Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

முதலாளிகளை காப்பாற்ற துடிக்கும் மக இக

ஒரு குட்டிபூர்சுவாவின் கட்டுரைக்கு பதில்


உற்பத்தி உறவில் பெருவணிகன் என்ன செய்கிறான்; சிறுவணிகன் என்ன செய்கிறான் இவர்களுகிடையேயான உறவு எந்தவகைப்பட்டது என்பது மார்க்சிய ரீதியாக ஆராயப்படவேண்டியது எந்தளவு முக்கியமென்றால் அதை மாற்றுவதன் முக்கியத்தை போன்று மிக முக்கியமானது .

விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சொந்த காரனாக இல்லை மேலும் அதற்கு விலை வைக்கும் உரிமைகூட இல்லாத ஒரு அவல நிலைக்கும் காரணம் இந்த முதலாளித்துவ உற்பத்தி மற்றும் வினியோக முறையாகும் .(உற்பத்தி செய்பவன் உற்பத்தி பொருளுக்கு சொந்தகாரனல்ல என்பது முதலாளித்துவம்னு மார்க்ஸ் பேராசான் சொல்லி நூறாண்டுக்கு மேல் ஆயிடுச்சு)

உற்பத்தியில் முதலாளித்துவமும் வினியோகத்தில் சோசலிசமும் நிலவ முடியாது அப்படி நாமாக இந்தியாவில் போன்று அரசமூலதனம் நிலவினாலும் அது கூடிய விரைவில் அழிந்து முதலாளித்துவ வினியோக முறை வந்தே தீரும் என்பது கண்கூடானதல்லவா?

அரசு 80 சதமானம் கொள்முதல் செய்து கொண்டு இருந்து தற்போது அதை குறைத்து விட்டது என்றால் அரசு என்பது வர்க்க சார்பான அரசு முதலாளித்துவம் வளராதபோது அது செய்துகொண்டு இருந்த வேலையை வளர்ந்தவுடன் முதலாளிக்குத்தான் கையளிக்கும் மாறாக விவசாயிக்கே அந்த உரிமையை தராது அது அதன் வர்க்க குணாம்சம் .

இங்கே அரசு செய்யாததை இவர்கள் ஆதரிக்கும் குட்டி முதலாளியோ பெருவணிகனோ அல்லது கமிசன் மண்டி காரனோ செய்யவில்லை மாறாக அடிமடியில் கைவைப்பவர்கள் அவர்களே .ரிலையன்ஸ் விவசாயியை காப்பாத்துவான் என்றோ வால்மார்ட் ப்பாத்துவான் என்றோ யாரும் சத்தியம் செய்யவில்லை

மாறாக

சொந்த நாட்டின் கத்தியை வைத்து குத்தி கொண்டு செத்து போன்னு நீங்க சொல்வதை மறுத்து சொந்த நாட்டு கத்தியும் அந்நிய கத்தியும் மோதும்போது;


முதலில் அந்நிய கத்தி சொந்த நாட்டின் பெரு கத்தியுடன் மோதும் சூழலில் ஒப்பீட்டளவில் விவசாயிக்கு கொஞ்சம் கூட கிடைக்கும் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்(குறைந்த அளவுக்கேனும் குறைந்த காலமாவது) இதன் மூலம் இந்த நாட்டின் சுரண்டல் வர்க்கத்தை காப்பாற்ற பெருமுயற்சி செய்கிறீர்கள் .



அடுத்து விவசாயி அனுபவிக்கும் பல துன்பத்துக்கும் காரணம் இந்த அரசும் அதன் கொள்கையும் என பட்டியலிடும் நீங்கள் இதையும் கடந்து அவன் உற்பத்தி செய்கிறானே ஒரு பொருள் (விவசாய பொருள் )அதற்கு கூலியை நீங்கள் தூக்கி பிடிக்கும் வியாபாரி விலை நிர்ணயம் செய்ய என்ன தகுதி இருக்கு அந்த பொருளை உற்பத்தி செய்தவனா அவன் அந்த பொருள் மீது கூடுதலாக அவன் செலுத்தும் உழைப்பு ஏதுமின்றி அந்த பொருளை ஒன்றுக்கு மூன்று மடங்காக விலை ஏற்றி விற்பவன் சுரண்டல்காரனா இல்லையா ?


சுரண்டலை சுரண்டல்னு சொல்லு அது பெரிசா சிறிசா உள்நாடா வெளிநாடா என்பதை பிறகு பார்போம் .ஆக சுரண்டல் இன்றி ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தும் நகரவே நகராது என இருக்கும் நிலைமையை பேச, அது உற்பத்தி செய்வதற்கு முன் அந்த உற்பத்தியாளன் படும் கஸ்டங்களை அதாவது பசுமை புரட்சியில் கொட்ட பட்ட உரம் அந்த உரத்தை வாங்க அவன் கொட்டி கொடுக்கும் காசு , அரசு மானியம் இல்லாது ஒழிவது கொள்முதல் விலை குறைவது இதெல்லாம் சந்தை விதிகளால் ; நீர் கட்டி காப்பாத்த முயலும் பெரு வணிகனால்.(அது ரிலையன்ஸோ , கமிசன் மண்டியோ ,வால்மார்ட்டோ) எல்லாப்பயலும் சுரண்டுவது விவசாயிகளைத்தானே நியாயமாகப்பார்த்தால் நீங்கள் அவர்கள் பக்கம் நிற்கவேண்டும்)

(இதோ சுட்டியை அளித்து இருக்கிறேன் நேரத்துக்கு தகுந்தாற்போல் சில நேரங்களை வியாபாரிகளும் அரசும்

விவசாயிகளை ஏமாற்றுவதாக நீங்களே புதிய ஜனநாயகத்தில் எழுதிய கட்டுரையின் சுட்டியைதந்துள்ளேன்) http://www.vinavu.com/2011/07/14/irunda-kaalam/ (விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன்)


பிராக்டர் அன் கேம்பில் புலம்புகிறானாம் வால்மார்ட்டை பார்த்து பிராக்டர் அன் கேம்பில் என்பது முக்கில் பொட்டி கடை வைத்திருக்கும் அண்ணாச்சியா அவன் ரிலையனசை போன்றவன் இது ஒன்று போதுமே வால்மார்ட் ரிலையன்சுக்குத்தான் போட்டிக்கு வருகிறான் என்பதை புரிண்டு கொள்ள ரிலையன்சு போட்டி இன்றி அடித்து பிடிங்குவதை கேட்க ஆள் இல்லாமல் இருக்கிறான் அவனைபோன்றவந்தான் ஐடிசி அவனுக்கும் ஆப்பு வைக்கவே வால்மார்ட் வருகிறான்னு வச்சிக்கங்க இதை எதிர்ப்பது நேரா ரிலையன்சுக்கு வால்பிடிப்பதே ஆகும் .


