எனது பிறந்த நாளுக்கு (20.07) வாழ்த்திய தோழர் விஜி அவர்களின் கவிதை
மேலும் வாழ்த்தி மடல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி இது அவரது கவிதை
செம்மலராய் மணம் பரப்பும்
செம்மல் தியாகுவுக்கு! பொது
உடமை! புதுக்கவிதை பல
படைக்கும் எம் தோழா!!
ஏற்றம் பல காண்க!! நாடு
வீடு போற்றும்படி வாழ்க!!
வாழ்ந்தோம் என்கின்ற பெயரை
வரலாறில் பொறிக்க!!
வாழ்த்துகின்றோம்
முத்தமிழர்கள் வாழ்த்துகின்றோம்
வாழ்க! வாழ்க!!
என்றென்றும் உங்கள்
முத்தமிழ் குடும்பம்..
கீழே இருப்பது எனது நன்றி தெரிவிக்கும் எனது கவிதை
நன்றி நன்றி நன்றி
பிறந்தநாளில் வாழ்த்துகின்ற -
(உடன்) பிறவா நெஞ்சங்களே
மறந்திடாமல் பிறவிகளில் உடன்
பிறக்க அழைக்கின்றேன்!
பொங்குகின்ற காவேரி
புகுந்தள்ளும் புதுவெள்ளம்
தங்குதடை இல்லாதா
தமிழ்வெள்ளம் கொண்டிங்கு
தரணியில் நான் பிறந்திட்டால்
தாங்குகின்ற கைகளாக
பாங்குடைய நீர் வேண்டும்
பயணமது சிறக்க உங்கள்
பண்புடைய சொல்வேண்டும் !
கொட்டுகின்ற தேனருவி
குளிரவைக்கும் ஒரு தென்றல்
தட்டுகின்ற பெரு மழையில்
வெட்டுகின்ற வெடிமின்னல் -கை
தட்டுகின்ற உங்கள் அன்பு
சட்டெனவே என் கண்ணீர்
துளிக்கவைக்கும் ஒரு வாழ்த்து!
துளைத்திருப்பேன் ஒரு
துன்பமிக சொற்களினால்
வளைத்திருப்பேன் உம்மை
வஞ்சனையின் பேய்மழையால்
கடுத்திருப்பேன் காய்ந்திருப்பேன்
களைப்படைய செய்திருப்பேன்
துடைத்தெறிந்து வந்தததென்ன
தூய்மையுடை நின்நெஞ்சம்
சலிப்படைய செய்கிறது
சண்டைபோடும் எந்தன் குணம் !
சான்றோரே மன்னிப்பீர்
சின்னஞ் சிறுவனின்
சீற்றமென ஒதுக்கிடுவீர்
வண்ணமிக செய்வானென
வாஞ்சையுடன் வந்தள்ளுவீர்!
வாழ்த்தென்ற சொல்லை
வாசித்தபோதினிலே
யோசித்து பார்த்தேன்
ஒருசொல்லில் பேரன்பை
பெறசெய்த நின் அன்பை !
மேலும் வாழ்த்தி மடல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி இது அவரது கவிதை
செம்மலராய் மணம் பரப்பும்
செம்மல் தியாகுவுக்கு! பொது
உடமை! புதுக்கவிதை பல
படைக்கும் எம் தோழா!!
ஏற்றம் பல காண்க!! நாடு
வீடு போற்றும்படி வாழ்க!!
வாழ்ந்தோம் என்கின்ற பெயரை
வரலாறில் பொறிக்க!!
வாழ்த்துகின்றோம்
முத்தமிழர்கள் வாழ்த்துகின்றோம்
வாழ்க! வாழ்க!!
என்றென்றும் உங்கள்
முத்தமிழ் குடும்பம்..
கீழே இருப்பது எனது நன்றி தெரிவிக்கும் எனது கவிதை
நன்றி நன்றி நன்றி
பிறந்தநாளில் வாழ்த்துகின்ற -
(உடன்) பிறவா நெஞ்சங்களே
மறந்திடாமல் பிறவிகளில் உடன்
பிறக்க அழைக்கின்றேன்!
பொங்குகின்ற காவேரி
புகுந்தள்ளும் புதுவெள்ளம்
தங்குதடை இல்லாதா
தமிழ்வெள்ளம் கொண்டிங்கு
தரணியில் நான் பிறந்திட்டால்
தாங்குகின்ற கைகளாக
பாங்குடைய நீர் வேண்டும்
பயணமது சிறக்க உங்கள்
பண்புடைய சொல்வேண்டும் !
கொட்டுகின்ற தேனருவி
குளிரவைக்கும் ஒரு தென்றல்
தட்டுகின்ற பெரு மழையில்
வெட்டுகின்ற வெடிமின்னல் -கை
தட்டுகின்ற உங்கள் அன்பு
சட்டெனவே என் கண்ணீர்
துளிக்கவைக்கும் ஒரு வாழ்த்து!
துளைத்திருப்பேன் ஒரு
துன்பமிக சொற்களினால்
வளைத்திருப்பேன் உம்மை
வஞ்சனையின் பேய்மழையால்
கடுத்திருப்பேன் காய்ந்திருப்பேன்
களைப்படைய செய்திருப்பேன்
துடைத்தெறிந்து வந்தததென்ன
தூய்மையுடை நின்நெஞ்சம்
சலிப்படைய செய்கிறது
சண்டைபோடும் எந்தன் குணம் !
சான்றோரே மன்னிப்பீர்
சின்னஞ் சிறுவனின்
சீற்றமென ஒதுக்கிடுவீர்
வண்ணமிக செய்வானென
வாஞ்சையுடன் வந்தள்ளுவீர்!
வாழ்த்தென்ற சொல்லை
வாசித்தபோதினிலே
யோசித்து பார்த்தேன்
ஒருசொல்லில் பேரன்பை
பெறசெய்த நின் அன்பை !
Tags
கவிதை