைக் கேட்டாலே மக்களுக்கு அதிரடிப் படையின் கொடூரமுகம் நினைவுக்கு வரவேண்டும் என்பதும், அவர்கள் அஞ்சி நடுங்கி ஒதுங்க வேண்டும் என்பதும்தான் இந்த நடவடிக்கையின் முதல் நோக்கம்.
இரண்டாவதாக, இது தீவிரவாத ஒழிப்பில் மன்னனை விஞ்சிய ராஜவிசுவாசியாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ள கருணாநிதி மேற்கொள்ளும் முயற்சி. ""தமிழகத்தைத் தீவிரவாத அபாயத்திலிருந்து காப்பாற்றி அமைதியான வாழ்க்கையை அளிக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதுடன், சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துவிடும்'' என்பது ஜெயலலிதா நிரந்தரமாக முன்வைத்துவரும் பாசிச அரசியல். துக்ளக் முதல் இந்து வரையிலான பார்ப்பனப் பத்திரிகைகளால் வழிமொழியப்படும் பிரச்சாரமும் இதுதான்.
//



மக்களது ஓட்டுக்களை நம்பி இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரவாத அபாயத்திலிருந்து தமிழக மக்களை காப்பற்றவே முனைகின்றன. இதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? வெறும் ஆயுதங்களை நம்பி பத்து பேரை சுட்டு, ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைப்பவர்களை நினைத்து, அவர்களது பிளவுண்ட மனநிலையை நினைத்து மக்களும் அரசும் அஞ்சுவதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? துக்ளக் இந்து ஆகிய பத்திரிக்கைகள் மட்டுமா தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பட்டை கொண்டிருக்கின்றன? எல்லா மையநீரோட்ட பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டைகொண்டிருக்கிறன. ஒரு மாற்றுக்கு, தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கும் பத்திரிக்கைகளை வரிசைப்படுத்துங்களேன். அவைகள் எவ்வளவு மக்களால் படிக்கப்படுகின்றன என்பதையும் காட்டுங்களேன்.


தீவிர வாதம் என்பது அய்யா என்ன சொல்றீங்க அறிவால எடுத்துட்டு போயி கூட்டத்துல பேரணிபோறவங்களை வெட்டினாங்களே அது மிதவாதமா
அமைதியா பேரணி நடத்திய மருத்துவ மாணவர்களை போலீஸை ஏவி அடிட்த்து நொருக்க சொன்னால் அது மிதவாதமாம்.இந்த மிதவாதத்தைதான் அரசியல் கட்சிகள் செய்கிறதாம் .
அப்புறம் வெடிகுண்டு வீசி கொல்றாங்களே ஒரு கட்சிக்குள்ளயே இருக்கும் ஆட்களை   இதெல்லாம் எந்த வகையான மிதவாதம்னு அய்யாதான் சொல்லனும் அய்யா தமிழ் பெல்லு சரியா சொல்லு?

தீவிர வாதம் என்றால் என்னன்னு மொதல்ல சொல்லிடுங்க ஏன்னா பு,ஜவில் எழுதப்பட்ட கட்டுரை தீவிர வாதத்தை ஆதரிப்பதல்ல .
ஆனால் அரசு அமைப்பு அதை ஏன் உருபெருக்கி காட்டுது என்பதை பற்றியகேள்வி எழுப்பு அதுக்கு பதில் அளித்து உள்ளது .

அய்யா நீங்க என்ன செய்து இருக்கீங்கன்னா . இந்த கட்டுரை என்னமோ தீவிர வாதத்தை ஆதரித்தூ எழுதப்பட்டதா எடுத்து உங்க மூளையை செலவழிச்சுட்டீங்க

தீவிரவாதநிலை பாட்டை யாருங்க ஆதரிப்பாங்க உங்க்களுக்கென்ன லூசா


//
தற்போது ஜெயலலிதாவின் ஆசி பெற்ற விஜயகுமாரை "நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்' தலைவராக நியமித்திருப்பதன் மூலம் "வசிட்டன் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்' வாங்கத் துடிக்கிறார், கருணாநிதி. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக தமிழகத்தைப் பேணுவதற்கும், ஆளும் வர்க்கங்களின் மனம் கவர்ந்த அமைதிப் பூங்காவாக மாநிலத்தை "மார்க்கெட்டிங்' செய்வதற்கும் நக்சல் வேட்டை என்னும் இந்த ஊதிப்பெருக்கப்பட்ட நடவடிக்கை திமுக அரசுக்குத் தேவைப்படுகிறது.
//