அப்புறம் இந்த வால்மார்ட் பூச்சாண்டியை விடுங்க அந்நிய மூலதனம்னாலே வால்மார்ட்டுன்னு சுருங்கிட்டீங்க இந்த வால்மார்டோட சந்தையை காலி பண்ணிட்டு இருக்கான் அமெரிக்காவில் மற்றொரு ரீடெல் கிங்க் எனவே

அமெரிக்காதான் எதிரின்னு சொல்லிகிட்டே இருந்த சிபிஎம் மாதிரி நீங்க பெரிய கம்பெனிதான் எதிரி முதலாளித்துவம் அல்லன்னு சொல்ல ஆரம்பிப்பது திரிபுவாதமே.

சாராம்சம் :

1.100 சதவீதம் அந்நிய மூலதனத்தை ஏற்று கொண்ட சீனாவில்அது நடந்து 10 ஆண்டுக்கு பின்பும் அந்த நாட்டின் மொத்த சில்லறை வணிகம் என்பது இன்னும் 20 சதமானம் மட்டுமே முறைபடுத்தபட்ட வணிகமாக இருப்பது ஏன்

2.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்

3.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்

4.என்ன இருந்தாலும் சரவணா ஸ்டோரில் வேலை செய்பவன் சொந்த சாதிக்காரணாக இருந்தாலும் அவனுக்கு

வெளிய வந்து கடை ஓணராக வாய்ப்பிருக்கு என சொல்லும் உங்கள் குட்டி பூர்சுவா சிந்தனை எதை காட்டுகிறது ?

(ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட பார்க்காத உங்கள்

குட்டி பூர்சுவா மனப்பான்மை அம்பலப்படுவதையும் அம்மணமாக நீங்கள் நிற்பதையும் உணருகிறீர்களா இல்லையா?

5.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்

6.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா ?

7.உங்கள் சிகப்பு அங்கியை கழட்டி விட்டு தமிழ் தேசியவாத கட்சின்னு சொல்லிகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் . நீங்கள் நேரத்துக்கு தகுந்தாற்போல் முரண்பாடுகளை பேசுவதை விடுத்து பேசாமல் கட்சிக்கு பேரை மாற்றி கொள்ளுங்கள் -தமிழ் தேசிய கட்சி போன்ற பெயர்களை பரிந்துரைக்கிறேன்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

35 Responses so far.

  1. மறுபடியும் முதலில் இருந்தா?
    சிறு மூலதனத்தை காக்கும் ம க இ க
    பெரு மூலதனத்தை காக்க துடிக்கும் தியாகு
    என்று ஒருவரை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக் கொள்வீர்கள்..
    ஆனால் மக்களை மறந்து விடுவீர்கள்...

    சங்கம் அமைத்து பாட்டாளிகளை ஒன்று சேர்க்க வால்மார்ட் அவசியம் என்று கூறுகிறீர்கள்...
    முறை சாரா தொழிலாளிகள் சில்லறை வணிகத்தில் மட்டுமா இருக்கிறார்கள்..
    அவர்களை எல்லாம் ஒன்று சேர்க்க அந்நிய மூலதனம் தான் அவசியம் என்று கருதுகிறீர்களா?

    எந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு சாதகமாக வால்மார்ட் இயங்கும் என்று கூறுகிறீர்கள். கமிஷன் மண்டியில் பத்து ரூபாய் கொடுத்து விவசாயிடம் வாங்கினால், அந்நிய முதலாளிகள் பதினோரு ரூபாய் கொடுக்க போகிறார்கள்...
    தனியார் பால் நிறுவனங்கள் அதை தானே செய்கிறார்கள்.

    அரசே கொள்முதல் ஏற்று நடத்த வேண்டும் என்று கோராமல், எவனோ ஒருவன் மீது வைக்கும் நம்பிக்கை எதற்கு?
    கமாடிட்டி சந்தை விலைவாசியை உயர்த்துகிறது என்று தெரிந்தும் அதை பற்றியும் வாய் திறக்காமல் இருப்பது எதற்க்காக?

    கொரியர் டெலிவரி தொழிலாளிகள்,
    செய்தித்தாள் போடும் தொழிலாளிகள்,
    ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளிகள்,
    பழம் விற்கும் தள்ளு வண்டி தொழிலாளிகள்,
    அப்புறம்
    உங்கள் அகராதியில்
    இட்லி சுட்டு விற்கும் தொழிலாளி முதலாளிகள்,
    இடியாப்பம் சுட்டு விற்கும் தொழிலாளி முதலாளிகள்
    பூ கட்டி விற்கும் தொழிலாளி முதலாளிகள்
    இவர்களை எல்லாம் ஒன்று சேர்க்க அந்நிய முதலீடு தேவை. அப்படி தானே?

    அந்நிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால், சங்கத்தில் சேர்வது மிகவும் கடினம் என்று கூறுகிறீர்கள். மேலும் அனைத்து தொழிலாளர் சட்டங்களும் மதிக்கப் படும் என்று கூறும் பொழுது அந்த தொழிலாளி ஏன் உங்கள் சங்கத்தில் சேர வேண்டும் என்று கேட்பானே? அப்பொழுது என்ன சொல்வீர்கள்?

    சீனாவில் அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்ட பின்பும் ஏன் அங்கு முறை படுத்தப் பட்ட சந்தை இருபது சதவிகிதம் தான் இருக்கு என்று கேட்டு இருக்கிறீர்கள்.. அதற்க்கு நீங்கள் சீனாவின் அரசு என்ன கெடுபிடிகள் போட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்? மேலும் சீனம் முதலில் அனுமதித்தது 26 சதவிகிதம் தான் என்றும் அதுவும் ஒரு காரணம் என்றும் எங்கோ செய்தியில் படித்தேன்...

