வன்முறை

நாட்டில் காணும் இடங்களில் எல்லாம் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது

அதற்கு தீர்வாக அகிம்சை புத்தர்முதல் காந்திவரை சொல்பட்டது .

ஆனால் அகிம்சை என்பது ஒரு தீர்வா . அகிம்சையை கையாள சொல்பவர்கள்

சமூகத்தின் அமைதி கெடகூடாது எனும் ஒரு காரணத்தால் சொல்கிறார்கள்.

ஆனால் அகிம்சை என்ற பேரில் நாம் வன்முறையை சகித்து கொள்வது

உண்மையில் வளர்க்க்த்தானே செய்யும் அல்லாது எங்காவது அகிம்சையால்

வன்முறை தீர்ந்ததா.

ஆகவே வன்முறை எனபதற்கு அகிம்சையை ஒரு பதிலாக சொல்லமுடியாது

எப்படி பயத்துக்கு தைரியம் ஒரு மாற்றல்லவோ அதை போன்று

உலகில் இருப்பது வன்முறை மட்டுமே அகிம்சை என்பது கற்பிதம்

என புரிந்து கொண்டால் நாம் வன்முறையில் இருந்து மீள முடியும்

எப்படி புரிந்துகொள்வது அதை எப்படி எதிர்கொள்வது

நீங்கள் வன்முறை இல்லாதவறாக இருகிறீர்கள் ஆனால் உங்கள்

பக்கத்துவீட்டு காரன் வன்முறை உள்ளவனாக இருக்கிறான்

என்ன செய்ய போகிறோம் ?

அவனுக்கு பயந்து போதல் அல்லது வீட்டை காலிசெய்து ஒதுங்குதல்

இவை தீர்வாகுமா?

பேருந்தில் , சாலைகளில் , அனைத்து இடங்களிலும்

வன்முறையாளர்களை காண்கிறோம் .

கேள்வி இதுதான்

நாம் வன்முறையை கண்முன்கண்டும்
சகித்து கொள்ள வேண்டுமா

அல்லது

அதற்கு சரியான எதிர்வினை புரிய தயாராக வேணுமா

அதே வன்முறை நம் வாசலில் நிற்கும்போது என்ன செய்ய போகிறோம்

உலகில் உள்ள வன்முறைக்கான காரணங்கள் நம்முள்ளும் இருகிறதா

அப்படியெனில் நாம் வன்முறையாளாராக இருக்கிறோம் எனில்

விடுபட என்ன வழி ?

நாம் அனைவரும் சிந்திப்போம்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post