மறுபடி யோசியுங்கள். நீங்கள் சொலவது போல இல்லை. தமிழகத்தில் நக்ஸல்பாரிகள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு மூலதனம் தமிழகத்துக்கு வருவதற்கு கேடானது. நக்ஸல் பிரச்னை இருக்கிறது என்று சொன்னாலே வரக்கூடிய மூலதனமும் வராது. இருந்தும் நக்ஸல் பிரச்னையை வெளியே சொல்லி அதனை ஒடுக்கமுயற்சிக்கும் அரசை பாராட்டவே வேண்டும். அலங்காரக் கொண்டையில் ஈறும் பேனும் இருப்பது எப்படியும் தெரிந்து விடும். பிறகு மாநிலத்துக்கு வேண்டிய பெரும் தொழில் மயமாகுதல் எல்லாம் தடைப் படும், பிறகு இந்த இரண்டாம் தர கம்யூனிச அரசுகள், மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் இருக்கின்றனவே அவற்றைப் போல உலக வங்கி, டாட்டா, மிட்டல் என்று பலரிடம் போய் கையேந்தி நிற்க வேண்டி வரும். இப்போது உலக முதலாளிய நிறுவன அமைப்பாளர்கள் தாமே தேடி வருகிறார்கள். நாளை கருணாநிதி அவர்கள் அலுவலக வாயிலில் போய்க் கையேந்தும் நிலை வருவதைத் தடுக்கத்தான் இப்படி ஊக்கமாக நடவடிக்கை எடுக்க முன்வருகிறார். இதிலென்ன பெரிய மர்மம்? இதில் என்ன தவறு காண முடிகிறது உங்களால் ?


அய்யா என்னங்க சொல்றீங்க தீவிரவாதம் இருக்குன்னா அதை வெளிய ககாட்டாதாமாம் அப்படியே அமுத்தி வச்சுக்குமாம் இதெல்லாம் அரசின் கையில் இருக்கு என்று நீங்க சொன்னா நாங்க கேட்டுகனுமா ? தனது மகன் அழகிரியின் ஆட்கள் செய்த அட்டூலியத்தையே இந்த அரசு மூடவோ மறைக்கவோ முடியாமல் தவித்ததை நாம் பார்த்தோமே?

தீவிரவாதம் உருவானது ஏன் என்றேல்லாம் யோசிக்காமல் அதை பெரிதாக்குவதற்கு செய்யும்
செயலில் அதன் காரணங்களில் ஏன் அக்கரை காட்டவில்லை என்பதுதான் கேள்வி.

தீவிரவாதம் தவறுதான் அதன் காரணங்கள் தவறல்ல
அதை மறைக்கும் மறுக்கும் நீங்கள்தான் தீவிரவாதி

//
போலீசைப் பொறுத்தவரை தனது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தனது கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. மிகவும் அபாயகரமான பணியில் இராப்பகலாக ஈடுபட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே, காடுகளிலும் மலைகளிலும் ""அவுட்டோர் ஷூட்டிங்'' நடத்துகிறது. தான் நடத்திய, நடத்தப் போகிற எல்லா "போலி மோதல்' கொலைகளையும் மறைப்பதற்கான திரைச்சீலைகளாக இவற்றைப் பயன்படுத்துகிறது.
//



போலீஸ் கட்டற்ற அதிகாரம் கொண்டதல்ல. அது ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் சொல்லுக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டது. போலீஸ் கட்டற்று மக்களை அச்சுறுத்தினால், ஓட்டுக்களை இழக்கப்போவது ஆளும் கட்சிதான். ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், மக்கள் நிச்சயம் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். இது பலமுறை தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு அஞ்சுகிறார்கள். மக்கள் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதால், தீவிரவாதத்தை ஒடுக்க மக்கள் பிரதிநிதிகள் முனைகிறார்கள்.


ஹய்யோ ஹய்யோ போலீசின் அடக்குமுறை எத்தனை தடவை இந்த நாட்டில் நடந்து இருக்கு எத்தனை முறை மக்கள் தூக்கி எறிந்து இருக்காங்கன்னு ஒரு லிஸ்டு போட்டு சொல்லுங்க பார்ப்போம்

திமூக ஆட்சியில் போலீஸ் அராஜகம் என்று அதிமுக சொல்லும்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா இருக்கிற போலிஸை எல்லாம் பந்தாடும்
அதே மாதிரி அதிமுக ஆட்சியில் போலீஸ் அராஜகம் னு திமுக சொல்லும்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா இருக்கிற போலிஸை எல்லாம் பந்தாடும்

இது ஒரு ஜெயின் மாதிரிதான் போகுதுன்னு உங்க மண்டையில் ஏறவில்லையா

இடையில் பாதிக்கப்படும் சாதாரண தொண்டன் சாகிரது கண்ணுக்கு தெரியலையா?

