மறுப்பும் தீர்வும

கருத்தை கொல்லலாமா
குருத்தை கொல்லலாமா
மறுப்பை சொன்னா
வெறுப்பை கக்கலாமா

சிக்கலான விசயத்தை
சிலாகித்து பேசவேணாம்
மக்களின் பிரச்சனையை
பேச இது தளமல்ல
தமிழ் மட்டும் பேசலாம்
தகுதி மட்டும் அதுவென்றால்
கண்மூடி கனவொன்று
கண்டிடவா-உலக
கதவடைத்து
காதோடு பேசிடவா.

உன் முதுகை
நான் சொறிந்து
என் முதுகை
நீ சொறிந்து
சுய புரானம்
பேசினாக்கா
சுகமா இருக்குந்தான்

சொறிந்து சொறிந்து
சொட்டும் ரத்தமது
சொல்லுமா ஒரு தீர்வு
சொல்லும்மா என் கண்ணே

விக்கலுக்கு
தண்ணீரும்
விடியலுக்கு
சேவலும்
மக்களுக்கும்
பிரச்சனைக்கும்
மார்சியமே -
தீர்வு

-தியாகு
















View My Stats
Previous Post Next Post