சமமற்ற மனிதன்

சமமற்ற மனிதன்

வீசப்படும்போது
விக்கிரகத்துக்கும்
போர்த்தபடும்போது
பிணத்துக்கும்
வஞ்சணையின்றி
வாசமளிக்குதந்த
பாசமிகு பூக்கள் !

நேசிக்கும்
காதலர்க்கும்
விதேசிக்கும்
போராளிக்கும்
போருக்கும்
அமைதிக்கும்
ஒரே ஒளியை
பூசுது அந்த
நிலா!

கூசும்
சொற்களில்லை
கூறுபோடும்
வார்த்தையில்லை
மாறுபாடு ஏதுமின்றி
மலைமீது
குதிரையோடு
மனம் நிறைந்த
கருப்பசாமி!

நிலவுக்கும்
மலருக்கும்
நிதம்வணங்கும்
சாமிக்கும் அல்லாது
தனக்கே
முரண்பட்டான்
சமமான உலகில்
சமமற்ற மனிதன் !

தியாகு




Previous Post Next Post