விடியல்

வசந்தங்கள் வாழ்வின்
வாய்ப்புகளாக இருப்பதில்லை!
விடியலை நுகர சில
வினாடிகள்என்ற நிலையுமில்லை!
முயற்சி அது ஒன்றே -நம்
முன்னே நிற்கும் வாய்ப்பு!
முட்டைக்குள் இருந்து குஞ்சு-தன்
முயற்சியில்தான் வருகிறது வெளியே!
கனவுகளை காகிதங்களில் தேக்கி
காத்திருப்புகளை கண்களில் தேக்கி நிற்பவனே!
கதவை தட்டும் வாய்ப்புக்காக காத்திருக்காதே!
விடியும் பொழுதுகள் ஒவ்வொன்றும்- உனக்காக
விடிகிறதுஎன்று நினைத்துக்கொள்!
மடியும் ஒவ்வொறு பொழுதும்-மீண்டும்
விடியும்என்று நினை!
முயற்சி அது ஒன்றே -நம்முன்னே நிற்கும் வாய்ப்பு!
கடந்த காலம்என்பது -வீணே
கழிந்த நாட்கள்
எதிர்காலம்என்பதுகனவு
சுமந்தநாட்கள்!
நிகழ்காலம் ஒன்றுதான் -உனது
நிகழ்வுகளை நடத்தும் மேடை


அன்புடன்

தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post