வாச்சாத்தியில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை மக்கள் செய்தார்கள்



//
இத்தனை பயங்கரமாகச் சித்தரிக்கப்படும் பெரியகுளம் சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? 3 பேர் சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு, போலீசுடன் மோதல், உயிரிழப்பு என்று எதுவும் நிகழவில்லை. கைது செய்த போலீசாருக்கோ ஒரு சிராய்ப்புக் காயம் கூட ஏற்படவில்லை. போலீசின் சட்டம் ஒழுங்கு பார்வையின் படியேகூட இது மிகவும் சாதாரணமான குற்றம்தா ன்.
//



இல்லை. நிச்சயம் இல்லை. ஆயுதம் ஏந்தியவனை தண்டிப்பது வேறு. ஆயுதம் ஏந்துவதை தன் கொள்கையாக கொண்ட இயக்கத்தினை ஒடுக்குவது வேறு. இதில் போலிசாரை நோக்கிச் சுட்டு அதில் இருவர் உயிரிழக்கவில்லையே என்று உங்களுக்கு மிக வருத்தம் போலிருக்கிறது. நீங்கள் என்ன போன பிறவியில் ரத்தக் காட்டேரியாக இருந்தீர்களோ? அல்லது இப்போதுமே அப்படித்தானா? சாதாரண மனிதரைக் கேட்டால் 'நல்ல வேளை யாரும் யாரையும் சுடவில்லை. அதற்கு முன் ஆயுதங்களைக் கைப்பற்றி விட்டார்கள்' என்று போலிசாரைப் பாராட்டவே செய்வார்.


ஒடுக்குவது சரி என சொல்லும் நீங்கள் தான் அவர்களை விட இரத்த காட்டேறியின் தந்தையாக இருந்து இருக்கீங்க்க. இங்கே நீங்க பயப்படுவது ஆயுதத்துக்கு இல்லை சித்தாந்தத்துக்கு என புரிய வச்சா புரிஞ்சுப்பீங்களா

ஆனா ஒடுக்குவது ஆயுதத்தை என்ற பேரால் சித்தாந்தை என்பதையும் புரிய வச்சால் புரிஞ்சுப்பீங்களா?

மாட்டீங்க மாட்டீங்க ஏன்னா ஒரே போடாக ஆயுதம் தூக்குபவன் தீவிரவாதி இதான் பேசுவீங்க
கீறல் விழுந்தா ரெக்காடு மாதிரி

//
தினகரன் பத்திரிகை மீது பட்டப்பகலில் போலீசின் முன்னிலையில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். 3 ஊழியர்கள் கொல்லப்பட்டிருந்தும், அந்த வன்முறை வெறியாட்டம் மறுக்க முடியாதவண்ணம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தும், ""தாக்குதலுக்குக் கருத்துக் கணிப்புதான் காரணம்'' என்று கூறி, சட்டமன்றத்திலேயே அதனை நியாயப்படுத்தினார், கருணாநிதி.
அண்ணன் அழகிரிக்கு 2% தான் ஆதரவு என்று எழுதியதற்காக ஒரு பத்திரிகை அலுவலகத்தை ஊழியர்களுடன் சேர்த்துக் கொளுத்தலாமாம். அழகிரி ஆதரவாளர்களின் கோபத்துக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்கும், பல ஆயிரம் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் படுகொலைக்கும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக்கும் தள்ளும் இந்த அரசமைப்புக்கு எதிராக ஆயுதமேந்துவது தீவிரவாதமாம்!
//


தினகரன் அலுவலகத்தில் நடந்தது அழகிரியின் வன்முறை. அது தனிநபர் வன்முறை. தனிநபரான அழகிரியை தண்டிப்பது என்பது வேறு. வன்முறையை தன் வழியாக கொண்டு பல இளைஞர்களை சேர்த்துக்கொண்டு வன்முறை மூலம் போலீஸ், பொதுமக்கள், என்று அச்சுறுத்தி அதிகாரத்தை கைப்பற்ற விரும்பும் இயக்கத்தை தடுப்பது என்பது வேறு.

இந்த அரசைத் தேர்ந்தெடுத்தது இந்த மக்கள்தானே? திரும்பத்திரும்ப இதே கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து இடது சாரிக் கட்சிகளையோ, பொதுவுடைமைக் கட்சிகளையோ தேர்ந்தெடுக்கக் கூடாதென்று யார் கையைப் பிடித்துத் தடுத்தார்கள்? அவர்கள்தானே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணாதுரை, மு.கருணாநிதி, சோனியா, லல்லுப் பிரசாத் யாதவ் என்று அவரவர் ஜாதி விசுவாசத்துக்கு ஏற்ற மாதிரியோ, கொடுக்கும் வாக்குறுதிகளுக்கோ வாக்களிக்கிறார்கள்? அடுத்த முறை நல்ல கட்சியாகப் பார்த்து வாக்களிக்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்யுங்களேன்?


அதாவது வன்முறைக்கு தனிநபர் வன்முறை கூட்டு வன்முறை பொரியல் வன்முறை என என்னென்ன பேரெல்லாம் வச்சு இருக்கீங்க .

அதாவது அப்பாவிகளை ரெளடிகளை அனுப்ப்பி கொல்லும் கயவாளித்தனத்தை மன்னித்து விடுவீர்Kஆள் அது அபாயமானதல்ல. இதானே உங்க கருத்து என்னய்யா நியாயம்.

வன்முறை மூலம் போலிஸ் அதிகாரத்தை கைப்பற்ற கூடாதுன்னு சொல்றீங்களே

மதுரையில் அதைத்தானே அழகிரி செய்துகிட்டு இருக்கான் .

