கவிதை போட்டி

அன்புள்ள நண்பர்களே,

கவிதை போட்டிகள் தற்போது எல்லா இடங்களிலும் நடததப்படுகின்றன

அதை குறித்து எனக்கு சில கருத்து இருக்கு , அதை உங்களோடு பகிர்ந்து

கொள்ள விரும்புகிறேன்.

நாம் ஒரு போட்டி மயமான சமுதாயத்தில் வாழ்கிறோம்

எனவே எல்லா இடத்திலும் போட்டிகள் இருக்கு என்பது நிஜம்

கல்வி ,வேலை வாய்ப்பில் ஆரம்பித்து

ரேசனில் பொருள் வாங்குவது முதல் வண்டியில் செல்வது தொடங்கி

நுகர்பொருளை வாங்குவது வரை நாம் போட்டியில் ஈடுபடுபவர்களாகவும்

போட்டியில் தோற்க கூடாதென்ற உந்துதல் உடையவர்களாகவும்

உள்ளதை உணர்கிறோம் அல்லவா

நிற்க , கவிதை என்பது அத்தகைய போட்டி க்கான விசயமா

கவிதை என்பது உண்மையில் என்ன

கவிதை நாம் வெளியிடும் நமது எண்ணம் , நம்மில் இருந்து சில நேரங்களில்

வாழ்க்கையை பற்றிய புரிதலில் வாழ்வு நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கத்தில்

தெறிக்கும் ஒரு உன்னத விசயம் இல்லையா ?

ஓவியம் , கவிதை ,என்பனவெல்லாம் அத்தகைய ஆன்மீக நோக்கத்தை

கொண்டனவாக இருக்கும் பொழுது அதில் போட்டி வேண்டுமா என்பது என் கேள்வி.

உதார்ணமாக ஒரு ஓவியம் நான் வரையும் போது அது ஒரு காட்சியை பற்றிய எனது

கருத்து எனது பிம்பம் என்னில் இருந்து தெறிக்கும் ஒரு பூ இதழ்

அது .

நீங்கள் வரைந்த ஓவியம் உங்களுடைய கருத்து உங்களின் வெளிப்பாடு அல்லவா

நான் வரைந்தது நீங்கள் வரைந்ததை விட சற்று அதிகமான கலைதன்மை உடையதாக
இருக்கலாம் . அதனால் என்ன வந்துவிட போகிற்து .

ஆனால் ஒப்பளவில் இல்லாமல் நான் தனிபட்ட முறையில் பார்க்குமிடத்து

நான் என்ன நினைத்தேனோ அதை அந்த கவிதையில் ஓவியத்தில் சொல்லி முடிக்கிறேன் .

நான் ஏன் எனது வெளிபாட்டை ஒப்பிட வேண்டும் உங்களுடன்

அதற்கான போட்டியில் ஈடுபடும் போது . நான் நினைப்பதை சொல்வது தான்

கவிதை என்று நிலையில் இருந்து ஒரு போட்டிக்காக நான் ஒரு படைப்பை செய்யும்போது

அது ழுழு அளவில் எனது உள்ளார்ந்த உணர்வுகளை பிரதி பலிக்குமா

கவிதை போட்டிகளில் ஈடுபடும் போது உண்மையில் எனக்கு இயல்பா

வரும் அந்த உணர்வு அற்று போகிறது என்பதுதான் நிஜம்

உங்களின் கருத்து வேறாக இருப்பினும் அதை தெரிவியுங்கள்

உலகில் போட்டி போட வேண்டாத சில விசயங்கள் உள்ளதென நான் நினைப்பது

தவறாக இருப்பின் என்னை திருத்துங்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post