யாக்கை அழியுமாம்
நிலையற்ற வாழ்க்கையாம்
நிலையான சாதியாம்
யார் காதில் பூ இது
ஒன்றே பிரம்மமாம்
அனைத்தும் ஒன்றாம்
கோவில் வேறயாம்
கும்பிட முடியாதாம்
செருப்பு தைப்பவன்
தெருவில் வரமுடியாதாம்
கேட்டால் குத்தமாம்
கேள்விகள் தவிர்க்கவாம்
முடியை வெட்டலாம்
தொடுவது தீட்டாம்
வயலில் உழுகலாம்-
(வீட்டுள்) வருகுதல் தீட்டாம்
இரட்டை குவளையாம்
இன்னமும் இருக்குதாம்
மிரட்டும் கொலைகளாம்
மீறவே முடியாதாம்
இருக்குதாம் சொர்க்கமும்
இன்னமும் நரகமும்
மீறுவோரை கொல்லவும்
சாடுவோரை வறுக்கவும்
பெயரில் பார்பானாம்
பெரிய சாதியாம்
நினைக்கவும் கூசும்
செயல்களை செய்யினும்
தண்டனை இல்லையாம்
தடையதும் இல்லையாம்
எல்லாரும் ஒன்னாம்
எங்கேன்னு தெரியாதாம்
இந்துவாம் இந்து
என்றொரு மதத்திலே
இன்னமும் இருக்குதாம்
இப்படி சாதிகள்
--
தியாகு
மனு என்பவரின் சிலை சென்னை உயர்நீதிமன்றவளாகம்
இதை படிக்கவும் இங்கே
Tags
கவிதை