வீரனின் காதலி

சண்டைக்கு போன மச்சான்
சடுதியிலே வாருங்களேன்
இன்றைக்கு வருவேன்னு
ஏன் மச்சான் சொன்னீகெ
கெண்டையாக நான் துடிக்க
கெழுத்தியெல்லாம் துள்ளுதய்யா

நாட்டுக்கு சண்டை போட
நல்ல மச்சான் நீயிருக்க
காட்டிலே நான் இருக்கேன்
காரணங்கள் அறியவில்லை
சோத்துக்கு குறைவில்லை
சொந்தத்துக்கும் குறைவில்லை
பாத்துக்க பக்கத்துல
பலபேரு இருந்தாலும்
பாவிமனம் நோகுதுங்க
தாவி நீயும் வந்திடய்யா

இரவிக்கையெல்லாம்
சின்னதாச்சு -கை
வளையலெல்லாம்
ஒல்லியாச்சி
இராவெல்லாம்
வெள்ளையாச்சி
பகலெல்லாம்
பகையாச்சு !
நோவுன்னு சொல்லுவாக
சாவுன்னு சொல்லுவாக
ஏனுன்னு அறியவில்லை
இரண்டுமே பார்க்கிறேனே!

சட்டுன்னு வந்துடுங்க
சண்டைவேணாம் சமாதானம்
என்றைக்கு வந்தாலும்
அன்னைக்கு வரலாமுன்ன
தாமதிக்க வேணாம் மச்சான்

எதிரியோடும் குருதியோடும்
சண்டை நீ போடுறப்போ
என் உறவோடும் தனிமையோடும்
போராடா முடியவில்லை !

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post