மெளனக்காதலி

ஒரு புன்னகையை மட்டும்
பதிலாக கொடுக்க
உன்னால் மட்டும்தான் முடியும்
 
சளைக்காமல் பேசினாலும்
நீ மட்டும் மெளனபதிலுடன்
எப்படி நகர்கிறாய்
மேகத்தின் தங்கையே
 
திசைகளை வெல்லும்
என் கவிதை உன்னிடம் மட்டும்
கன்னுகுட்டியாய்
கால் நக்கி கிடக்கிறதே
 
பேச சொல்கிறாயா
நிறுத்த சொல்கிறாயா
வாய்வரை வந்த வார்த்தைகள்
தற்கொலை!
குறுகுறுக்கவில்லையா
அந்த மெளனம் உனக்கு!

 


-- <

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post