  2. //சங்கம் அமைத்து பாட்டாளிகளை ஒன்று சேர்க்க வால்மார்ட் அவசியம் என்று கூறுகிறீர்கள்...
    முறை சாரா தொழிலாளிகள் சில்லறை வணிகத்தில் மட்டுமா இருக்கிறார்கள்..
    அவர்களை எல்லாம் ஒன்று சேர்க்க அந்நிய மூலதனம் தான் அவசியம் என்று கருதுகிறீர்களா?//

    தோழர் ஜீவா,
    முதலில் மூலதனத்தை மூலதனம் என சொல் என்கிறோம் அதை ஏன் மழுப்ப வேண்டும் எப்படி திடிரென இந்தியாவில் முதலாளிகள் முளைத்து விடுகிறானா இல்லையே சின்ன சின்ன கடைகள் வைத்திருந்தவன் தானே சரவணா ஸ்டோர் வைக்கிறான்
    அப்போ இதைசுரண்டல் இல்லை என்பீர்களா ?

    முரண்பாடு தொழிலாளிக்கும் முதலாளிக்கும் என்பதை காணாமல் முரண்பாடு சிறு மூலதனத்துக்கும் பெரு மூலதனக்கும் மட்டுமே என்பது மார்க்சியமா ?

    உள்முரண்பாடு பாட்டாளிவர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் வெளி முரண்பாடு மட்டுமே சிறு மூலதனத்துக்கும் பெரு மூலதனத்துக்கும்

  3. /கொரியர் டெலிவரி தொழிலாளிகள்,
    செய்தித்தாள் போடும் தொழிலாளிகள்,
    ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளிகள்,
    பழம் விற்கும் தள்ளு வண்டி தொழிலாளிகள்,
    அப்புறம்
    உங்கள் அகராதியில்
    இட்லி சுட்டு விற்கும் தொழிலாளி முதலாளிகள்,
    இடியாப்பம் சுட்டு விற்கும் தொழிலாளி முதலாளிகள்
    பூ கட்டி விற்கும் தொழிலாளி முதலாளிகள்
    இவர்களை எல்லாம் ஒன்று சேர்க்க அந்நிய முதலீடு தேவை. அப்படி தானே?//

    முற்றிலும் தவறான புரிதல் பாட்டாளிகளை சேர்க்க பெரு மூலதனம் ஒரு நிபந்தனை அல்ல ஆனால் சிறு மூலதனம் என்பதன் அழிவு இன்னொரு பெருமூலதனத்தால் நாள் தோறும் நொடிதோறும் நடந்து வருகிறதே அதை உங்களால் தடுக்க முடியுமா ?

    ஏன் முடியாது ஏனென்றால் மூலதனத்துக்கு இடையிலான சண்டையில் பஞ்சாயத்து வேலை செய்வது கம்யூனிஸ்டின் வேலை அல்ல இதற்கிடையே எந்த மூலதனம் வந்தாலும் பாட்டாளிகளை திரட்டி போராட தூண்டுவதே கம்யூனிஸ்டுகளின் வேலை

  4. //அந்நிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால், சங்கத்தில் சேர்வது மிகவும் கடினம் என்று கூறுகிறீர்கள். மேலும் அனைத்து தொழிலாளர் சட்டங்களும் மதிக்கப் படும் என்று கூறும் பொழுது அந்த தொழிலாளி ஏன் உங்கள் சங்கத்தில் சேர வேண்டும் என்று கேட்பானே? அப்பொழுது என்ன சொல்வீர்கள்?/

    கடினம்தான் வரமாட்டாந்தான் அதற்காக சும்மா உக்கார்ந்திருக்க கூடாது முயற்சிக்கனும் முயற்சியை கைவிடனும் என்றும் சிறு வணிகணை புரட்சிகர சக்தின்னு அறிவிச்சு அவனை வச்சு போராடனும் என்றும் நான் சொல்லவில்லை தோழர்

  5. //சீனாவில் அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்ட பின்பும் ஏன் அங்கு முறை படுத்தப் பட்ட சந்தை இருபது சதவிகிதம் தான் இருக்கு என்று கேட்டு இருக்கிறீர்கள்.. அதற்க்கு நீங்கள் சீனாவின் அரசு என்ன கெடுபிடிகள் போட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்? மேலும் சீனம் முதலில் அனுமதித்தது 26 சதவிகிதம் தான் என்றும் அதுவும் ஒரு காரணம் என்றும் எங்கோ செய்தியில் படித்தேன்...//

    ஒரு நாட்டின் சமூக பொருளாதார விதிகளை ஆராயும் போது அந்த நாட்டின் பொருளாதாரமானது மற்றொரு நாட்டின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்படி இருந்தாலும் சமூக சூழல் வேறுபடும்

    அரசு அதன் திட்டங்கள் அன்றைய வரலாற்று கட்டம் இதையெல்லாம் பொருத்தி பார்க்க வேண்டும் இப்படி மொட்டையாக ஒப்பிட கூடாது ஆனால் விவாதத்தில் ஒப்பிட்டுத்தான் பேசுகிறார்கள் எனவே ஒப்பிட வேண்டியவனானேன்

    அடுத்து சிறு வியாபாரிக்கும் பாட்டாளிக்கும் இடையே நிலவும் தொடர்ப்பை பற்றி முந்தைய பதிவில் விளக்கி இருக்கிறேன் பாருங்கள்

  6. //இதற்கிடையே எந்த மூலதனம் வந்தாலும் பாட்டாளிகளை திரட்டி போராட தூண்டுவதே கம்யூனிஸ்டுகளின் வேலை//

    இதை தான் அந்நிய மூலதனத்தை எதிர்த்து போராடுபவர்கள் செய்கிறார்கள்...

    ஆனால் நீங்கள் தான் விவசாயிகள் செழிப்படைவார்கள் என்ற வாதம் செய்து விவசாயிகளின் எழுச்சியை மட்டுப் படுத்துகிறீர்கள்.

  7. //விவசாயிகளின் எழுச்சியை மட்டுப் படுத்துகிறீர்கள். //

    உள்நாட்டின் வியாபாரிகளை எதிர்த்து போராட வேண்டாம் என்கிறார்கள் அவர்களை நேச சக்தி என்கிறார்கள் சரியா பாருங்க

  8. அறிவுச்செல்வன் says:

    சூரிய ஜீவா என்ன தான் சொல்லவரிங்க உங்களின் கொள்கை என்ன என்றே புரியவில்லையே

  9. தோழர் தியாகு ,
    உள்நாட்டு முதலாளிகளின் சுரண்டல் போக்கை எதிர்த்து போராட தூண்ட வேண்டும், ஆனால் அதற்க்கு விடை அந்நியனை ஆதரிப்பதில் இல்லை..
    உள்நாட்டு முதலாளிகளை எதிர்த்து போராட வேண்டாம் என்று சொன்னால் அதை எதிர்த்து பதிவாக போடுங்கள்... அவர்கள் முகத் திரையை கிழியுங்கள்.. அதை விட்டு விட்டு சுற்றி வளைத்து மூக்கை தொடுவது எதற்கு?