அவரது ஆட்கள் அடித்து நொருக்க போலீஸ் வேடிக்கை பார்க்க இதெல்லாம்

ஆட்சியை மக்களில் பேரால் ஆட்சிக்கு வந்தவர்கள் செய்யும் வேலையா

இது சகஜம் போல உங்க அகராதியில்

நீங்க நியாயமான ஆளுன்னா இதையும் அல்லவா கண்டிக்க வேண்டும்

அதெப்படி தனிநபர் பயங்கரவாதம் என சொல்றீங்க

தினகரன் ஆபிசுக்கு போனது தனிநபரா.

தன் அப்பா ஆட்சியில் இருக்கிறார் என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என
ஆணையிடும் ஒரு தனிமனிதனா அங்கே சென்றால் இல்லையே ?

ஆட்சி அதிகாரத்தை கையில் வச்சுகிட்டு என்னவேணா செய்யலாம் என செய்யும் ஒரு கும்பலே அல்லவா போயிருக்கு அது இன்னைக்கு மட்டுமா போகுது அன்று சேலத்தில் மாணவிகளை பஸ்சோடு எரித்தது மதுரை வில்லாபுரத்தில் கவுன்சிலர் லீலாவதியை கொன்றது. ஒரு முன்னாள் அமைச்சரை வான்க்கிங் போகையில் போட்டு தள்ளிய
இதுக்கு பேர் தனிநபர் பயங்கர வாதமா ? நல்ல கூத்து தமிழ் பெல்

ஆக இதெல்லாம் சமூகத்தின் கேன்சராக உங்களுக்கு ஏன் தெரியவில்லை


//
மூன்று இளைஞர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றத்துக்காகத் தமிழகமெங்கும் மாவோயிஸ்டு அமைப்பினர் மீது தேடுதல் வேட்டை நடத்துகிறது போலீசு. சிவகங்கையில் நட்ட நடுவீதியில் ரிமோட் குண்டு வைத்து தி.மு.க. நகராட்சித் தலைவரை தி.மு.க.காரனே கொலை செய்கிறானே, அந்தப் படுகொலைக்கு என்ன காரணம்? அன்று உள்ளாட்சித் தேர்தலையும், இன்று கூட்டுறவுத் தேர்தலையும் ரத்து செய்ய வைத்த வன்முறைக்கான காரணம் என்ன? தமிழ் நாட்டையே கொள்ளைக் காடாக்கி வரும் கழக வீரப்பன்கள் மீது எந்த அதிரடிப்படை ஏவப்பட்டிருக்கிறது?
//



நிச்சயம் ஏவப்படும். அவ்வாறு ஏவப்படும் அதிரடிப்படையின் பெயர் மக்களது ஓட்டுக்கள். அந்த ஓட்டை பொறுக்க அரசியல் கட்சிகள் அலையும்வரைக்கும், மக்கள் கையில் கண்ட்ரோல் இருக்கும். அது அடுத்த தேர்தலில் தெரியும். ஒரு ஆளும் கட்சிக்கு தன் ஆளும் கட்சி ஆட்கள் வெற்றி பெற்ற வெறியாட்டத்தை கட்டுப்படுத்தும் தேவை இருக்கிறது. அந்த தேவையைப் புரிந்துகொள்ளாத ஆட்சி வெகுவிரைவில் மக்களால் வாக்குக்கள் மூலம் நீக்கப்படும். நீக்கப்பட்டும் இருக்கிறது தமிழக வரலாற்றில்.


அய்யா நீங்க சொல்றீங்க எந்த ஆட்சி அதுக்காக நீக்கப்பட்டதுன்ற விபரத்தை தரமுடியுமா
சும்மா ஜோசியக்காரன் மாதிரி படும் டும் டும் ன்னு பேசபடாது.

மக்கள் கையில் கன்ரோல் எல்லாம் இல்லை . ஓட்டு போட்டது ஒருத்தனுக்கு அவன் கட்சி மாறி போனா ஒன்னும் செய்யமுடியாது அதான் நிலை இன்று

//
"நக்சல் ஒழிப்பு' நடவடிக்கையில் காட்டப்படும் இந்தத் தீவிரத்தில் ஒரு சதவீதமாவது "தீண்டாமை ஒழிப்பு', "லஞ்ச ஒழிப்பு', "மதவெறி ஒழிப்பு' நடவடிக்கைகளில் காட்டப்பட்டதுண்டா? காடு மலையெல்லாம் தேடி அலைய வேண்டிய தேவையே இல்லாமல் கண்முன்னால் காட்சி தரும் இந்தக் கிரிமினல் குற்றங்களை ஒழிக்க ஒரு அமைதிப்படையாவது ஏவப்பட்டதுண்டா?
//


