சாயபட்டறைகளில் எங்கள்
சந்ததிகள் வளருது!
காலையில் காய போட்ட
துணியெடுக்க -சூரியன்
போனபிறகு வருகிறாள் அம்மா
நிக்க நேரமில்லை நினைத்து
பார்க்க வழியுமில்ல -வேலை
எட்டுமணிநேரமல்ல!
நீங்கள் போட்டுருக்கிறபனியனுக்குள்
புதைந்திருக்கு எங்கள்
வாழ்க்கை-வேலை
எட்டுமணிநேரமல்ல!
படிக்க போன பிள்ளைக்கு
பசியாத்த வழியுமில்ல
குடிக்கிற கூலுக்கே
குடும்பம் முழுக்க
வேலைக்கு-வேலை
எட்டுமணிநேரமல்ல
பள்ளிகூடம் விட்டவுடன்
பறந்து வருவான் பிள்ளை-அம்மா
பாயாசம் வைத்திருப்பாளென
பாசத்துடன் அள்ள வழியில்ல-வேலை
எட்டுமணிநேரமல்ல
நின்னுகிட்டே பார்க்கிறாள்
வேலை அம்மா-
உட்கார வாரத்தில்
ஒரு நாள் லீவு
அன்னைக்கும் வேலையாம்
அர்ஜென்டாம் ஆர்டரு-வேலை
எட்டுமணிநேரமல்ல
அன்புடன்
தியாகு
(திருப்பூரில் பனிரெண்டுமணிநேரவேலை கட்டாயம்குறித்துஎனது வேதனையை எழுதியுள்ளேன்)
Tags
கவிதை