சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு-பாகம் 2

வால்மார்ட் சந்தையில் அனைத்து சிறு வணிகர்களையும் அழித்துவிடும் என புழுகுகிறது மக இக அல்லது ரிலையன்ஸுக்கு வால்பிடிக்கிறது என சொல்லலாம்

சிறு மூலதனம் என்பது பெருமூலதனமாக வளரும் அல்லது பெரு மூலதனத்தால் முழுங்கப்படும் என்பதும்
இதில் மூலதனம் வளர வளர பாட்டாளி வர்க்கம் உபரி பாட்டாளி வர்க்கம் உருவாவதும் வேலை இல்லாமல் ஒரு உபரி பாட்டாளி வர்க்கத்தை வைத்திருக்க வெண்டிய தேவை மூலதனத்தின் அடிப்ப்டை தேவையாகி விடும் என்பதும் இதில் இழப்பதற்கு ஏதுமில்லாத வர்க்கம் புரட்சியை நிகழ்த்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை படைக்க வேண்டும் என்பது மார்க்சியத்தின் பாலபாடம்

வால்மார்ட் போன்ற பெரிய மூலதனம் தொழிலாளிகளை சுரண்டுகிறது என்றால் சிறிய மூலதனம் சுரண்டாது அல்லது சுரண்டவில்லை என்பதற்கு உறுதியான பதிலை அளிக்க இயலுமா?

வால்மார்ட் குறைந்த கூலி தரவில்லை என்றால் சிறு வணிகர்கள் முதல்(உண்மை பொருளில் சிறுவணிகர்கள் ஆள் அமர்த்தி கொள்வதில்லை) பெரு வணிகர்கள் குறைந்தபட்ச கூலியை தருகிறார்களா அதை உறுதி படுத்த இயலுமா?

ஏன் சிறு மூலதனத்தை காப்பாற்ற முனைகிறோம் அது தேசியவாதத்தின் அடிப்படையிலா அல்லது எந்த அடிப்ப்டையில் காப்பாற்ற முனைகிறோம்

சிறு மூலதனம் நட்பு சக்தி என்றால் அவர்கள் முற்போக்கானவர்களா? பாட்டாளிவர்களுடன் இணைவார்களா இல்லையே நடைமுறையில் இல்லையே
இவர்களே இன்றைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்ளை அடிப்பவர்கள் உண்மையில் இன்றைக்கு விவசாயிகள் தற்கொலைக்கும் அவர்கள் விவசாயத்தை விட்டு ஓடிவர காரணமாகவும் இந்த கமிசன் மண்டிகாரர்களே இருக்கிறார்கள்

இவர்கள்தான் மக இகவின் நட்பு சக்தியா

ஒருவேளை விவசாயிகளை திரட்டி போராட்டம் என்கிற அடிப்படை கோட்பாட்டை இவர்கள் கைவிட்டு விட்டார்கள் என சூறாவளி கூறுவதும் இதைத்தானோ ?

பெருமூலதனம் சுரண்டும் என்றால் அதையே இன்னும் விரிவாக இன்னும் கொடூரமாக சிறு மூலதனம் செய்யும்

கவலை அதுவல்ல சிறு மூலதனகாரர்கள் பாட்டாளிகளாவர்கள் என்றால் சந்தோசமே பாட்டாளி வர்க்கத்துக்கு இன்னும் எண்ணிக்கை கூடும்

அடுத்து பெருமூலதனம் இருக்கும் இடங்களிலெல்லாம் ஏன் சங்கம் அமைக்க முடியும் என்பதை யோசித்து பார்க்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை

உண்மையில் பாட்டாளிகளை வைத்து சங்கம் அமைத்து போராடவது தெருவில் இறங்கி பிரசாரம் செய்ய்வது கண்டன ஆர்பாட்டம் செய்வதை விட அதிக சிரமமானது மேலும் இவர்கள் பெரிய அளவில் பாட்டாளிகளை திரட்டி சங்கம் அமைக்க விருப்பம் காட்டாததில் இருந்து இவர்களுக்கு புரட்சி மேல் நம்பிக்கை இல்லை என்பது
தனிநபர் சாகச வாதங்களேயே நம்புகிறார்கள் என்பதும்
தெளிவாக விளங்கம்

இவர்கள்தான் திரிபுவாதிகள் கண்டுகொள்ளுங்கள் மக்களே

-----------------
லெனின் எழுத்துக்கள்
--------------------
இதன் அடிப்படையில் தான் லெனின் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து முன்வைக்கின்றர்.


ஏகாதிபத்தியமானது


1. ஏகபோக முதலாளித்துவமாகும்.


2. புல்லுருவித்தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்.