தீண்டாமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு, மதவெறி ஒழிப்பு ஆகியவையும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்தான். ஆனால், ஒரு திருடனை பிடிக்காத போலீஸாருக்கு இன்னொரு கொலைகாரனை பிடிக்க தார்மீக உரிமை இல்லை என்ற இது போன்ற அபத்த வாதங்களை முன்வைப்பதில் உங்களுக்கே வெட்கமாக இல்லையா?
மேலும், எப்போதிருந்து இந்த மாற்றம்? சமூக சீர்திருத்தம் என்பது திரித்தல் வாதம் என்றும் புரட்சி வழியே சரியான வழி என்றும்தானே சொல்லிவந்தீர்கள்? சமூக சீர்திருத்தம் செய்வதன் மூலம் இந்தியாவை மாற்றிக்காட்டிய காந்தி உங்களுக்கு எதிரியாகத்தானே இருந்தார்? இந்தியாவில் எந்த சமூக சீர்திருத்தங்களில் கம்யூனிஸ்டுகள் இருந்திருக்கிறார்கள்? புரட்சி வந்தால் போதும் எல்லாம், பூத்து குலுங்கிவிடும் என்பதுதானே இதுவரை உங்களது கோஷமாக இருந்துவந்திருக்கிறது? அமைதி வழியே, மக்கள் திரளைப் பேச்சினால் மனம் மாற்றி அறவுணர்வால் ஊக்குவித்துத் தம் பின்னே திரட்டிச் சமூக சீர்திருத்ததை செய்து உலகை மாற்றிக்காட்டிய காந்தி, நாராயணகுரு போன்றவர்களை உங்களது எதிரிகளாகத்தானே வரித்துக்கொண்டிருந்தீர்கள்? இப்போது மனமாற்றம் வந்த காரணம் என்ன? அல்லது இது ஒரு டெம்பரரி அம்னீசியாவா? அல்லது புகை மூட்டப் போர்த்தந்திரமா?



முதல்ல உனக்கு வெக்கம் இருக்கா இல்லையா நாட்டில் லஞ்சம் மொள்ளமாரித்தனம் எல்லாம் இருக்கு அதை தட்டிகேட்காதேன்னு சொல்வதற்கு .

எல்லாம் மாறும் மாறும் ஓட்டு மட்டும் போடுங்கன்னு சொல்வதற்கு உனக்கு சொரணை இல்லையா?


//
"வன்முறையா மென்முறையா' என்பதல்ல பிரச்சினை. இந்த அரசமைப்பில் ஐக்கியமாகி, அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகு வேலை செய்யவும், மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொள்ளவும் ஆயுதம் ஏந்தி மோதிக்கொள்வதில் ஆளும் வர்க்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
//



என்ன சீனாவை பற்றி சொல்கிறீர்களா? அப்படியே சீனாவின் மாவோயிச சோசலிச அரசை எப்படி இவ்வளவு துல்லியமாக வருணித்தீர்கள்! நேரே போய் அனுபவம் நிறையவோ? அந்த வரிகளை மேற்கோள் காட்டுகிறேன் - 'இந்த அரசமைப்பில் ஐக்கியமாகி, அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகு வேலை செய்யவும், மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொள்ளவும்'. இதில் இன்னொரு அம்சம் பாருங்கள். இந்த ரஷ்யாவின் அரசும் இதே போலத்தான் இருக்கிறது- ஆனால் அவர்கள் சோவியத், லெனினியம், சோசலிசம் என்று சும்மா வார்த்தை ஜாலமெல்லாம் காட்டாமல் நேரடியாக 'சாவரின் டெமாக்ரசி' என்று சொல்லி விடுகிறார்கள். யாருடைய சாவரினிடி என்பது தெளிவில்லை. கேஜிபியின் சாவரினிடி என்பது உங்களுக்குத் தான் தெரியுமே. நீங்கள் புரட்சி நடந்ததும் செய்யப் போகிற முதல் வேலையே இந்த கேஜிபியை நகல் எடுத்து ஒரு ரகசியப் போலிஸ் அமைப்பைக் கட்டுவதுதானே?


அட தமிழ் பெல்லே தமிழ் நாட்டில் நடப்பதை பத்தி கருத்து சொன்னா நீ ஏன் லெனினிசம் சோசலிசம் என ஜல்லி அடிக்கிற .

தமிழ் நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கு பதில் சோவியத்தில் நடந்த விசயங்கள

இதுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை வந்துட்டு சோவியத் இரஸ்யாவை தூக்கிட்டு




// மக்கள் யுத்தக் குழுவினர் சந்திரபாபு நாயுடுவுக்கு வைத்த குண்டைக் காட்டிலும், சிவகங்கையில் வைக்கப்பட்ட ரிமோட் குண்டுதான் நவீன தொழில்நுட்பம். அவ்வாறிருந்தும் சிவகங்கையில் தேடுதல் வேட்டை கிடையாது, காரணம், இது திமுக ஆட்சி என்பது மட்டுமல்ல; இத்தகைய வன்முறைகள் எதுவும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானவையல்ல என்பதுதான் அடிப்படைக் காரணம்.
மாறாக, ""இந்த கொள்ளைக்கார அரசமைப்பைத் தூக்கியெறிவதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும்'' என்று கூறுவதனால்தான், ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களும் "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்தி நக்சல்பாரிகள் மீது பாய்ந்து படுங்குகின்றன.
//