    தோழர் அறிவுச்செல்வன்...
    உங்கள் சந்தேகம் பொதுவாக வைக்கப் படுவதால், என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...
    நான் ஒரு தொழிற்சங்க வாதியாக இருந்தவன்.. ஆகையால் மக்கள் கஷ்டப் பட்டால் நானும் கஷ்டப் படுவேன் அவ்வளவே... நான் மக்கள் என்று கூறுகிறேன், கட்சி தலைமைகளை குறிப்பிடவில்லை என்பதை அடிக்கோடு இடுகிறேன்

  10. மருதன் says:

    நீங்கள் சுசியின் கருத்தினை பிட்டு பிட்டாக வாந்தி எடுக்கிறீர்கள். உங்களுக்கு மகஇக வை பற்றி என்ன தெரியும். விமர்சனம் செய்யவும் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி உங்களை போன்ற ப்ளாக் மட்டுமே எழுதி கொண்டிப்பவர்களுக்கு இல்லை என்பதே எனது கருத்து.

  11. மருதன் says:

    நீங்கள் சுசி யின் கருத்தினை பிட்டு பிட்டாக வாந்தி எடுக்கிறீர்கள். உங்களுக்கு மகஇக வை பற்றி என்ன தெரியும். விமர்சனம் செய்யவும் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி உங்களை போன்ற ப்ளாக் மட்டுமே எழுதி கொண்டிப்பவர்களுக்கு இல்லை என்பதே எனது கருத்து .

  12. //எந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு சாதகமாக வால்மார்ட் இயங்கும் என்று கூறுகிறீர்கள். கமிஷன் மண்டியில் பத்து ரூபாய் கொடுத்து விவசாயிடம் வாங்கினால், அந்நிய முதலாளிகள் பதினோரு ரூபாய் கொடுக்க போகிறார்கள்...
    தனியார் பால் நிறுவனங்கள் அதை தானே செய்கிறார்கள்.//
    சூ ர்யா

    ஹி..ஹி.. அந்த ஒரு ருபாய் கூட விவசாயிக்கு கூடுதலாக கொடுக்க கூடாதுனு ஒரு நல்லெண்ணமா :-))

    ஏன் அந்த ஒரு ரூபாய் விலை அதிகம் வச்சு நம்ம வியாபாரி இத்தன காலமாக வாங்கலை.அந்நிய முதலாளி ஒரு ரூ கூடுதலாக கொடுத்தா அது என்ன பெரிய தொகையானு கேட்கறிங்க!

    //அரசே கொள்முதல் ஏற்று நடத்த வேண்டும் என்று கோராமல், எவனோ ஒருவன் மீது வைக்கும் நம்பிக்கை எதற்கு?//

    கண்டிப்பாக கோரணும், ஆனால் 50-60 வருசமா ஏன் நீங்க கோரலை, கோரியும் காரியம் ஆகலையா? கடந்த கால்த்தில உள்ளூர் ஆளுங்களைப்பார்த்தாச்சு, ஒன்னும் நடக்கலை, என்ன செய்ய சொல்றிங்க சூர்யா? அரசாங்கத்திடம் சொன்னா அதிக விலைக்கொடுக்கப்போகிறது னு சொல்ல்லும் நபரா நீங்க!

    அரசாங்கம் குறைந்த பட்ச ஆதரவு விலை எப்படி தீர்மானிக்கிறதுனு பார்த்த பிறகுமா இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிங்க. விவசாயம்னா என்னனு தெரியாம உங்களைப்போல தான் பலரும் பேசிக்கிட்டு இருக்காங்க!

  13. //நான் ஒரு தொழிற்சங்க வாதியாக இருந்தவன்.. ஆகையால் மக்கள் கஷ்டப் பட்டால் நானும் கஷ்டப் படுவேன் அவ்வளவே... நான் மக்கள் என்று கூறுகிறேன்,//

    சூர்யா,

    அப்படியா நம்மப முடியவில்லையே, மக்கள் கஷ்டப்பட்டா தொழிற்சங்க வாதியும் கஷ்டப்படுவான் ஆனா சொல்லிப்பாரா கஷ்டம்னு, இப்போ பேருந்து கட்டணம் ஏறிடுச்சு மக்கள் கஷ்டப்படுறாங்க ,ஏன் போக்குவரத்துகழகத்தில இருக்க தொழிற்சங்க வாதிகள் மக்கள் கஷ்டத்துக்கு குரல் கொடுக்கவில்லை?

    குரல் கொடுக்க மாட்டாங்க ஏன் எனில் பேருந்துக்கட்டணம் அவங்களைப்பாதிக்காது , இலவச பிரயாணம் அவங்களுக்கும் குடும்பத்துக்கும் கிடைக்குதுனு நினைக்கிறேன்.

    ஆண்டுக்கு ஒரு முறை போனஸ் பேச்சுவார்த்தை நடக்கும்ல, அப்போ கம்மியா அறிவிச்சா மட்டுமே குரல் கொடுப்பாங்க ,போராடுவாங்க.ஏற்கனவே இதே அம்மா ஆட்சில போராட்டம் அறிவிச்சு சென்னைல மினி பஸ் ஓட விட்டாங்க அம்மா!

    போனஸ் கேட்டா நஷ்டம் எப்படி உயர்த்த முடியும்னு அரசாங்கம் சொல்லுமே, அதான் இப்போ கட்டணம் ஏத்தினத எந்த போக்குவரத்து தொழிற்சங்கவியாதியும் கண்டுக்கல, அப்போ தானே புள்ளிவிவரம் சொல்லி போனஸ் தொகைய உயர்த்திக்கேட்க முடியும் அரசாங்கத்திடம் :-))

    நல்ல தொழிற்சங்கக்கொள்கை :-))

  14. /,ஏன் போக்குவரத்துகழகத்தில இருக்க தொழிற்சங்க வாதிகள் மக்கள் கஷ்டத்துக்கு குரல் கொடுக்கவில்லை?//

    தல உங்க கேள்வி நச்

  15. வவ்வால் தோழர்...
    நல்லா பேசுறீங்க... இது முதலாளித்துவ அரசு ஆகையால் இவர்கள் பாட்டாளிகளுக்கு சாதகமாக வர மாட்டார்கள்.. ஆனால் இதை தெளிவு படுத்தி எந்த விவசாய சங்கங்களும் எந்த விவசாயியின் மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வில்லை.. போராடும் என்னத்தை எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து பாடல் பாடி அனைத்து விவசாயிகளும் அனைத்துக் கொண்டனர்...

