எனதருமை எதிரியே

ஊமத்து பூ நான்
என் மேல் வீசு
என்னை பேசவை

சாமத்து கோழி
நான் சப்திக்க
சுவர்கொடு!

என்னை கொல்
என்னை வெல்
என்னிலிருக்கும்
என் கவிதை
உனக்கு வேல்
எதிர்கொள்ள
மதி கொள்!


நெருப்பு
உண்கிற
கருப்பு
பறவை நான்
சிக்கெடு என்
இறகில்
சிக்குவதுன்
சிகையா
தலையா
முடிவெடு !


பட்டென
முடிவும்
நெட்டை
வாழ்வில்
எனைவெல்
சட்டென
முடிவெடு
சாமரம்
அல்ல நான்
சப்திக்கும்
சூரியன் !



Previous Post Next Post