அதெப்படி, கொள்ளைக்கார அரசமைப்பை தூக்கி எறிவதற்கு கொலைகார அமைப்புதான் வேண்டுமா?
மக்கள் வாக்களிக்கிறார்களே. அவர்களிடம் சொல்லுங்கள். அடுத்த முறை தேர்தலில் நின்று யாராரைக் கொல்லப் போகிறீர்கள், எப்படி, எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றால் எவ்வளவு மாறுதல் வரும் என்று பட்டியல் போட்டு வைத்திருப்பீர்களே அதையெல்லாம் எடுத்து விடுங்கள் மேடைகளில். எவ்வளவு ஆதரவு திரண்டு வருகிறது என்று பார்க்கலாம்.

முதலாவது, இது கொள்ளைக்கார அமைப்பு அல்ல. கொள்ளைக்கார அமைப்பு என்பது சோசலிஸம். இது ஜனநாயக அமைப்பு. இங்கு ஆளும் கட்சியின் அச்சுறுத்தல் இல்லாமல், மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு ஓட்டுப்போடலாம். தங்கள் சாதிக்கட்சிக்கு ஓட்டுப்போடலாம். தங்கள் மதக்கட்சிக்கு ஓட்டுப்போடலாம். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் கட்சிக்கும் ஓட்டுப்போடலாம். மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்தும் எந்த கட்சிக்கும் ஓட்டுப்போடலாம். அது மக்கள் விருப்பம். அல்லது திமிர் பிடித்துத் தேர்ந்தெடுக்கப் பட எந்த வாய்ப்பும் இல்லாத ஒரு கோமாளிக்குக் கூட வாக்களிக்கலாம். நீங்கள் தேர்தலில் நின்றால் உங்களுக்குக் கூட ஒரு நூறு ஓட்டுகள் விழுந்தாலும் விழும், யார் கண்டது? நின்று பாருங்களேன்? என்ன குறைந்து விடும்? நீங்களோ ஒன்றும் சத்திய சந்தர் அல்ல. அறம், தருமம், நேர்மை இதெல்லாம் உங்கள் கருத்துப்படி பூர்சுவா மாயங்கள். தேர்தலில் நாளை நிற்கலாம். அடுத்த நாள், (தோற்றதும்) , மறுபடி ஆயுதப் போராட்டமே வழி என்றும் அறிவிக்கலாம். இதெல்லாம் மக்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. அரசியல் வாதி என்றாலே பொய் சொல்வார் என்பது அவர்களுக்குத் தெரியும். உங்களுக்குத்தான் மற்றவர்கள் எல்லாம் பொய்யர்கள் நாம் மட்டும் சத்தியவான் என்று ஒரு பிரமை இருக்கிறதே.
தைரியமாகத் தேர்தலில் போட்டி இட்டு வானத்தை வில்லாக வளைப்போம் என்று பொய் சொல்லுங்கள். ஏற்கனவே அப்படித்தானே கற்பனை கம்யூனிஸ சமுகம் பற்றி சொல்லி இளைஞர்களை மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஒரு பக்கம் இயேசுவின் இரண்டாவது வருகை என்ற பொன்னுலகம் வருகிறது என்று அமெரிக்க ஆதரவாக கிறிஸ்துவர்களை உருவாக்க கூட்டம் சேர்க்கிறார்கள். நீங்கள், கம்யூனிஸ பொன்னுலகம் வருகிறது என்று கூட்டம் சேர்க்கிறீர்கள். என்ன வித்தியாசம்? பைத்தியக்காரனை சுற்றியும் பத்துப்பேர்!


அம்பது வருசம உங்களை மாதிரி நாதாறி பயலுவ பேச்சை கேட்டு சீரழிந்து விட்டது நாடு எலிக்கறி சாப்பிட்டு சாகும் விவசாயிகளிம் ஓட்டு போடுன்னா அவன் உன் மண்டையில் நச்சுன்ன்னு போடுவான். வங்கிக்க.

மக்களிடம் என்ன பேசவேண்டும் என்பதை நீ கத்து தந்து பேசும் நிலமையிலா தோழர்கள் இருக்கிறார்கள் .



//
குறிப்பாக, தனியார்மயதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள், நாளை கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கங்களை நடுங்கச் செய்கிறது. துப்பாக்கிகாடுபயிற்சி என்பதல்ல எதிரிகளின் அச்சத்துக்குக் காரணம். மார்க்சியம்லெனினியம்மாசேதுங் சிந்தனை என்ற கம்யூனிசச் சித்தாந்தம்தான் அவர்களை அச்சுறுத்துகிறது. கம்யூனிசப் புரட்சியாளர்களின் உறுதியும் விடாப்பிடியான முயற்சியும் அவர்களுக்குப் பீதியூட்டுகிறது.
//