    இரண்டாவது,
    எந்த தொழிற்சங்க வாதியும் ஏன் பேருந்து கட்டண உயர்வை எதிர்க்கவில்லை என்று கேட்டு இருக்கிறீர்கள்? ஏனெனில் அவர்கள் தொழிற்சங்க வாதிகள் அல்ல... அவர்களுக்கு வேறு பெயர் இருக்கிறது... சந்தர்ப்ப வாதிகள்... ஒரு உண்மையான தொழிற்சங்க வாதி மக்களை குறித்து கவலைப் பட வேண்டும்... இல்லை என்றால் அவனது தொழிற் சங்கத்தில் வேலை சரியாக நடக்கவில்லை என்று அர்த்தம்.

    ஆக உங்களை பொறுத்தவரை வெளிநாட்டுக்காரன் போடும் அந்த ஒரு ரூபாய் பிச்சைக் காசு போதும்... சூடு சுரணை இருக்காது.. அதானே...

    தியாகு தோழர்,
    //தல உங்க கேள்வி நச்//
    உங்கள் முகமூடி இந்த வாக்கியத்தில் கிழிந்தது...
    யோசிச்சு பேசுங்க

  16. நண்பர் வவ்வால்,
    தோழர் சூர்யஜீவா //நான் ஒரு தொழிற்சங்க வாதியாக இருந்தவன்.. ஆகையால் மக்கள் கஷ்டப் பட்டால் நானும் கஷ்டப் படுவேன் அவ்வளவே... // என்று கூறியது அவரைப் பற்றிய தன்னிலை விளக்கம்போல்தான் தெரிகிறது. நடைமுறையில் இருக்கும் பிரபல தொழிற்சங்க வாதிகளைப்பற்றி அல்ல என்று நினைக்கிறேன். மற்றபடி தொழிற்சங்க வாதிகளைப்பற்றிய உங்களது பொதுவான விமர்சனங்கள் சரியானவையே. ஆனால் அவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. லெனின் தொழிற்சங்கங்களை கம்யூனிசப் பாடசாலைகளாக நடத்த வேண்டும் என்று கூறினார். இவர்களோ பொருளாதாரவாதத்தைத் தாண்டி தொழிற்சங்கங்களை கொண்டு செல்லவில்லை. அதனால்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டவுடன் பாதிக்கப்படும் மக்களுக்காக கவலைப்படாமல் ஏறப்போகும் பேட்டாவையும் போனஸையும் நினைத்து சந்தோசப்படும் நிலையில் அவர்கள் இருக்கின்றனர். இவர்களை வைத்து கம்யூனிசம் மதிப்பிடப்படுவதால் இவர்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது கம்யூனிசத்திற்கும் துரோகம் இழைக்கின்றனர்.

  17. சூரிய ஜீவா ,

    நீங்கள் உங்களை தொழிற்சங்கவாதி என அழைத்து கொண்டால் அதன் கருத்து தொழிலாளர்களின் நலன் பேணுதல் சில்லறை வர்த்தக விவகாரத்தில் பெரும்பாலான தொழிலாளர்களான விவசாய தொழிலாளர்களின் நலனை பெருமுதலாளிகளான அம்பானிகளோ அல்லது கமிசன் மண்டி அண்ணாச்சிகளோ காப்பாற்றவில்லை என்பது குறித்து என்ன கருத்தை கொண்டு இருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ள ஆவல்

  18. ஜீவா எனது பல கேள்விகளுக்கு விடை சொல்லவில்லை நீங்கள் அதில் ஒன்று

    //இட்லி சுட்டு விற்கும் தொழிலாளி முதலாளிகள்,
    இடியாப்பம் சுட்டு விற்கும் தொழிலாளி முதலாளிகள்
    பூ கட்டி விற்கும் தொழிலாளி முதலாளிகள்
    இவர்களை எல்லாம் ஒன்று சேர்க்க அந்நிய முதலீடு தேவை. அப்படி தானே?//

    முற்றிலும் தவறான புரிதல் பாட்டாளிகளை சேர்க்க பெரு மூலதனம் ஒரு நிபந்தனை அல்ல ஆனால் சிறு மூலதனம் என்பதன் அழிவு இன்னொரு பெருமூலதனத்தால் நாள் தோறும் நொடிதோறும் நடந்து வருகிறதே அதை உங்களால் தடுக்க முடியுமா ?

    ஏன் முடியாது ஏனென்றால் மூலதனத்துக்கு இடையிலான சண்டையில் பஞ்சாயத்து வேலை செய்வது கம்யூனிஸ்டின் வேலை அல்ல இதற்கிடையே எந்த மூலதனம் வந்தாலும் பாட்டாளிகளை திரட்டி போராட தூண்டுவதே கம்யூனிஸ்டுகளின் வேலை //

    ஆனால் தான் ஒரு தொழிற்சங்கவாதி என சொல்லும் நீங்கள் விவாதத்தின் தொடர்ச்சியாக உங்கள் கருத்தை வைக்க வேண்டும் என்பதையும் சிந்தியுங்கள்

  19. தியாகு சார்...
    நல்லா தான் கேக்குறீங்க,
    ஆனா நான் அதுக்கான பதிலை முன்னாடியே கொடுத்துட்டேன்...

    அப்புறம் வவ்வால் தோழர்,
    அது என்ன அது, விவசாயிகள் குறித்து தெரிந்து கொள்ள விவசாயியாக தான் இருக்க வேண்டும் என்ற குறுகிய பார்வை...
    உங்களுக்கு விசாலமான பார்வை இருக்கும் என்று நினைத்தேன்.. ஏமாத்தி விட்டீங்க...

  20. சூர்யா,
    நான் என்ன சொல்லி இருக்கேன்னு பாருங்க தோழர்,
    // விவசாயம்னா என்னனு தெரியாம உங்களைப்போல தான் பலரும் பேசிக்கிட்டு இருக்காங்க!//

    விவசாயீயாக இருக்க வேண்டும் என சொல்லவில்லை, விவசாயம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். அப்போ தான் சில விஷயங்கள் ஓரளவாவது புரியும்.

    விவசாயம்னா என்னனு செய்தித்தால் படிப்பது, தொ.கா பார்ப்பது என எளிதாக தெரிந்துக்கொள்ளலாம் தானே!

