கருப்பு வெள்ளை கண்ணாடி

நான் வாழ்க்கையை
கருப்பு வெள்ளை கண்ணாடியில்
பார்க்கிறேன்
எனக்கு தெரிவதெல்லாம்
நண்பர்கள் அல்லது எதிரிகள்

மழையும் வெயிலும்
பூக்களும் எனது ரசனை
வெளிக்கு அப்பாற்பட்டது
இரும்படிக்கும் இடம்
என்பதால் என்னிடம்
ஈக்கள் கூட உரையாடவதில்லை

சிறுகுழந்தைகள் பெரியவர்கள்
பெண்கள் விழிம்புநிலை மக்கள்
அனைவரும் எனக்கு ஒன்றே

எனது பார்வையில் கருப்பென்றால்
கருப்பு வெள்ளை என்றால் வெள்ளை
வேறுபடித்தி பார் என சொல்பவனை
நான் அழைப்பது பிழைப்புவாதி


என்னிடம் கிடைக்கும் எலிகளை
நான் வர்க்க குடுவைக்குள்
உருட்டி பார்ப்பேன் சிலது
சிகப்பாக சிலது கருப்பாக வரும்
அதுவேதான் தீர்மானிக்கிறது
எலி அதன் சாவை

எனது பாதை தெளிவாக இருக்கிறது
புரட்சிக்கு பிறகுதான் உங்களுடன்
பேச எனக்கு நேரம் கிடைக்கும்
வழக்கமாக நான்
என்னை கம்யூனிஸ்டு என அழைத்துகொள்கிறேன்





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post