காமெடி கீமடி பண்ணலையே? தனியார் மயக்கொள்கைகளை எதிர்த்து கிளர்ந்தெழுகிறார்களா ? எங்கே? எல்லோரும் தனியார் மயத்தை ஆதரிக்கிறார்கள். அதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதை வரவேற்கிறார்கள். மார்க்ஸியம் லெனினியம் மாசேதுங் சிந்தனை என்ற கான்ஸர் இந்த இளைஞர்களை வழிதவறிப்போகவைத்து, வளரும் தொழில்நுட்பம், பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதனை மக்கள் புரிந்துகொண்டே இருக்கிறார்கள். கம்யூனிஸ புரட்சியாளர்களின் மடத்தனமும், பைத்தியக்காரத்தனமும் மக்களுக்கும் அரசில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பீதியூட்டுகிறது.
இப்போதுதான் பொருளாதாரத்தை கழுத்திபிடித்து திருகி இந்தியாவில் தொழில்முனைவோர்களையும், தொழில்துவங்குபவர்களையும் கழுத்தில் கயிறு போட்டுகட்டி, இவ்வளவுக்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது, இங்குதான் இவன் தான் தொழில்துவங்க வேண்டும் என்று லைசன்ஸ் கோட்டா சாம்ராஜ்யம் அழிந்து தொழில்முனைவோர்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று வேலைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இன்று "வேலை காலி இல்லை" போர்டுகள் தொழிற்சாலைகளின் முகப்புகளை அலங்கரிக்கவில்லை. இன்று உண்மையிலேயே தொழிலாளர்கள் எந்த தொழிலுக்கும் போவதற்கான சுதந்திரம் பெற்றிருப்பதால், அவர்களது வலிமை அதிகரித்துள்ளது. இவர்கள் தனியார் மயத்தை எதிர்க்கிறார்களா? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?
ஆமாம், கஞ்சா அல்லது ஸ்பீட் ஏதாவது சாப்பிட்டு விட்டு இந்தத் தலையங்கம் எழுத வந்தீர்களா என்ன? மார்க்சியம், லெனினியம், மாவோயிசச் சித்தாந்தம் அவர்களை அச்சுறுத்துகிறதா? சோவியத் ரஷ்யா என்று ஒரு பெரிய மண் கோட்டை 1989 இல் தகர்ந்து பொடியானது, நினைவிருக்கிறதா? இன்று லெனினின் சிலைகள் கிழக்கைரோப்பா முழுவதும் காலில் உடைந்து தலை குப்புறக் கிடக்கின்றன, அதாவது தெரியுமோ? செய்தித்தாள்கள் படிக்கிறீர்களோ? இல்லை அதெல்லாமும் கற்பனை வாழ்க்கைதானா? மாவோயிசம் என்று ஏதோ சொன்னீர்களே, அந்த மாவோவின் சாம்ராஜ்யமே இன்று கலகலத்துப் போய் கம்யூனிஸ்டு கட்சியில் பூர்சுவாக்கள் சேர்வது தவறில்லை, மேலும் சொத்துரிமை கொடுக்காது மக்களை ஊக்குவிக்க முடியாது என்று சொத்துரிமை உண்டு என்று அறிவித்துள்ளது, மேலும் முதலாளியம் என்பது ஒன்றும் ரத்தக் காட்டேரி இல்லை என்று கூறி அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்து இருபதாண்டுகள் ஆகிவிட்டன, அதுவாவது தெரியுமா?


சுதந்திரம் இருக்கிறதாம் சுதந்திரம் தொழில் முனைவோரும் தொழிலும் ஆகாதென்று சொல்வதாகவும் . நாட்டை உடனே சோசலிச கொள்கை புகுத்தனும் என்றும் எவன் சொன்னது .

உனக்கு நாடு எப்படி இருக்குதுன்னு தெரியுமா அரை முதலாளித்துவம் அரை நிலபிரபுத்துவம் எனும் வரையறைக்கு இந்தியா இருக்கு எனவும் மூன்றாம் உலக நாடுகளுக்கு புதிய ஜனநாயக புரட்சி மட்டுமே தீர்வாக இருக்கும் என்றும் மாவோ சொன்னதை படிச்சாவது இருக்கியா.

சீனா அதிகாரவர்க்க கும்பல் கையில் போயிட்டா எல்லாமே பொய்யாகிடுமா

விபத்து நடந்தால் போக்குவரத்து விதிகள் தப்புன்னு சொல்லுவாய் போலிருக்கு

/ /
இதனை மறைத்துக் கொண்டு, "வேலையில்லாத பட்டதாரிகளும் விரக்தியுற்ற இளைஞர்களும்தான் நக்சல்பாரிகளாக மாறிவிடுவதாக'க் கதையளக்கிறார்கள். "இந்த சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் நக்சலியம் ஒழிந்துவிடும்' என்று கனாக் காண்கிறார்கள். வேலையின்மை, வறுமை காரணமாக நக்சலியம் பரவுகிறது (திருட்டு, விபச்சாரம் போன்ற கிரிமினல் குற்றங்கள் பரவுவதைப் போல) என்று கூறுவதன் மூலம் நக்சல்பாரி அரசியலையே கிரிமினல் குற்றமாகச் சித்தரிக்கிறார்கள்.
//