    //அப்புறம் வவ்வால் தோழர்,
    அது என்ன அது, விவசாயிகள் குறித்து தெரிந்து கொள்ள விவசாயியாக தான் இருக்க வேண்டும் என்ற குறுகிய பார்வை...
    உங்களுக்கு விசாலமான பார்வை இருக்கும் என்று நினைத்தேன்.. ஏமாத்தி விட்டீங்க...//

    நீங்க தான் என்ன ஏமாத்திட்டிங்க , நான் கூட உங்களுக்கு கண்னு பவர்ஃபுல், தமிழ் நல்லா தெரியும் புரியும்னு என்று நினைத்திருந்தேன் ! :-))

  21. சூர்யா,

    வாங்க நண்பரே,

    //ஒரு உண்மையான தொழிற்சங்க வாதி மக்களை குறித்து கவலைப் பட வேண்டும்... இல்லை என்றால் அவனது தொழிற் சங்கத்தில் வேலை சரியாக நடக்கவில்லை என்று அர்த்தம//

    நீங்க சொல்றத வச்சுப்பார்த்தா தமிழ்நாட்டில உண்மையான தொழிற்சங்கங்களே இல்லைப்போல தெரியுதே! :-))

    அப்புறம் எங்கே சரியா வேலை நடக்குதா சங்கத்திலனு பார்க்க , வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் நடக்குது தொழிற்சங்கம் என்ற பெயரில் :-))

    //ஆக உங்களை பொறுத்தவரை வெளிநாட்டுக்காரன் போடும் அந்த ஒரு ரூபாய் பிச்சைக் காசு போதும்... சூடு சுரணை இருக்காது.. அதானே//

    ஏன் அந்த ஒரு ரூபாய் பிச்சைக்காசை உங்க ஆளுங்க போடக்கூடாது விவசாயிக்கு?

    உயிரிரோட இருந்தா தான் உடம்புல சூடு.சொரணை இருக்கும், அதப்பத்திக்கவலைப்பட முடியும், விவசாயி நடத்துவது உயிர்ப்போராட்டம் என்பதை புரிந்துக்கொள்ளவும், தயவு செய்து செவப்புக்கண்ணாடியை கழட்டி விட்டுப்பார்உயிரிரோட இருந்தா தான் உடம்புல சூடு.சொரணை இருக்கும், அதப்பத்திக்கவலைப்பட முடியும், விவசாயி நடத்துவது உயிர்ப்போராட்டம் என்பதை புரிந்துக்கொள்ளவும், தயவு செய்து செவப்புக்கண்ணாடியை கழட்டி விட்டுப்பார்உயிரிரோட இருந்தா தான் உடம்புல சூடு.சொரணை இருக்கும், அதப்பத்திக்கவலைப்பட முடியும், விவசாயி நடத்துவது உயிர்ப்போராட்டம் என்பதை புரிந்துக்கொள்ளவும், தயவு செய்து செவப்புக்கண்ணாடியை கழட்டி விட்டுப்பார்உயிரிரோட இருந்தா தான் உடம்புல சூடு.சொரணை இருக்கும், அதப்பத்திக்கவலைப்பட முடியும், விவசாயி நடத்துவது உயிர்ப்போராட்டம் என்பதை புரிந்துக்கொள்ளவும், தயவு செய்து செவப்புக்கண்ணாடியை கழட்டி விட்டுப்பார்க்கவும்!

  22. சிவகுமார்,

    //என்று கூறியது அவரைப் பற்றிய தன்னிலை விளக்கம்போல்தான் தெரிகிறது//

    அவரோட சுய நிலைபாட்டினை தான் சொல்லி இருக்கார், ஆனால் அவர் ஒருவரை வைத்து பொதுவாக எல்லாம் அப்படி இருப்பாங்க என்பதாக கட்டமைக்கிறார் என்பதாலேயே கேள்விக்கேட்டு இருந்தேன்.

    தொழிற்சங்கத்தில இவர் ஒருத்தர் உத்தமராக இருந்தாப்போதுமா? அதை முன் வைத்து உதாரணமாக பேசுவது,பொதுமைப்படுத்துவதே இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

    //மற்றபடி தொழிற்சங்க வாதிகளைப்பற்றிய உங்களது பொதுவான விமர்சனங்கள் சரியானவையே. ஆனால் அவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. //

    போச்சு சூர்யா கொதிக்கப்போறார் :-))

    நீங்க சரியா உண்மையைப்புரிது வைத்திருக்கிறீர்கள், செவப்பு துணி மலிவாக இருக்குனு ஒரு ஜோடி சட்டை தைத்து வைத்திருக்கும் தொழிற்சங்க வாதிகள் கேட்பாங்களா உங்கப்பேச்ச!

    //பாதிக்கப்படும் மக்களுக்காக கவலைப்படாமல் ஏறப்போகும் பேட்டாவையும் போனஸையும் நினைத்து சந்தோசப்படும் நிலையில் அவர்கள் இருக்கின்றனர். இவர்களை வைத்து கம்யூனிசம் மதிப்பிடப்படுவதால் இவர்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது கம்யூனிசத்திற்கும் துரோகம் இழைக்கின்றனர்.//

    100 சத உண்மை! கட்டணம் உயர்த்திய அன்று பொதுமக்கள் கேள்விக்கேட்டால் , என்னமா எரிந்து விழுந்தார்கள் நடத்துனர்கள். போய் கோட்டைல கேளு, காசு இல்லைனா ஏன் பஸ் ஏற வர, நடந்துப்போக வேண்டியது தானே என பல பேச்சுகள்.(பேருந்து மாதாந்திர அட்டை வாங்கியவர்கள் தான் முழித்தார்கள்)

    அவங்களால எல்லாருக்கும் பொறுமையாக விளக்கம் கொடுக்க முடியாது தான் , ஆனால் அவர்கள் பதில் சொன்ன விதத்தில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லை, இதெல்லாம் சகஜமான உயர்வு தானே , எதுக்கு குறைப்பட்டுக்கொள்கிறார்கள் என்பதான தொனி தென்ப்பட்டது தான் வருத்தமானது.

    கட்டண உயர்வு என்பது சிறிய சதவீதங்களில் படிப்படியாக உயர்த்தப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை, ஒரே நேரத்தில் சுமார் 90% சதவீதக்கட்டண உயர்வாக இருக்கிறது.இதற்காக சிறு முனகலைக்கூட தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தவில்லை. சூடு ,சொரணைப்பத்திலாம் அவங்க கவலைப்படலை போல!