3. அந்திமக்கால முதலாளித்துவமாகும்....



அதன் சாரப் பொருள்...


1. கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகள் முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்கு பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்து விடுகிறது.


2. பெரிய வங்கிகளின் ஏகபோகநிலை....


3. மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களை முதலாளித்துவ டிரஸ்டுகளும் நிதி ஆதிக்கக் கும்பலும் கைப்பற்றிக் கொண்டு விடுகின்றன...


4. சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே கூறுபோட்டு பாகப்பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது....


5. உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.... ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழிற்துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல, நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும்'' என்றார் லெனின்.
-------------------------

உலகமெங்கும் மூலதனத்தின் வளர்ச்சியை பற்றிய பார்வை இதோ

உலகில் உள்ள 200 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயமாதல் பொருளாதார நெருக்கடிக்குள் அமெரிக்காவுக்கும் ஜப்பனுக்கும் இடையில் எப்படிக் கைமாறியது எனப் பார்ப்போம்.

ஆண்டு - நாடு - பன்னாட்டு நிறுவன எண்ணிக்கை - வருமானம் கோடி டாலரில்

1982 ஜப்பான் 35 65,700
1982 அமெரிக்கா 80 1,30,000
1992 ஜப்பான் 54 2,00,000
1992 அமெரிக்கா 60 1,70,000
1995 ஜப்பான் 58 2,70,000
1995 அமெரிக்கா 59 2,00,000

14 வருடங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தரவு, அங்கும் இங்குமாக மூலதனம் நடத்திய குழிபறிப்புகளின் வெட்டுமுகத் தோற்றமே இது. இவை ஒரு இழுபறியான மோதலாக மாறி, அரங்கில் உண்மைக் காட்சியாகியுள்ளது. 1982இல் முன்னணி 200 நிறுவனங்களில் ஜப்பான் 35 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாக கொண்டிருந்தது. இது 1992இல் 54ஆகவும், 1995இல் 58ஆகவும் அதிகரித்தது. அமெரிக்காவோ 1982இல் மிகப்பெரிய 200 நிறுவனங்களில் 80 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருந்தது. இது 1992இல் 60ஆகவும், 1995இல் 59ஆகவும் குறைந்தது. மறுபக்கம் இந்த நிறுவனங்கள் சார்ந்த மூலதன திரட்சி 1982இல் ஜப்பான் 65,700 கோடி டாலரை கொண்டு 35 பன்னாட்டு நிறுவனங்கள் காணப்பட்டது. இது 1992இல் 54 ஆகிய அதேநேரம் மூலதனம் 2,00,000 கோடி டாலராகியது. 1995இல் 58 நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டு 2,70,000 கோடி டாலரை சொந்தமாக்கியது. அமெரிக்கா 1982இல் 80 பன்னாட்டு நிறுவனத்தைக் கொண்டு 1,30,000 கோடி டாலரை சொந்தமாகக் கொண்டிருந்தது. 1992இல் பன்னாட்டு நிறுவனங்கள் 60ஆக குறைந்ததுடன் 1,70,000 கோடி டாலரையும், 1995இல் 59 நிறுவனத்துடன் 2,00,000 கோடி டாலரைக் கொண்டு ஜப்பானுக்கு கீழ் சரிந்து சென்றது. இது ஒன்றையொன்று உறிஞ்சியதையும், ஏகாதிபத்திய முரண்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது. மூலதனம் தனக்கிடையில் ஒரு நிலையற்ற தன்மையை அடைவதுடன், மோதல் போக்குக் கொண்ட நெருக்கடியை அன்றாடம் சந்திப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே ஏகாதிபத்திய முரண்பாடாக இருப்பதுடன், இதுவே இராணுவ மோதலுக்குரிய முதிர்வு நிலையை அடைகின்றது. உலகச் சந்தை மறுபடியும் மீளப் பகிர்வதன் மூலமே, மூலதனம் தப்பிப் பிழைக்க முனைகின்றது.
---------------------

ஆகவே பாட்டாளிவர்க்கத்தின் தற்போதைய கடமை சிறுமூலதனத்தை பாதுகாப்பதல்ல பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதும் அதற்காக போராடுவதும் ஆகும்

ஆகவே சந்தை வளர்ச்சி விதிகளும் ஏகாதிபத்தியத்திடையே மோதலும் உலகமயமான விசயமாக இருக்கும் போது பாட்டாளிவர்க்க போராட்டமும் உலகம் தழுவியதாக அமையும் படியும் உள்ளடகத்தில் கோருகிறது
அதற்கான முதல் முக்கிய தேவை பாட்டாளிகளை திரட்டுவதே
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

31 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post