வேலையில்லா பட்டதாரிகளும் விரக்தியான இளைஞர்களும்தான் நக்ஸல்பாரிகளாகவும், மத பயங்கரவாதிகளாகவும், ஆனார்கள். சமூகத்தில் வேலைவாய்ப்பு பெருக பெருக நக்ஸலிசம் மட்டுமல்ல, பொதுவாகவே எந்த எதிர்ப்பு அரசியல் உணர்வும் குறைகின்றது.
நக்ஸல்பாரி அரசியல் கிரிமினல் குற்றம்தான். ஏனெனில், ஒரு இயக்கம் என்ன காரணத்தினாலும் இன்னொரு மனிதனது உயிரை பறிக்க உரிமை அற்றது. அது நக்ஸல்கள் கொல்வதாக இருந்தாலும், அது மத பயங்கரவாதிகள் குண்டு வைப்பதாக இருந்தாலும் அது ஒன்றுதான்.
வன்முறையை தன் வழியாகப் பகிரங்கமாக அரசியலாக ஏற்கும் ஒவ்வொரு இயக்கமும் கடுமையாக ஒடுக்கப்படவேண்டும். வார்த்தைகள் மூலம் தங்களது வாதத்தை சொல்ல முடியாவதவர்கள், வரப்போகும் கற்பனை கம்யூனிஸ சமுதாயத்திற்காகவோ, அல்லது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பொன்னுலகுக்காகவோ, உழைத்துப் போராடி வாழும் பொதுமக்களைக் "களையெடுப்பதையோ" அல்லது மதவெறி காரணமாக, தன் மதத்தை சாராதவர்களை கொல்வதையோ ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. அத்தகைய இயக்கங்களை வளரவும் விடக் கூடாது.
நீங்களோ இத்தகைய கொலைகளை உங்களது கொள்கை வழியில் சரியானது என்று முழுமனதாக நம்புகிறீர்கள்.
இப்படிக் கொலை வெறிக் கொள்கையைத் தாமே கொண்டு உள்ளவர்கள் எந்த தார்மீக அடிப்படையில் அல்லது என்ன தர்க்கப்படி இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நடக்கும் வன்முறையை கண்டிக்க உரிமை பெறுகிறீர்கள்? நீங்கள் இன்னமும் நினைத்தவர்களை எல்லாம் கொல்லும் சக்தியைப் பெறவில்லை என்பதால் உங்கள் படுகொலைத் திட்டங்கள் நெறியற்றவை என்பது மறைந்து விடுமா என்ன?


வார்த்தைகள் மூலம் சொன்னாத்தான் ஓட்டு போடு சரியா போகும்னு சொல்ற
ஓட்டு போட்டா சரியாகலை வேற என்ன தீர்வுன்னா சோசலிட இரஸ்யா தப்புங்கிற
சரிடா என்னதான் தீர்வு வச்சு இருக்கன்னு கேட்டா நான் விமர்சனக்காரன் என்னிடம் சித்தாந்தம் தீர்வு எல்லாம் இல்லைங்கிற அப்புறம் என்ன மயிருக்கு நீ அடுத்தவனுக்கு புத்தி சொல்ல வந்துட்டன்னு கேட்கிறேன்.

//
விரக்தியுற்றவர்கள்தான் நக்சல்பாரிகளாகிறார்கள் என்ற கூற்று உண்மையாயிருப்பின், தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சம் விவசாயிகளும் நக்சல்பாரிகளாகியிருக்க வேண்டும். நக்சல்பாரிகளை உந்தித் தள்ளும் உணர்ச்சி, விரக்தி அல்ல; அது சமூக அநீதிகளுக்கு எதிரான ஆவேசம். அவர்களை வழிநடத்துவது மார்க்சியம்லெனினியம் என்ற அறிவியல் பார்வை. நக்சல்பாரிகள் சமூகத்தைத் தம் தோளில் சுமப்பவர்கள், மக்கள் நலனுக்காகத் தம் சொந்த வாழ்வின் இன்பங்களைத் தாமே முன்வந்து துறப்பவர்கள். நக்சல்பாரிகள் விரக்தியுற்ற இளைஞர்களுமல்ல, கம்யூனிசம் சோற்றால் அடித்தால் செத்துவிழும் கொள்கையுமல்ல.
//



தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒரே ஒருவராக இருந்தாலும், அந்த அரசு கலைக்கப்படும் இதே இந்திய மக்களால். கலைக்கப்பட்டும் இருக்கிறது.



அடப்பாவி விவசாயிகள் தற்கொலை செய்துகிட்டா அராங்கத்த கலைச்சு இருக்காங்க
எப்ப எங்க ஏப்பா தமிழ் மணி கஞ்சா கிஞ்சா அடிச்சுட்டு இத எழுதினியா ?

இனிமே உனக்கு பதில் கொடுத்தேன் நான் டாராகிடுவென் போல

--

--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

21 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post