தென்னாடுடைய சிவனே

தெள்ளுதமிழ் பாட்டிசைத்தேன்
தென்னாடுடைய சிவனே! -
ஆடிடுவாய் திரு காலெடுத்து
தத் ததும்கிட தத்ததும்கிட தித்தோம்!

ஆளவாய் அரசா அல்லுற்றோர்
துயர்தீர்க்திடும் அம்பலத்தரசா!
ஆடிடுவாய் திரு காலெடுத்து
தத் ததும்கிட தத்ததும்கிட தித்தோம்!

இல்லாமை இருள் மறைந்திட
கல்லாமை மருள் மறைந்திட -
ஆடிடுவாய் திரு காலெடுத்து
தத் ததும்கிட தத்ததும்கிட தித்தோம்!

நல்லோர் உள்ளத்து நடமிடுநாதா
இல்லாதோர் துயர் மறைந்திட!
ஆடிடுவாய் திரு காலெடுத்து
தத் ததும்கிட தத்ததும்கிட தித்தோம்!

உலகதிர்ந்திட உள்ளத்து பயம்பறந்திட
தேன்தமிழர் நிலையுயர்ந்திட-
ஆடிடுவாய் திரு காலெடுத்து
தத் ததும்கிட தத்ததும்கிட தித்தோம்!

அன்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post