  23. தோழர் வவ்வால்...
    நல்லா சமாளிக்கிறீங்க...
    நான் தொழிற்சங்க வாதியாக இருந்தேன் என்று இறந்த காலத்தில் தான் எழுதி இருக்கிறேன்..
    தொழிற் சங்கம் எப்படி நடத்துவது என்று தெரியாமல் சுயநல அரசியல் கொடி கட்டி பறக்கும் தொழிற்சங்கத்தில் எனக்கு உடன் பாடு இல்லை...
    மேலும்
    விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள செய்தித்தாள் படித்தால் போதும் என்று அந்தர் பல்டி அடிப்பது நல்லா இருக்கு... ஆனா அதை எல்லாம் நான் செய்யவில்லை என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள்?
    சிவப்பு கண்ணாடி போட்டு பார்த்தால் தான் உண்மை தெரியும் தோழர்...
    விவசாயிகள் மீது அக்கறை கொண்டு பேசியவன் தான் லெனின்... அவனும் சிகப்பு கண்ணாடி தான் அணிந்திருந்தான்...
    நேற்று உங்கள் வலை பூவில் விதர்பா பகுதியின் விவசாயியின் பேட்டியின் சுட்டியை கொடுத்திருக்கிறேன்..
    தலை கீழாக பார்க்காமல் சிவப்பு கண்ணாடி போட்டு பார்க்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  24. சூர்யா,

    //நல்லா சமாளிக்கிறீங்க...
    நான் தொழிற்சங்க வாதியாக இருந்தேன் என்று இறந்த காலத்தில் தான் எழுதி இருக்கிறேன்..//

    என்னத்த சமாளிச்சேன், உங்க அளவுக்கு எனக்கு சமாளிக்க தெரியலையே :-))

    இறந்த காலம் சொல்றிங்க, ஆனால் தொழிற்சங்கத்தினர் மக்களோட சேர்ந்து செயல்ப்படுவாங்கனு சொல்றிங்க எப்படி ? :-))

    //விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள செய்தித்தாள் படித்தால் போதும் என்று அந்தர் பல்டி அடிப்பது நல்லா இருக்கு..//

    பிரண்ட்லைண்ல வந்த பேட்டியத்தானே நீங்க சுட்டிக்காட்டுறிங்க, நீங்க என்ன விதர்பாவுக்கு நேராப்போய் விஜய் ஜவந்தியா என்ற விவசாயியுடன் நேராவாப்பேசினீங்க, இதைத்தான் செய்தித்தாள்களில் ,தொ.கா மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என சொல்லி இருந்தேன்.

    ஒரு வேளை நான் வார இதழ், மாதம் இரு முறை வருவது,மாத இதழ் , இணையம், வானொலி என்று சொல்லவில்லைனு சொல்லப்போறிங்களா :-))

    இப்பவும் விவசாயம்னா என்ன என தெரியாமல் என்பதை விவசாயம் செய்தீங்களா, விவசாயியா என நான்க்கேட்டேன் என சொல்வதாக நீங்கள் எடுத்துக்கொண்டால் , இதற்கு மேல் இதில் பேச எதுவும் இல்லை.

    அப்புறம் உங்க பல்டி ஒன்ற காட்டுறேன் பாருங்க, என்ப்பதிவில் இப்படி சொல்லி இருக்கீங்க,

    //நாம் எங்கேயும் விவசாயம்னா என்னன்னு பேசல தோழர்... அப்புறம் எப்படி எனக்கு விவசாயம்னா என்னனு தெரியல என்று முடிவு செய்தீர்கள்?//

    இதற்கு என்ன பொருள் சூர்யா?

    விவசாயம், விவசாயி பற்றிப்பேசுவது என்றால் , நெல்லுக்கு எத்தனை செண்டிமீட்டர் இடைவெளி விடனும், நீர்ப்பாச்சனும்னு பேசுவதா? விவசாயி அடையும் கஷ்டம் பற்றிப்பேசுவதும் விவசாயம் பற்றிப்பேச்சு தானே? (நான் மாய்ந்து ,மாய்ந்து குறைந்த பட்ச ஆதரவு விலை, கொள்முதல்,சந்தைப்படுத்துதல், சேதாரம், என விவசாயத்தோட கூறுகளைப்பேசுவது உங்களுக்கு வேற என்னமோ போல தெரிஞ்சு இருக்கே)

    கடைசில சில்லறை வர்த்தகர்கள், இடைத்தரகர்களுக்கும் விவசாயத்துக்கும் என்ன தொடர்பு, விவசாயி யாரோ எவரோ அவனுக்கு அவங்களால எந்த பாதிப்பும் இல்லைனு சொல்லிடுவிங்களோனு தோன்றுகிறது :-))

    அடப்போங்க முன்னாள் தொழிற்சங்க தோழரே இப்படியே மாற்றி,மாற்றிப்பேசிக்கொண்டிருந்தால் நல்லப்பொழுதுப்போக்கா தான் இருக்கும், ஆனால் அப்படிப்பேச என்னிடம் நேரமோ,சக்தியோ இல்லையே :-))

  25. தோழர் வவ்வால்...
    வாலை மட்டும் பிடித்துக் கொண்டு, தலையை விட்டு விட்டு பேசினால் கடினமாக தான் இருக்கும்..
    முதலில் விவசாயம்னா என்னன்னு தெரியாம பேசாதீங்க என்று சொல்லியது நீங்கள் தான்...
    அந்நிய முதலீடு உள்ளே வந்தால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று சொல்லியது நான்..
    நீங்க தான் அவனுங்க உள்ள வந்தா விவசாயி செழிப்படைவான்னு சொன்னீங்க...
    தொழிற்சங்க வாதிகள் மக்களை குறித்து கவலைப் பட்டால் தான், தொழிற்சங்க வாதி என்று கூறியவன் நான்...
    மக்களை குறித்து கவலை கொள்ளவில்லை என்றால் அவன் தொழிற்சங்கவாதி இல்லை என்று பொருள் என்று கூறியவன் நான்...
    விவசாயம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்று கேட்கவே, நான் அப்படி கேட்டேன்..
    ஒரு விஷயம் குறித்து எனக்கு தெரியவில்லை என்றால் அதை குறித்து தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு வாதம் செய்வேனே தவிர சிலர் போல ஒண்ணுமே தெரியாமல் வாதம் செய்ய மாட்டேன்...
    ஆனால் ஒன்று விஷயத்தை விட்டு விட்டு எங்கெங்கோ சுற்றுவது உங்களுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்காய் இருக்கலாம்..
    வாதம் செய்யும் பொழுது விஷயத்தை பற்றி மட்டும் பேசினால் கொஞ்சம் நல்லா இருக்கும்..

  26. Robin says:

    பயணிகளை அவமதிக்கும் பேருந்து நடத்துனர்கள், பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் - இவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு தொழிற்சங்கம்தான்.

  27. சூர்யா,

    இப்போ உங்களுக்கு என்ன தேவை?

    1) உங்களுக்கு நல்லா விவசாயம் பற்றி தெரியும், தெரியாதது எதுவுமே இல்லை!!!

    2) நீங்க முன்னாள் தொழிற்சங்கவாதி மட்டுமே இப்போ சங்கத்தில இல்லை.

    3)தொழிசங்கவாதிகள் மக்கள் கஷ்டத்தில் பங்கு எடுத்துக்கொள்கிறார்கள்

    4) அந்நிய மூதலீடு உள்ள வந்தால் விவசாயி அழிந்து விடுவான்

    இப்படினு நீங்க சொன்னது எல்லாம் சரினு சொல்லணும் அவ்வளவு தானே , நீங்க சொன்னது எல்லாமே சரி தோழரே!

    பின்குறிப்பு: சிவகுமார் என்பவரது பின்னூட்டம் ,அதற்கு என்ப்பதில் என்னவென பார்க்கவும்.
    அப்புறம் தியாகு உங்களை கருத்துக்களை வைக்க சொல்லி இருக்கார் இருந்தால் வைக்கவும்.

  28. தோழர் வவ்வால்...
    தியாகு சாரின் கேள்விகளுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன்...
    சிவக்குமார் தோழருக்கு நீங்கள் கூறிய பதிலை பார்க்காமல் நான் பேச வில்லை...
    எனக்கு விவசாயம் முழுவதும் தெரியும் என்று எங்கும் கூறவில்லை..
    தொழிற்சங்க வாதிகள் மக்கள் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்... பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறவில்லை..
    அந்நிய முதலீடு வந்தால் மட்டும், விவசாயி அழிந்து விட மாட்டான்... ஏற்கனவே அவன் அழிவில் தான் இருக்கிறான்... ஆனால் அந்நிய முதலீடு உள்ளே வந்தால் விவசாயி வாழ்வு செழிக்கும் என்று பொய் கூறி விவசாயியின் போராட்ட எண்ணத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறேன்..
    இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை..
    விவசாயம் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ள உங்கள் புது பதிவை படிக்கிறேன்... தெரிந்து கொள்கிறேன்...
    இன்று உங்களால் ஒரு புது விஷயம் கற்றுக் கொண்டேன்... நன்றி

  29. Bucker says:

    அந்நிய முதலீடு வந்தால் விவசாயி செழிப்படைவான் என்பது சுத்த முட்டாள்தனமான கருத்து. இப்படித்தான் இந்தியாவில் வெள்ளைக்கார துரைமார்களை அஹோஓஹோ வென்று சிலர் நக்கிப் பிழைத்தனர். அந்த லிஸ்டுலயா இருக்காரு தியாகு.

  30. இந்திய மூலதனம் அந்நிய நாட்டில் சுரண்டுவதை எதிர்க்காத தேசபக்தி ஆளா நீங்கள் பக்கர்

    //முதலாளித்துவம் தனது தேசிய அடிநிலத்தை தகர்த்தே வளர்கிறது - கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ்//

  31. Bucker says:

    செம்மலர் தியாகு,

    நீங்களாகவே என் கருத்தை முன்முடிவுடன் பேசவேண்டாமே.

  32. Bucker says:

    //முதலாளித்துவம் தனது தேசிய அடிநிலத்தை தகர்த்தே வளர்கிறது - கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ்//

    மதவாதிகளைப் போல பேசுகிறீர்கள். அதற்காக ஒவ்வொரு வர்க்கமும் முதலாளித்துவத்தால் நசுக்கப்படுவதை ஒரு கம்யூனிஸ்டு கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? அல்லது மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக உரு மீன் வரும் வரைக்கும் காத்திருந்த கொக்கு போல் காத்திருக்க வேண்டும் என்கிறீர்களா?

  33. //மதவாதிகளைப் போல பேசுகிறீர்கள். அதற்காக ஒவ்வொரு வர்க்கமும் முதலாளித்துவத்தால் நசுக்கப்படுவதை ஒரு கம்யூனிஸ்டு கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? அல்லது மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக உரு மீன் வரும் வரைக்கும் காத்திருந்த கொக்கு போல் காத்திருக்க வேண்டும் என்கிறீர்களா? //

    அப்படி எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அணிசேர்ந்து எதிர்த்தாலும் குறைந்த பட்சம் அவர்களது தற்போதைய வாழ்வு அதாவது சுரண்டல் வாழ்வு நீடித்து நிற்கும் என்கிற உத்திரவாதமெல்லாம் பாட்டாளிவர்க்கம் தரகூடாதுன்னு லெனின் சொல்றார்

    நீங்க என்ன சொல்றீங்க பக்கர்

  34. Bucker says:

    //அப்படி எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அணிசேர்ந்து எதிர்த்தாலும் குறைந்த பட்சம் அவர்களது தற்போதைய வாழ்வு அதாவது சுரண்டல் வாழ்வு நீடித்து நிற்கும் என்கிற உத்திரவாதமெல்லாம் பாட்டாளிவர்க்கம் தரகூடாதுன்னு லெனின் சொல்றார்//

    அய்யா! உத்திரவாதமெல்லாம் இங்கு யார் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்?

  35. //அந்நிய முதலீடு வந்தால் விவசாயி செழிப்படைவான் என்பது சுத்த முட்டாள்தனமான கருத்து. இப்படித்தான் இந்தியாவில் வெள்ளைக்கார துரைமார்களை அஹோஓஹோ வென்று சிலர் நக்கிப் பிழைத்தனர். அந்த லிஸ்டுலயா இருக்காரு தியாகு. //

    பக்கர் நான் அந்நிய மூலதனம் வந்தால் ஒப்பீட்டு அளவில் குறைந்த காலத்துக்குத்தான் விவசாயிக்கு நன்மை கிடைக்கும் என போட்டிருப்பேன் நன்றாக படிக்கவும்

    //முதலில் அந்நிய கத்தி சொந்த நாட்டின் பெரு கத்தியுடன் மோதும் சூழலில் ஒப்பீட்டளவில் விவசாயிக்கு கொஞ்சம் கூட கிடைக்கும் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்(குறைந்த அளவுக்கேனும் குறைந்த காலமாவது) இதன் மூலம் இந்த நாட்டின் சுரண்டல் வர்க்கத்தை காப்பாற்ற பெருமுயற்சி செய்கிறீர்கள் .//